சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
SRMU தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் வருடாந்திர ஊக்கத்தொகை வழங்கும் விழா.. 5,000கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயன் பெற்றனர்.
இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களில் மிகப்பெரிய நிறுவனமான இந்திய ரயில்வே துறையில் ஏராளமான தொழிற்சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் என்ற SRMU தொழிற்சங்கமும் ஒன்று. SRMU தொழிற்சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் கண்ணையா தலைமையின் கீழ் SRMU மற்றும் AIRF என்ற இரண்டு தொழிற்சங்கங்கள் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் எஸ் ஆர் எம் யூ தொழிற்சங்க அகில இந்திய பொதுச் செயலாளர் கண்ணையா அறிவுறுத்தலின் பேரில் இந்த இரண்டு தொழிற்சங்கங்களில் உள்ள உறுப்பினர்களுக்கு ஆண்டுதோறும் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக பரிசு பொருட்களும் வருடாந்திர ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நடப்பாண்டிற்கான பரிசுப் பொருட்கள் மற்றும் வெகுமதி வழங்கும் நிகழ்ச்சி சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் தொழிற்சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் ஈஸ்வர்லால் மற்றும் உதவி பொதுச் செயலாளர் கோவிந்தன் முன்னிலை வகித்த நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம்.யு மற்றும் ஏ.ஐ.ஆர்.எப் தொழில் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், தொழிற்சங்கங்களின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து தங்களது ரயில்வே துறையில் தீர்க்கப்படாமல் உள்ள நீண்ட நாள் கோரிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், அகில இந்திய ரயில்வே துறையை தனியார் மையமாகும் மத்திய அரசின் முடிவை தகர்த்தெறிந்து விடவும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து உறுதி செய்யப்பட்ட பென்ஷன் திட்டத்தை பெற தொடர்ந்து போராடுவது என்றும் இந்த நிகழ்ச்சியில் முடிவு செய்யப்பட்டது.
இதனை அடுத்து, தொழிற்சங்கங்களின்உறுப்பினர்களுக்கு அவர்களது சிறந்த பங்களிப்பை பாராட்டும் விதமாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு பரிசு பொருட்களும் வருடாந்திர ஊக்கத்தக்கையும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
0 coment rios: