வியாழன், 13 ஜூன், 2024

ஈரோடு அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள் திடீர் தர்ணா

ஈரோடு அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள் திடீர் தர்ணா

ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் மூலம் உடலை பரிசோதனை செய்து உடலில் உள்ள குறைபாடுக்குகேற்ப சதவீத அடிப்படையில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்று திறனாளிகளுக்கான அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும்.
இந்நிலையில், இன்று (ஜூன்.13) வழக்கம் போல நடைபெற்ற மருத்துவ முகாமிற்கு தாளவாடி, கோபி, பவானி உள்ளிட்ட பகுதியில் இருந்து வந்த மாற்றுத்திறனாளிகளுக்கு முறையாக மருத்துவ பரிசோதனை செய்யவில்லை எனவும், கடந்த 3 வாரமாக சான்றிதழ் கேட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிப்படுவதாகவும் கூறி, அரசு மருத்துவமனை வளாகம் முன்பு ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, மலைப்பகுதியில் இருந்து வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து முறையாக சான்றிதழும் வழங்குவதில்லை. கடந்த 3 வாரமாக எங்களுக்கு முறையாக சான்றிதழ் வழங்காமல் எலும்பு முறிவு மருத்துவர்கள் அலங்கரிக்கிறார்கள். சத்தியமங்கலம், கோபியில் இருந்து வரும் மாற்றுத்திறனாளிகளை இங்கு சான்றிதழ் பெற வரக்கூடாது.

அந்தந்த பகுதியிலேயே சென்று வாங்க வேண்டும் என்று அலைக்கடிக்கிறார்கள். தகுதி உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தகுதியில்லை என்று கூறி சான்றிதழ் வழங்குகிறார்கள். முகாமிற்கு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகளும் வருவதில்லை. மேலும், இதுகுறித்து சுகாதார இணை இயக்குனரிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் மாவட்ட தலைவர் துரைராஜ் குற்றம் சாட்டினார்.

இதன் பின்னர், அரசு தலைமை மருத்துவமனை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததையடுத்து, மாற்றுத்திறனாளிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் முறையாக நடத்தப்படுவதில்லை என புகார் கூறி மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 
ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் இல்லம் தோறும் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் இல்லம் தோறும் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை

இதுகுறித்து ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ஜெ.திருவாசகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த, திமுக இளைஞர் அணியின் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் 'இல்லம் தோறும் இளைஞர் அணி' உறுப்பினர் சேர்க்கை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பான முறையில் நடந்து வருகிறது.

அதேபோல், தந்தை பெரியாரின் பகுத்தறிவு மண்ணான ஈரோடு மாவட்டத்தில், திமுக ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சு.முத்துசாமி ஆலோசனையில், திமுக மாநில இளைஞரணி துணை செயலாளரும், ஈரோடு எம்பியுமான கே.இ.பிரகாஷ், மண்டல பொறுப்பாளர் பி.எஸ்.சீனிவாசன் ஆகியோரது மேற்பார்வையில், ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் மாவட்ட, மாநகர பகுதிகளில் உள்ள வட்ட கழகங்கள் மற்றும் ஒன்றிய பேரூர்களில் உள்ள கிளை கழகங்களில் பாக வாரியாக இல்லம் தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை வரும் 16ம் தேதி முதல் துவங்கப்பட உள்ளது.

அந்தந்த, பகுதி செயலாளர்கள், ஒன்றிய பேரூர் செயலாளர்கள் தலைமையில் கிளை கழக செயலாளர்கள் மற்றும் பாக முகவர்கள் முன்னிலையில், பாக இளைஞரணி பொறுப்பாளர்களை கொண்டு பொறுப்பேற்றுள்ள மாவட்ட மாநகர துணை அமைப்பாளர்கள் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் இளைஞரணியினரை ஒருங்கிணைத்து உறுப்பினர் சேர்க்கையை நடத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறப்பட்டுள்ளது.

புதன், 12 ஜூன், 2024

கோபி அருகே ஆம்னி காரில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது: 600 கிலோ பறிமுதல்

கோபி அருகே ஆம்னி காரில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது: 600 கிலோ பறிமுதல்

ஈரோடு மாவட்டம் சிறுவலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மல்லிபாளையம் - நம்பியூர் ரோடு, அயலூர் பகுதியில் ரேஷன் அரிசியை கடத்தி செல்வதாக ஈரோடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . அதன்பேரில், காவல் ஆய்வாளர் ரமேஷ்கண்ணன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் மூர்த்தி உள்ளிட்ட போலீசார் அயலூர் பேருந்து நிறுத்தம் அருகில் வாகன தணிக்கை செய்த போது அந்த வழியாக வந்த ஆம்னி கார் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது, 12 மூட்டைகளில் 600 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. விசாரணையில், ரேஷன் அரிசியை கடத்தி வந்தவர் கோபி கரட்டுபாளையம கோரமடையைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (வயது 39) என்பதும், இவர் பொதுமக்களிடமிருந்து ரேசன் அரிசியை வாங்கி நம்பியூர் மற்றும் குன்னத்தூர் பகுதியில் தங்கி வேலை செய்யும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ய கடத்தி வந்ததும் தெரியவந்தது .

