Science and Technology லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Science and Technology லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 15 மே, 2024

டூவீலர் மாதிரி மைலேஜ் தரும் மாருதி காரின் டெலிவரி துவங்கியது... விலை இவ்ளோதானா..?! ஷோரூம்களில் திருவிழா கூட்டம்...!

டூவீலர் மாதிரி மைலேஜ் தரும் மாருதி காரின் டெலிவரி துவங்கியது... விலை இவ்ளோதானா..?! ஷோரூம்களில் திருவிழா கூட்டம்...!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த 2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (2024 Maruti Suzuki Swift) கார், கடந்த சில நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது களமிறக்கப்பட்டிருப்பது, மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் 4வது தலைமுறை (Fourth Generation) மாடல் ஆகும்.

2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில், புத்தம் புதிய 1.2 லிட்டர் இஸட் சீரிஸ் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) கொடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 5,700 ஆர்பிஎம்மில் 80 பிஹெச்பி பவரையும், 4,300 ஆர்பிஎம்மில் 112 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் (Gear Box) ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன,  சிறப்பான மைலேஜ் (Mileage) வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது, 2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் மிக முக்கியமான சிறப்பம்சமாகும்.


மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மாடல்கள் ஒரு லிட்டருக்கு 24.80 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் மாடல்கள் ஒரு லிட்டருக்கு 25.75 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் கூறியுள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனம் கூடிய விரைவில் இதே இன்ஜினில் சிஎன்ஜி (CNG) ஆப்ஷனை வழங்கவுள்ளது. சிஎன்ஜி மூலம் இயங்கும்போது, மைலேஜ் இன்னும் அதிகமாக கிடைக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். 2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில், அதிநவீன வசதிகளுக்கும் (Features) பஞ்சமில்லை.

செவ்வாய், 21 மார்ச், 2023

வேலை வாய்ப்பு செய்தி | எல்லை பாதுகாப்பு படையில்1284 இடங்கள்

வேலை வாய்ப்பு செய்தி | எல்லை பாதுகாப்பு படையில்1284 இடங்கள்

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள எல்லை. பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் அந்தஸ் தில் காலியாக உள்ள 1284 டிரேட்ஸ்மேன் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Constable. மொத்த இடங்கள்- 1284 (ஆண்கள்- 1220, பெண்கள்-64),

ஆண்களுக்கான பணி ஒதுக்கீடு விவரம்: எ. Constable (Sweeper): 263 இடங்கள்

அ. Constable (Cobbler): 22 இடங்கள்

(பொது-17, ஒபிசி-3, எஸ்சி-2), ஆ. Constable (Tailor): 12 இடங்கள் (பொது-

11, ஒபிசி-1) இ. Constable ( Cook): 456 இடங்கள் (பொது- 194, பொருளாதார பிற்பட்டோர்- 44.

ஒபிசி-105, எஸ்சி-75, எஸ்டி-38) ஈ. Constable (Water Carrier): 280 இடங்கள் (பொது-115, பொருளாதார பிற்பட்டோர்-

29, ஒபிசி-64, எஸ்சி-48, எஸ்டி-24) உ.Constable (Washer man): 125 இடங்கள். (பொது-55, பொருளாதார பிற்பட்டோர்- 11, ஒபிசி-29, எஸ்சி-21, எஸ்டி-9)

ஊConstable (Barber): 57 இடங்கள் (பொது- 28, பொருளாதார பிற்பட்டோர் - 2, ஒபிசி- 14, எஸ்சி-8, எஸ்டி-5 ),

(பொது-110, பொருளாதார பிற்பட்டோர்- 25,ஒபிசி-63, எஸ்சி-43, எஸ்டி-22),

ஏ.Constable (Waiter): 5 இடங்கள் (பொது), பெண்களுக்கான பணி ஒதுக்கீடு விவரம்:

அ. Constable (Cobbler): 1 இடம் (பொது) ஆ. Constable (Tailor): 1 இடம் (பொது).

இ. Constable (Cook): 24 இடங்கள் (பொது- 19,ஒபிசி-3, எஸ்சி-2)

ஈ Constable (Water Carrier): 14 இடங்கள்

(பொது-13, ஒபிசி-1)

உConstable (Washer man); 7 இடங்கள் (பொது)

ஊConstable (Barber): 3 இடங்கள் (பொது) எ. Constable (Sweeper): 14 இடங்கள் (பொது-13, ஒபிசி-1).

வயது: 25.3.23 அன்று 18 முதல் 25க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித்தகுதி: மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதி மற்றும் சம்பந்தப்பட்ட டிரேடில் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

உடல்தகுதி: ஆண்கள்: உயரம்- 165 செ.மீ., மார்பளவு- சாதாரண நிலையில் 75 செ.மீ.யும், விரிவடைந்த நிலையில் 80 செ.மீயும் இருக்க வேண்டும். பெண்கள்: உயரம் 155 செ.மீ., ( பழங்குடியின ஆண்கள் 160 செ.மீ., உயரமும். பெண்கள் 148 செ.மீ., உயரமும் இருந்தால் போதும்).

மாதிரி ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் தேர்வு முறை உள்ளிட்ட விவரங்களுக்கு https://rectt.bsf.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்,

வியாழன், 15 டிசம்பர், 2022

பரிதாப நிலையில் Twitter பணியாளர்கள்? இந்திய அலுவலகத்ததின் நிலைமை எப்படி இருக்கிறது?

பரிதாப நிலையில் Twitter பணியாளர்கள்? இந்திய அலுவலகத்ததின் நிலைமை எப்படி இருக்கிறது?

இந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் எலோன் மஸ்க் நிறுவனத்தை கையகப்படுத்தியதில் இருந்து உலகளவில் ட்விட்டர் ஊழியர்கள் கடினமான சூழலை எதிர்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் உள்ள டுவிட்டரின் நிலை குறித்து இங்குக் காணலாம். கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றினார். அதன் பிறகு, பல்வேறு சர்ச்சைகள், மாற்றங்கள் ஏற்பட்டன. உலகளவில் பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட பாதி பணியாளர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டனர்.  இந்தியாவிலும் டெல்லி, பெங்களூரு மற்றும் மும்பை அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்களில் பாதி பேரை மஸ்க் நீக்கினார் . இந்தியாவில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கையை நிறுவனம் வெளியிடவில்லை என்றாலும், 250 ட்விட்டர் இந்தியா ஊழியர்களில் சுமார் 170 ஊழியர்கள் (பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மற்றும் தானாக முன்வந்து ராஜினாமா செய்தவர்கள் உட்பட) பணியில் இல்லை என்று தெரிகிறது. மீதமுள்ள 80 பணியாளர்கள் (தோராயமாக) கடினமான சூழலை எதிர்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்க அலுவலகங்களில் கொண்டு வரப்பட்ட மஸ்கின் விதிகள் அப்படியே இந்திய அலுவலகங்களிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், சான் பிரான்சிஸ்கோ அலுவலகத்தைப் போல இந்தியாவின் நிலைமை மோசமாக இல்லை என்றும் கூறப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் ஒரு திங்கட்கிழமை விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஈடாக வேலை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பணிகளுக்கு இடையே வழங்கப்படும் இலவச சிற்றுண்டி திட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ட்விட்டர் இந்தியா ஊழியர்களுக்கு இனி இலவச சிற்றுண்டிகள் இல்லை. அமெரிக்காவில் உள்ள நிறுவனத்தின் தலைமையகத்தில் இதே போன்ற விதி பின்பற்றப்படுகிறது .  எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தியாவில் உள்ள அனைத்து ஊழியர்களையும் அலுவலகத்திற்குத் திரும்புமாறு எலான்மஸக் கேட்டுக் கொண்டுள்ளார். வேலை கலாச்சாரத்தில் மஸ்க் கொண்டு வந்துள்ள மற்றொரு மாற்றம் தினசரி வேலை நேரத்தை மாற்றி அமைப்பதாகும். இருப்பினும், ட்விட்டர் தலைமையகத்தில் இருப்பது போல் இந்தியாவில் பணிச்சூழல்கள் மன அழுத்தமாக இல்லை. 

