வெள்ளி, 14 ஜூன், 2024

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு குறித்து தளபதி விஜய் அறிவிப்பார்: புஸ்ஸி ஆனந்த்

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு குறித்து தளபதி விஜய் அறிவிப்பார்: புஸ்ஸி ஆனந்த்

தமிழக வெற்றிக் கழகத்தின் ஈரோடு மாவட்ட அலுவலகத்தின் திறப்பு விழா கருங்கல்பாளையம் அருகில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. அக்கட்சியின் ஈரோடு மாவட்ட பொறுப்பாளர் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்கள் பேக் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனையடுத்து, வீரப்பன்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய புஸ்ஸி ஆனந்த், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும், மிக சிறந்த செயல்பாடுகள் கொண்ட மாவட்டம் ஈரோடு மாவட்டம் என்றும், தமிழக வெற்றிக் கழகத்தின் 3 அலுவலகத்தை ஈரோட்டில் திறந்து வைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.

மேலும், நான் ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது கூட, இதுபோன்ற ஒரு கூட்டத்தை கூட்டுவதற்கு பல்வேறு பிரச்சனைகளுடன் சேர்த்து குறைந்தது 15 நாட்களாவது ஆகும் என்றும், ஆனால் இன்று தளபதி என்ற ஒற்றை பெயருக்காக இளைஞர்கள் உட்பட அனைத்து மக்களும் திரண்டு வந்துள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய புஸ்ஸி ஆனந்த், தலைவர் விஜய்யின் அறிவுரைப்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் கட்டமைப்பு பணிகள் செய்து வருவதாகவும், விஜய் எப்போது மக்கள் சந்திப்பார் குறித்து முறையாக அறிவிப்பு வரும் என்றும் கூறினார்.

மேலும், தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு குறித்து தளபதி அறிவிப்பார் என்றும், மாநாட்டு நடைபெறுவதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்த அவர், கடந்த 30ஆண்டுகளாக மக்கள் சேவை பணி செய்து வருவதால், வரும் 2026ம் ஆண்டு தேர்தலில் சேவைக்கு உண்டான பலன் எங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும் என கூறினார்.
ஈரோடு மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பான உயர்மட்ட குழுக் கூட்டம்

ஈரோடு மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பான உயர்மட்ட குழுக் கூட்டம்

ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இந்த கூட்டமானது, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வனத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், பள்ளிக்கல்வித்துறை மற்றும் காவல்துறைகளின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக துறை வாரியாக மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், கூட்டுறவுத்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்மை உழவர் நலத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டார். திட்டப்பணிகளை விரைந்து முடித்திடவும், நலத்திட்ட உதவிகளை தங்குதடையின்றி பொதுமக்களுக்கு சென்றயடைவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மனிஷ், மாவட்ட வன அலுவலர் குமிலி வெங்கட அப்பால நாயுடு (ஈரோடு), துணை இயக்குநர்கள் குலால் யோகேஷ் விலாஷ் (சத்தியமங்கலம் வன கோட்டம்), சுதாகர் (ஆசனூர்), மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, இணை இயக்குநர் (நலப்பணிகள்) அம்பிகா, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) சோமசுந்தரம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் செல்வராஜ் (வளர்ச்சி), பிரேமலதா (நிலம்) உட்பட அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நீட் குளறுபடிகள் சிபிஐ விசாரணை வேண்டும்: ஐஎம்ஏ தேசிய தலைவர் அசோகன்

நீட் குளறுபடிகள் சிபிஐ விசாரணை வேண்டும்: ஐஎம்ஏ தேசிய தலைவர் அசோகன்

இந்திய மருத்துவ சங்கத்தின் ஈரோடு கிளையின் சார்பில், ஒலி மாசுவினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பேரணி ஈரோட்டில் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஒலி மாசுவினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பதாகைகளை ஏந்தி பேரணியை நடத்தினர்.

காலிங்கராயன் இல்லத்திலிருந்து தொடங்கிய இந்த பேரணியை, இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் அசோகன் தொடங்கிய வைத்தார். ஈரோட்டின் முக்கிய சாலைகள் வழியாக சென்றிருந்த பேரணி இந்திய மருத்துவ சங்க கட்டிடத்தில் முடிவடைந்தது.

முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்த இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் அசோகன் கூறுகையில், நீட் குளறுபடிகள் இதுவரை நடைபெறாத முறையில் நடைபெற்றுள்ளதால் சிபிஐ விசாரணை வேண்டும். குளறுபடிக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

லட்சக்கணக்கான மாணவர்களுக்கு நீதி வேண்டும். உச்சநீதிமன்றம் சரியான முறையில் நீதி வழங்கும் என எதிர்பார்க்கிறோம். 1653 மாணவர்களுக்கு மட்டும் மீண்டும் நீட் தேர்வு வைப்பதால் தீர்வு கிடைக்காது. அது தீர்வே கிடையாது.

மருத்துவர்களுக்கும் , நோயாளிகளுக்கும் இடையேயான உறவு தகர்ந்து விட்டது. மருத்துவர்கள் சரியான முறையில் நடப்பதற்கான வழிமுறைகளை இந்திய மருத்துவ சங்கம் எடுத்து வருகிறது என்றார்.

வியாழன், 13 ஜூன், 2024

தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்களுக்கு பிறந்தநாள் விழா....

தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்களுக்கு பிறந்தநாள் விழா....

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி கயல்விழி செல்வராஜ் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி, ஆரிய வைசிய முன்னேற்ற பேரவையின் தலைவரும், தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் நிறுவனமான Dr. நாகா. அரவிந்தன் தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜூன்.15) மின்தடை ஏற்படும் இடங்கள்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஜூன்.15) மின்தடை ஏற்படும் இடங்கள்

ஈரோடு மாவட்டத்தில், நாளை (ஜூன்.15) சனிக்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாளை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- வீரப்பன்சத்திரம், இடையன்காட்டுவலசு, முனிசிபல் காலனி. ஆசிரியர் காலனி, பெருந்துறை ரோடு, சம்பத் நகர், வெட்டுகாட்டுவலசு, மாணிக்கம்பாளையம், பாண்டியன் நகர், சக்தி நகர், வக்கீல்தோட்டம், பெரியவலசு, பாப்பாத்திக்காடு, பாரதிதாசன் வீதி, முனியப்பன்கோவில் வீதி, நாராயணவலர். டவர்லைன் காலனி, திருமால் நகர், கருங்கல்பாளையம், கே.என்.கே.ரோடு, மூலப்பட்டறை. சத்தி ரோடு மற்றும் நேதாஜி ரோடு.

பவானி ஊராட்சிக்கோட்டை துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- பவானி நகர் முழுவதும், 3 ரோடு, ஊராட்சிக்கோட்டை, ஜீவா நகர், செங்காடு, குருப்ப நாயக்கன்பாளையம், நடராஜபுரம், ராணா நகர், ஆண்டிகுளம், என்.ஜி.ஜி.ஓ. காலனி, கூடுதுறை, வி.மேட்டுப்பாளையம், சன்னியாசிபட்டி, வரத நல் லூர், சங்கரகவுண்டன் பாளையம், மொண்டிபாளையம், மைலம்பாடி, ஆண்டி பாளையம், சக்தி நகர், மோளகவுண்டன் புதூர், செலம்பகவுண்டன் பாளையம் மற்றும் வாய்க்கால்பாளையம்.

கோபி நல்லகவுண்டன் பாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- ல.கள்ளிப்பட்டி பிரிவு, தமிழ் நகர், மின்நகர், வாய்க்கால் ரோடு, செல்லப்பா நகர், கிருஷ்ணா நகர், திருமாநகர், வேலு மணி நகர், கலைஞர் நகர், அய்யப்பா நகர், பெரியார் திடல், அரசு ஆஸ்பத்திரி வீதி, நல்ல கவுண்டன்பாளையம், தொட்டிபாளையம், கலிங்கியம், அவ்வையார்பாளையம், வெள்ளாங்காட்டுபாளையம், மூல வாய்க்கால், அயலூர், செம்மாண்டம்பாளையம், பாலப்பாளையம், வெள்ளைகவுண்டன் புதூர், உருமம்பாளையம், மற்றும் கரட்டடிபாளையம்.

நம்பியூர் மற்றும் புதுசூரிபாளையம், மலையப்பாளையம் துணை மின் நிலையங்கள் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- மொட்டணம், குட்டிபாளையம், பழனி கவுண்டன் பாளையம், மேட்டுக்கடை, பிலியம்பாளையம், கெடாரை, கிச்சிபாளையம், திட்டமலை, நம்பியூர் கோவை ரோடு, ஜீவா ரோடு யூனியன் அலுவலகம், நம்பியூர் நகரப் பகுதி, கொன்னமடை, வெங்கிட்டுபாளையம், காவிலிபாளையம், குடிநீர் வினியோகிக்கும் பகுதிகள், நாச்சிபாளையம் குடிநீர் விநியோகிக்கும் பகுதிகள், கோசணம், ஆலாம்பாளையம், தீத்தாம்பாளையம், செல்லிபாளையம், மூணாம் பள்ளி, கே மேட்டுப்பாளையம், சொட்ட மேடு, காமராஜர் நகர், பொலவபாளையம், பழைய அய்யம்பாளையம், நாச்சிபாளையம் மற்றும் ஓனான் குட்டை, எலத்தூர், கட செல்லிபாளையம், கள்ளாங்காட்டு பாளையம், மலையப்பாளையம், ஒழலக்கோயில், சின்ன செட்டியாம் பாளையம் மற்றும் பெரியசெட்டியாம்பாளையம்.

கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் கொளத்துப்பாளையம் மின்பாதை (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- பாண்டியம்பாளையம், குஞ்சரமடை, கொளத்துபாளையம் மற்றும் புதுகாட்டுபாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இடமாற்றம்

ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இடமாற்றம்

ஈரோடு மாநகராட்சி ஆணையாளராக சிவகிருஷ்ணமூர்த்தி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 21ம் தேதி முதல் பணியாற்றி வந்தார். இந்நிலையில், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தியை, சென்னை பெருநகர மாநகராட்சி துணை ஆணையாளராக பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் முதன்மை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். சிவகிருஷ்ணமூர்த்திக்கு மாற்றாக ஈரோடு மாநகராட்சிக்கு புதிய ஆணையாளர் யாரும் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் அழகாபுரம் தனியார் பள்ளி மாணவிகளின் கையேட்டில் ஜாதிகளின் பெயர் பட்டியல்.

சேலம் அழகாபுரம் தனியார் பள்ளி மாணவிகளின் கையேட்டில் ஜாதிகளின் பெயர் பட்டியல்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் - ஹோலி ஏஞ்சல் மேல்நிலை பள்ளியில் - அழகாபுரம் தீண்டாமை நோக்கோடு மாணவர்களின் கையேடு

சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் ஆகியோரின் கவனத்திற்கும்- உரிய நடவடிக்கை வலியுறுத்தும் புகார் மனு :
இது குறித்து தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழுவின் முதன்மை ஒருங்கிணைப்பாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணி அமைப்பின் மாநில துணை செயலாளர் சரசுராம் ரவி தெரிவிக்கையில், 

சேலம் மாநகர்- அழகாபுரம் பகுதியில் இயங்கி வரும் ஹலி ஏஞ்சல் மேல் நிலை பள்ளியில் படிக்கும் பல நூறு மாணவிகளுக்கு வருடம் தோறும் வழங்கபடும் நாள் குறிப்பு  கையேடுகளில் மாணவிகளின் சாதி குறித்து ( SC/ ST/ SCA/ BC/ MBC/ OC ) பதிவு செய்ய வலியுறுத்தி உள்ளது பள்ளி நிர்வாகம்.
இந்த குறிப்பு மாணவிகள் மத்தியில் அல்லது பொது வெளியில் இந்த மாணவி இந்த சாதியை சார்ந்தவர் என்று வெளிபடையாக தெரிய வரும் போது ஒரு வித தீண்டாமை உணர்வு மேலோங்க கூடும்.
இந்த நாள்  குறிப்பு  கையேட்டை பார்க்கும் யாவருக்கும் இந்த மாணவி இந்த சாதியை சார்ந்தவர் என்று வெளிபடையாக தெரிய வரும்.
இதனால் மாணவர்களிடையே தாழ்வு மனபான்மை உருவாக கூடும்.
தமிழக அரசு 
 பள்ளி மாற்று சான்றிதழ்களிலே ( Transfer Certificate ) சாதி என்ற பகுதியில் As per Community Certificate என்று குறிப்பிட உத்தரவு வழங்கி உள்ளதை நினைவு கொள்ள வேண்டும். 
ஆகவே சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு சம்மந்தபட்ட கல்வி நிறுவனத்தின் நிர்வாகத்தை அழைத்து இந்த சாதி குறிப்பு பகுதியை மாணவர்களின் கையேடு பிரதிகளில் இருந்து நீக்க வலியுறுத்தி இந்த புகார் மனுவை மாணவிகளின் பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று சமூக  நீதி காண வலியுறுத்துகின்றோம்.
தவறும் பட்சத்தில் இந்த அவல நிலை அகற்ற பள்ளி வளாகம் முன் கன்டன ஈர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்துள்ளோம் என்பதை  மிக கனத்த வருத்தத்துடன் அறிவிக்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.