இதனையடுத்து, நவநீதகிருஷ்ணனை கைது செய்த போலீசார், 12 மூட்டைகளில் சுமார் 600 கிலோ ரேசன் அரிசியும் ரேசன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய ஆம்னி கார் வாகனத்தையும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். 
ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் நலத்திட்ட உதவிகள்

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் நலத்திட்ட உதவிகள்

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான சு.முத்துசாமி அறிவிப்பிற்கிணங்க, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 101வது பிறந்தநாள் மற்றும் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில், ஈரோடு சோலாரில் உள்ள இளைஞர் அணி கொடி கம்பத்தில் மாவட்ட துணை அமைப்பாளர் ச.சதீஷ்குமார் தலைமையில், மாநகரச் செயலாளர் மு.சுப்பிரமணியம், கொல்லம்பாளையம் பகுதி திமுக செயலாளர் க.லட்சுமணகுமார், மாநகர அமைப்பாளர் கே.டி.சேந்தப்புகழன் ஆகியோர் முன்னிலையில் 60வது வட்டத் திமுக செயலாளர் பாலமுகுந்தன் கொடியேற்றினார்.

தொடர்ந்து, சோலார் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அட்சயம் அறக்கட்டளை மறுவாழ்வு இல்லத்தில் மாவட்ட அமைப்பாளர் ஜெ.திருவாசகம் தலைமையில், மாவட்ட துணை அமைப்பாளர்கள் கி.ரகுராம், எஸ்.பாலசுப்பிரமணியம், ச.சதீஷ்குமார், தெ.ராகவேந்திரன், எஸ்.எஸ்.விஜயராஜன், இரா.நித்தின் ஆகியோர் முன்னிலையில் ரூபாய் 25 ஆயிரம் மதிப்புள்ள அரிசி, மாளிகை பொருள்கள் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர்கள் சு குணசேகரன், செங்கோட்டையன், ராஜா, மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் செ.ரமேஷ், எஸ். சசிகுமார், அ. பார்த்திபன், பெ.சீனிவாசன், வி.நவீன்குமார், ஏ.அன்பரசன் உள்ளிட்ட மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, மாநகர பகுதி திமுக நிர்வாகிகள் இளைஞர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ஜெ.திருவாசகம் செய்திருந்தார்.
ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜூன்.14) மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜூன்.14) மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில், நாளை (ஜூன்.14) வெள்ளிக்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்கண்ட இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகிரி துணை மின் நிலையம்:- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- சிவகிரி, வேட்டுவபாளையம், காகம், கொந்தளம், மின்னப்பாளையம், பழமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம் கோட்டை, விலாங்காட் டுவலசு, எல்லக்கடை, குலவிளக்கு, காரக்காட்டு வலசு, கோவில் பாளையம், ஓலப்பாளையம், ஆயப்பரப்பு, விளக்கேத்தி, குட்டப்பாளையம், அம்மன் கோவில், தொப்பபாளையம், பெரும்பரப்பு, நம்மகவுண்டம்பாளையம், வாழைத்தோட்டம், அஞ்சூர், சிலுவம்பாளையம், கருக்கம்பாளையம், குருக்குவலசு, வள்ளியம்பாளையம், முத்தையன்வலசு, வள்ளிபுரம், இச்சிப்பாளையம் மற்றும் கரட்டுப்புதூர்.

கஸ்பாபேட்டை துணை மின் நிலையம்:- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- கஸ்பாபேட்டை. ஜீவா நகர், கள்ளக்கவுண்டன்பாளையம், மேட்டுப்பாளையம், சீரங்கம்பாளையம், அசோகபுரம், கொலாங்காட்டுவலசு, முல்லை நகர், காகத்தான்வலசு, கிளியம்பட்டி, நீதிபுரம், ஓடக்காட்டு வலசு, நவநாய்க்கன்பாளையம் மற்றும் சின்னியகவுண்டன் வலசு.

கஸ்பாபேட்டை துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் எரப்பம்பாளையம் மின்பாதை:- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- பொன்கைலாசு வலசு, வேமாண்டம்பாளையம், முருங்கம்பாளையம், சங்கரன்காடு, குடுமியாம்பாளையம், கரும்புளியாம்பாளையம், சீனிவாசபுரம், வெள்ளோட்டம்பரப்பு, நடுப்பாளையம், வடுகனூர், அரிக்காரன்காட்டு புதூர், மலையம்பாளையம், வட்டக்கல்வலசு மற்றும் கருமாண்டாம்பாளையம்.

