ஞாயிறு, 1 செப்டம்பர், 2024

OCT-2, காந்தி பிறந்தநாள் அன்று விசிக சார்பில் கள்ளக்குறிச்சியில் நடைபெறும் மது ஒழிப்புக்கு எதிரான பெண்கள் மாநாட்டில் லட்சக்கணக்கான பெண்களை பங்கேற்க செய்வது. சேலத்தில் விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு தகவல்.

சேலம். 
S.K. சுரேஷ் பாபு. 

அக்டோபர் 2, காந்தி பிறந்தநாள் அன்று கள்ளக்குறிச்சியில் நடைபெறும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான மாநாட்டில் 10 லட்சம் பெண்களை பங்கேற்க செய்வது.... சேலத்தில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியிலன் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட கூட்டத்தில் விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு தகவல். 


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அக்டோபர் இரண்டாம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெற உள்ள மது மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான மகளிர் மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சேலம் ஜான்சன் பேட்டை பகுதியில் உள்ள சுனில் மைத்ரா ஹாலில் நடைபெற்றது. கட்சியின் மூத்த நிர்வாகியும் சேலம் மண்டல ஒருங்கிணைப்பாளருமான நாவரசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு பிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 
இந்த ஆலோசனை கூட்டத்தில் சேலம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் அனைவரும் குறிப்பாக காஜா மைதீன், மொழி அரசு உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் அவர்கள் அத்தனை பேரும் காந்தி பிறந்த நாளன்று கள்ளக்குறிச்சியில் நடைபெறும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது மற்றும் போதை பொருட்கள் எதிரான மாநாடு முழுக்க முழுக்க பெண்களை பங்கேற்க வேண்டும் என்பதால் அவர்களை பாதுகாப்புடன் அழைத்துச் சென்று மீண்டும் அழைத்து வருவது தொடர்பாக, ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களும் தங்களால் என்ன செய்ய முடியும் என்பதனை வெளிப்படையாக தெளிவுபடுத்தினர். ஒரு சிலர் கூட்டம் எதற்காக நடத்தப்படுகிறது என்பதையே தெரியாமல் தங்களது அரசியல் அனுபவத்தை கூட்டத்தில் பேசியது சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது. 
என்றாலும் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த விசிக துணை பொது செயலாளர் வன்னியரசு நம்மிடையே கூறுகையில், கள்ளக்குறிச்சி சம்பவம் போன்று அதாவது விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களை போன்று அவர்களது குடும்பத்தினர் தற்பொழுது வரை கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் என்பதை வலியுறுத்தும் விதமாக தமிழகத்தில் உட்பட நாடு முழுவதும் இனி இது போன்ற ஒரு சம்பவம் நடைபெற கூடாது என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தனது பிறந்தநாள் அன்று தெரிவித்த அக்டோபர் இரண்டு அதாவது காந்தி பிறந்தநாள் அன்று தமிழகத்தையே உலுக்கிய அந்த சம்பவத்திற்கு தொடர்புடைய கள்ளக்குறிச்சியில் மது மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான பெண்கள் மாநாடு நடத்தப்படும் என்றும் அதுமட்டுமில்லாமல் நாடு முழுவதும் மதுவை தடை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் நடைபெறும் கள்ளக்குறிச்சி பெண்கள் மாநாடு சிறப்பாக அமைய வேண்டும் என்றும் இதற்காக சேலம் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் சார்பில் 25 லட்சம் பெண்களை கலந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி சேலத்தில் முதலில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றுள்ளது  என்றும், இனி தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் என்றும் வன்னியரசு தெரிவித்தார். 
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், செப்டம்பர் 1 இன்றை தமிழ்நாடு விடுதலை படை உடைய தோழர் தமிழரசன் உடைய நினைவு நாள். இந்த நினைவு நாளில் அவருக்கு மதத்தூவி விடுதலை சிறுத்தைகள் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணைச் செயலாளர் ஜங்ஷன் சிவா மரணம் அடைந்ததை அடுத்து 
குடும்ப  நல நிதியாக ஒரு லட்சம் ரூபாய் தொகையை
மாநகர மாவட்ட துணைச் செயலாளர் கி காயத்ரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு முன்னிலையில் குடும்பத்தாருக்கு வழங்கினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: