வியாழன், 13 ஜூன், 2024

சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு புதிய PRO நியமனம்.

சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு புதிய PRO நியமனம்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க பொதுக்குழுவில் SDCBA முன்னாள் துனைத்தலைவர். வழக்கறிஞர் திருநாவுக்கரசு சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க PRO வாக ஏக மணதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். என்பதை அறிவிப்பதிலே பெரு மகிழ்ச்சி கொள்வதாக SDCBA நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஈரோட்டில் ஷேர் ஆட்டோவில் தொங்கிய படி சாகச பயணம்: தடுக்க தேவை நடவடிக்கை

ஈரோட்டில் ஷேர் ஆட்டோவில் தொங்கிய படி சாகச பயணம்: தடுக்க தேவை நடவடிக்கை

பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வதை பார்த்திருப்போம். ஆனால் ஷேர் ஆட்டோவில் பொதுமக்கள் தொங்கியபடி பயணம் செய்த சம்பவம் தற்போது ஈரோட்டில் அரங்கேறி உள்ளது 
ஈரோட்டில் ஷேர் ஆட்டோவில் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணிக்கும் பொது மக்களின் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் இருந்து திண்டல் வரை செல்லும் ஷேர் ஆட்டோ ஒன்றில் பொதுமக்கள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர்.
 
இது சம்பந்தமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது போன்ற ஆபத்தான முறையில் பயணிகளை ஏற்றிச்செல்லும் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்து போலீசாருக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
ஈரோட்டில் நாளை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ஈரோட்டில் நாளை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் ஈரோடு மாவட்ட பொறுப்பாளர் பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- 

ஈரோடு மாவட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் 14ம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு ஈரோடு வீரப்பன்சத்திரம் ஜனனி திருமண மண்டபத்தில் நடக்கிறது. தலைவர் விஜய் உத்தரவின் பேரில், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் கூட்டத்தில் கலந்து கொண்டு நிர்வாகிகள் மத்தியில் பேசுகிறார்.

முன்னதாக காலை 8 மணிக்கு ஈரோடு காவிரி ரோடு சகன் சாயுபு வீதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து பொதுமக்கள் 200 பேருக்கு வேட்டி-சேலை. பள்ளிக்கூட சீருடை, நோட்டு- புத்தகம், எழுது பொருட்கள் வழங்குகிறார்.

இதைத்தொடர்ந்து, ஈரோடு சூளை பகுதியில் கட்சி பெயர் பலகையை திறந்து வைத்து பொதுமக்கள் 200 பேருக்கு நல உதவிகள் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட பொறுப்பாளர் பாலாஜி தலைமை தாங்குகிறார்.

எனவே ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு. ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம், பவானிசாகர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஈரோடு மாநகரத்தை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.