செவ்வாய், 13 டிசம்பர், 2022

எச்சரிக்கை! OTP இல்லாமலே வங்கியில் இருந்து ரூ.50 லட்சம் மோசடி!!

எச்சரிக்கை! OTP இல்லாமலே வங்கியில் இருந்து ரூ.50 லட்சம் மோசடி!!

உங்கள் போனிற்கு வரும் OTPகளை யாருக்கும் பகிர வேண்டாம் என்ற எச்சரிக்கை அடிக்கடி கேட்டிருப்போம். போன் கால்/எஸ்எம்எஸ்/மின்னஞ்சல் மூலம் OTP கேட்டு மேற்கொள்ளப்படும் ஆன்லைன் மோசடிகள் குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்த, சைபர் கிரைம் அதிகாரிகளால் இவ்வாறு எச்சரிக்கைப்பட்டு வருகிறது. ஆனால், டெல்லியில் தற்போது ஓடிபி இல்லாமலே நூதன முறையில் வங்கி கணக்கில் இருந்த பணத்தை மோசடியாளர்கள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் பாதுகாப்பு சேவை மையத்தின் இயக்குநர் ஒருவருக்கு தான் இப்படியான சம்பம் நடந்துள்ளது. அவருடைய போனிற்கு யாரோ ஒருவர் கால் செய்துள்ளார். ஆனால், போனை எடுத்தால் எதிர்முனையில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இவ்வாறு சில மிஸ்டுகால்கள் வந்துள்ளன. பின்னர் சிறிது நேரம் கழித்து, அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து 12 லட்சம், 10 லட்சம் என சுமார் 50 லட்சம் ரூபாய் 4 பேரது கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மெசேஜ் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த நிறுவன உரிமையாளர், உடனடியாக சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் அளித்தார். இதுதொடர்பாக விசாரணை வேட்டையில் இறங்கிய போலீசார், முதற்கட்டமாக இவருடைய பணம் டெபாசிட் ஆன அந்த 4 பேரை பிடித்துவிட்டனர். அவர்களிடம் விசாரணை செய்தததில், மோசடி கும்பல் இந்த நான்கு பேரை பகடை காயாக பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது. மேலும், அந்த 4 பேருக்கும் குறிப்பிட்ட பணத்தை கமிஷனாக வழங்குவதாகவும் மோசடியாளர்கள் கூறியுள்ளனர்.
அடேங்கப்பா.. 200MP கேமராவா.. கலக்கலாக வரும் Redmi Note 12 Pro Plus 5G! அறிமுக தேதி அறிவிப்பு!!

அடேங்கப்பா.. 200MP கேமராவா.. கலக்கலாக வரும் Redmi Note 12 Pro Plus 5G! அறிமுக தேதி அறிவிப்பு!!

ரெட்மி பிரியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நோட் 12 சீரிஸ் குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ரெட்மி நோட் 12 சீரிஸ் ஜனவரி முதல் வாரத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அறிமுகம் விழா குறித்த அழைப்பை ரெட்மி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் இந்தியாவில் அறிமுகமாகும். அத்துடன் நோட் 12 சீரிஸில் உள்ள இன்னும் சில ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Redmi Note 12 Pro Plus ஆனது 200-மெகாபிக்சலுடன் கூடிய பிரைமரி கேமரா கொண்டுள்ளது. இது கிட்டத்தட்ட சீனாவில் அறிமுகமான மாடலைப் போலவே இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, இதற்கு முன்பு சீனாவில் Redmi Note 12 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டுத, தற்போது விற்பனைக்கும் கிடைக்கிறது. அந்த ஸ்மார்ட்போனிலும் 200 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, இன்னும் சில தோற்றங்கள் ஒத்துபோகும் வகையில் உள்ளன. ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன என்பது குறித்த தகவலை ரெட்மி நிறுவனம் வெளியிடவில்லை. இருப்பினும் சீனாவில் அறிமுகமான ஸ்மார்ட்போனிலுள்ள அம்சங்கள் தான் இதிலும் எதிர்பார்க்கப்படுகிறது.