திங்கள், 24 ஜூன், 2024

முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பண்ணை வீட்டில் ரூ.50 ஆயிரம் கொள்ளை

முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பண்ணை வீட்டில் ரூ.50 ஆயிரம் கொள்ளை

திமுக முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு ஈரோடு மாணிக்கம்பாளையம் விஐபி நகரில் ஒரு வீடு உள்ளது. இதே போல் மொடக்குறிச்சி அருகே சின்னம்மாபுரம் கிராமம் மினி காடு என்ற இடத்தில் 25 ஏக்கரில் தோட்டத்துடன் கூடிய பண்ணை வீடு உள்ளது.

இவர், திமுக தலைமையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் திமுகவை விட்டு விலகினார். தற்போது எந்த ஒரு இயக்கத்திலும் சேராமல் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது பண்ணை வீட்டை சின்னம்மாபுரத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் கவனித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று (23ம் தேதி) இரவு கோவிந்தராஜ் வழக்கம்போல் பண்ணை வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டார். இன்று (24ம் தேதி) காலை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சுப்புலட்சுமி ஜெகதீசன் கணவர் ஜெகதீசனுக்கும், மலையம்பாளையம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்தன. வீட்டில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளை போய் இருப்பதும், அந்தப் பணம் தோட்டத்தில் வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

மேலும், வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தப்படாததால் கொள்ளையர்களை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மலையம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்களை என்கவுண்டரில் சுட்டுத்தள்ள வேண்டும்: மாஜி அமைச்சர் ஆவேசம்

கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்களை என்கவுண்டரில் சுட்டுத்தள்ள வேண்டும்: மாஜி அமைச்சர் ஆவேசம்

கள்ளக்குறிச்சி விஷ சாராய சாவு சம்பவம் தொடர்பாக திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:- கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கடந்த பட்ஜெட் சட்டசபை கூட்டத்தொடரின் போது கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்த போது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

அன்றைய தினமே இதற்கு நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போது கள்ளச்சாராயம் காரணமாக உயிரிழப்பு நிகழ்ந்து இருக்காது. அதிமுகவுக்கு நல்ல பெயர் வந்து விடும் என்ற எண்ணத்தில் திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

எம்எல்ஏ, பஞ்சாயத்து தலைவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சொன்ன போதும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக திமுக பிரமுகர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். கள்ளச்சாராயம் மூலம் இவ்வளவு உயிரிழப்புக்கு திமுக அரசு தான் காரணம்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு பொறுப்பு ஏற்று ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால், மத்திய அரசு இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை திமுக அரசின் ஏவல் துறையாக உள்ளது.

சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காப்பாற்ற வேண்டும். சாராயம் தயாரித்த நபர்கள் மீது நிறைய வழக்குகள் உள்ளன . எனவே, அவர்களை என்கவுண்டரில் போடுங்கள். அப்போது தான் மற்றவர்களுக்கு பயம் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.
பெருந்துறை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கத்திக்குத்து; தலைமறைவான கொலையாளியை தேடும் போலீஸ்

பெருந்துறை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கத்திக்குத்து; தலைமறைவான கொலையாளியை தேடும் போலீஸ்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சீனாபுரம் அருகேயுள்ள பட்டக்காரன்பாளையம் இந்திராநகர் காலனி பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 30). இவரது மனைவியின் சகோதரர் விக்னேஷ் (வயது 25). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த திருமணமான கெளசல்யா (வயது 25) என்பவருக்கும் திருமணம் மீறிய தகாத உறவு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு விக்னேஷ் மற்றும் கெளசல்யா இருவரும் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர். இதனால், விக்னேஷ் மாமாவான கருப்புசாமிக்கும், கெளசல்யாவின் கணவர் தமிழ்ச்செல்வனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், தமிழ்ச்செல்வன் கருப்புசாமியை கத்தியால் மார்பு, தலையில் குத்தியுள்ளார்.

இதில், படுகாயமடைந்த கருப்புசாமியை சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அப்போது, அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர், இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பெருந்துறை போலீசார் உயிரிழந்த கருப்புசாமி உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கொலை செய்து விட்டு தப்பியோடிய தமிழ்ச்செல்வனை போலீசார் தேடி வருகின்றனர்
சாதி சான்றிதழ் வழங்க கோரி ஈரோடு ஆட்சியரிடம் பழங்குடியின பள்ளி மாணவர்கள் மனு

சாதி சான்றிதழ் வழங்க கோரி ஈரோடு ஆட்சியரிடம் பழங்குடியின பள்ளி மாணவர்கள் மனு

தமிழகத்தில் கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஏறத்தாழ 3,57,980 மலையாளி இன மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுக்கா பர்கூர் மலைப்பகுதி மற்றும் சத்தியமங்கலம் தாலுக்கா கடம்பூர் மலைப்பகுதியில் 31,200 மலையாள இன மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
கடந்த 1976ம் ஆண்டு அரசு ஆணைப்படி வட ஆற்காடு, தென் ஆற்காடு, திருச்சி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் வாழ்கின்ற மலையாளி மக்கள் பழங்குடியினர் இனத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், ஈரோடு மாவட்டம் பர்கூர் மலை மற்றும் கடம்பூர் மலையில் வாழ்கின்ற மலையாளி மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படாமல் இருக்கிறார்கள்.