சூரியம்பாளையம் துணை மின் நிலையம்:- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- சித்தோடு, ராயபாளையம், சுண்ணாம்பு ஓடை, அமராவதி நகர், தண்ணீர்பந்தல்பாளையம், ஆர் என் புதூர், கோணவாய்க்கால், பெருமாள்மலை, ஐஆர்டிடி, குமிளம்பரப்பு, செல்லப்பம்பாளையம், மாமரத்துப்பாளையம், தயிர்பாளையம், கொங்கம்பாளையம், நரிப்பள்ளம், எல்லப்பாளையம், சேமூர், சொட்டையம்பாளையம், பி.பெ. அக்ரஹாரம், மரவபாளையம், சி.எம்.நகர், கனி ராவுத்தர் குளம், காவேரி நகர், பாலாஜி நகர், எஸ் எஸ்டி நகர், வேலன் நகர், ஊத்துக்காடு, பெரியபுலியூர்(பகுதி) மற்றும் சேவாகவுண்டனூர்.

மேட்டுக்கடை துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் புங்கம்பாடி மின்பாதை:- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- நசியனூர்-மேட்டுக்கடை சாலை, மேட்டுக்கடை, நத்தக்காட்டுபாளையம், புங்கம்பாடி, ரோஜா நகர், சாணார்பாளையம், புத்தூர், புதுப்பாளையம், ஆரவிளக்கு மற்றும் மேட்டுப்பாளையம்.

காஞ்சிக்கோவில் காந்தி நகர் துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் அய்யன்வலசு மின்பாதை:-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- காந்தி நகர், கருக்கன் காடு, காஞ்சிகோவில், லண்டன் மிசின் வீதி, பள்ளப்பாளையம், அரியான்காடு, பாலசுந்தராபுரம், சின்னியம்பாளையம், கரிச்சிகவுண்டன் பாளையம், அய்யன்வலசு, தங்கமேடு மற்றும் செங்காலிபாளையம்.

கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் பாலபாளையம் மின் பாதை:- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- வெங்கடேஸ்வரா நகர், பாவாக்கவுண்டணூர், மாரப்பம்பாளையம்பிரிவு, இரங்கன்காட்டூர், பனங்காட்டூர், பாலபாளையம், சூரியம்பாளையம் மற்றும் கூத்தாண்டிபாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் வழக்குறைஞர்களின் பாதுகாப்பை வலியுறுத்திட போராட்டம்..SDCBA வலியுறுத்தல்...

தமிழகம் முழுவதும் வழக்குறைஞர்களின் பாதுகாப்பை வலியுறுத்திட போராட்டம்..SDCBA வலியுறுத்தல்...

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

தமிழ்நாடு & புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் அவர்களுக்கு ! தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. வழக்கறிஞர்கள் பாதுகாப்பு மசோதாவும் இது வரை நிறைவேற்றப்படவில்லை.ஆகவே வழக்கறிஞர்கள் பாதுகாப்புக்காக வேண்டி தமிழக அரசின் கவன ஈர்ப்புக்காக வேண்டி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும், சேலம் மாநகர காவல் ஆனையாளர் அலுவலகத்தையும்,  சேலம் காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தையும்  முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திட வேண்டுகிறோம். சேலத்தில் உள்ள சேலம் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் ஒருச்கினைந்தோ,  தனியாகவோ போராட்டத்தை முன்னெடுக்க தயாராக உள்ளோம் என சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகத்தின் சார்பாக, அதன் தலைவர் ஜெ.மு. இமயவரம்பன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர்களுக்கு சேலம் பச்சப்பட்டி பழனிச்சாமி வாழ்த்து...

கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர்களுக்கு சேலம் பச்சப்பட்டி பழனிச்சாமி வாழ்த்து...

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் அவர்களுக்கு சேலம் பச்சப்பட்டி பழனிச்சாமி வாழ்த்து....

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுக்குழு கூட்டம் கடந்த 11ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. 
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் நடைபெற்ற இந்த மாநில பொதுக்குழு கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மதிய இணை அமைச்சருமான திரு கே.வி. தங்கபாலு உட்பட முன்னாள் தலைவர்கள் உள்ளிட்டோர்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். 
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்களும் பல்வேறு முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன,
கூட்டத்தின் முடிவில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய் வசந்த் MP அவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொது குழு உறுப்பினர் சேலம் பச்சப்பட்டி பழனிச்சாமி தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். 
இந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள்,  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் சேகர், 59வது டிவிஷன் தலைவர் சீனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.