S.K. சுரேஷ்பாபு.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவ உயிரிழப்பை கண்டித்து சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்திலிருந்து அதிமுக வெளிநடப்பு.
சேலம் மாநகராட்சி மாமன்ற இயல்பு கூட்டம் மூன்று மாதங்களுக்கு பிறகு நடைபெற்றது.
சேலம் மாநகராட்சி மேயர் திரு ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த இயல்பு கூட்டத்தில் சேலம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி மாணிக்கம் உள்ளிட்டோர முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் 60 கூட்டங்களை உள்ளடக்கிய சேலம் மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் தங்களது கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பிரச்சனைகளை குறித்து கூட்டத்தில் பேசினர்.
இதனை அடுத்து திமுக கவுன்சிலர்கள் ஒவ்வொருவரும் நாடாளுமன்றத் தேர்தலில் திபுக வெற்றி பெற்றது குறித்து பேசினர்.
இதனால் ஆத்திரமடைந்த அதிமுக மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் மக்கள் பிரச்சனையை பற்றி பேசாமல், திமுக புகழ் பாடும் கூட்டம் எனக் கூறி மாமன்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இது குறித்து சேலம் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி செய்தியாளர்களும் கூறுகையில், கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் அருந்தி ஐம்பதற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் தமிழகத்தில் திமுக வெற்றி பெற்றதை கொண்டாடி வருவதாக சேலம் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி தெரிவித்தார்.