இது தொடர்பாக கடம்பூர் மற்றும் பர்கூர் மலைப்பகுதி மலையாள மக்களுக்கு பழங்குடியினர் சான்றிதழ் வேண்டி பலமுறை அப்பகுதி மக்கள் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால், மாவட்ட நிர்வாகம் இன்று வரை நடவடிக்கை எடுக்கப்படாமால் உள்ளது. இதனால் மலையாளி மக்களுக்கு பழங்குடியினர் எனச் சான்றிதழ் இல்லாததால் மாணவர்கள் கல்வி பயில்வதிலும் வேலைவாய்ப்பு பெறுவதிலும் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சாதிச் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக உடனடியாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட கடம்பூர் பகுதி மலைவாழ் மலையாளி மக்கள் தங்களது பள்ளி குழந்தைகளுடன், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  
கள்ளக்குறிச்சி சாராய உயிரிழப்புகள்: ஈரோட்டில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி சாராய உயிரிழப்புகள்: ஈரோட்டில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து 55க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இன்னும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை கண்டித்தும், இதை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்று (24ம் தேதி) தமிழகம் முழுவதும் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி, ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையினரிடம் அனுமதி கேட்டு இருந்தனர். இந்நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முதலில் காவல்துறையினர் அனுமதி மறுத்ததால், ஆர்ப்பாட்டம் நடத்த கொண்டுவரப்பட்ட லாரியை திருப்பி அனுப்பினர். மேலும், அங்கிருந்த பேனர்களையும் அவிழ்த்து விட்டதால் ஆர்ப்பாட்டம் நடைபெறுமா? என சந்தேகம் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து அங்குத் திரண்டு இருந்த முன்னாள் அதிமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஈரோடு மாநகர், ஈரோடு மேற்கு, ஈரோடு கிழக்கு ஒன்றிணைந்து வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதனால் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் தலைமையில், ஈரோடு மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயக்குமார், பண்ணாரி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. எஸ். தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களுமான கே.ஏ செங்கோட்டையன், கே. சி.கருப்பண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தனர். கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்பு சம்பவத்தை கண்டித்தும், இதை தடுக்க தவறிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷம் எழுப்பினர்.

நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே.சி பழனிசாமி, பகுதிச் செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், கேசவமூர்த்தி, ஜெகதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணத்தை கண்டித்து சேலத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம். காவல்துறையினர் தலையிட்டு குழப்பம் செய்ய முயற்சி.. அதிமுக - காவல்துறையினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு...

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணத்தை கண்டித்து சேலத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம். காவல்துறையினர் தலையிட்டு குழப்பம் செய்ய முயற்சி.. அதிமுக - காவல்துறையினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு...

சேலம்.
S.K. சுரேஷ் பபுக.

ள்ளக்குறிச்சி கள்ளச்சார விவகாரத்தில் உயிரிழப்பு அதிகரித்ததற்கு காரணம், நச்சு முறிவு மருந்து இல்லாததே. 
சிபிஐ விசாரணை நடத்தினால்தான் உண்மை நிலை வெளிவரும்.
கழக அமைப்புச் செயலாளர் செம்மலை பேட்டி.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிர் இழப்புகளுக்கு பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தி அதிமுக மாநகர் மாவட்டம் மற்றும் புறநகர் மாவட்ட கழகம் சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புறநகர் மாவட்ட கழக செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும் கழக அமைப்புச் செயலாளருமான செம்மலை கண்டன உரையாற்றினார். 
மாநகர் மாவட்ட கழக செயலாளர் வெங்கடாஜலம், மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன், சட்டமன்ற உறுப்பினர்கள் பாலசுப்ரமணியன், ராஜமுத்து, மணி, ஜெய்சங்கரன், நல்லதம்பி, சித்ரா, சுந்தர்ராஜன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் சார்பு அணியினர் என பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று விடியா திமுக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் செம்மலை ஆற்றிய கண்டன உரை:
திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வருவோம் என்றார்கள்.
ஆட்சிக்கு வரும்போது போதையில்லா மாநிலமாக மாற்றுவோம் என்றார்கள்.
தமிழகத்தில் இளம் விதவைகள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது என்றும் கூறினார்கள். ஆனால் இன்று கள்ளசாராயத்தால் 58 பேர் தாலி பறிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கள்ளச்சாராயம் தொடர்பாக சட்டமன்றத்தில் கவனஈர்ப்பு தீர்மானத்திற்கு அனுமதி வழங்கியிருந்தால் கள்ளசாராயத்தை தடுக்க எதிர்க்கட்சித் தலைவர் பல்வேறு ஆலோசனை வழங்கி இருப்பார்.
கள்ளச்சாராய வியாபாரிகளும், விற்பனையாளரும் மனம் திருந்தினால் அவர்கள் வாழ்வாதாரத்திற்காக மாற்று தொழில் செய்வதற்கு வழிவகை செய்தது அதிமுக அரசு.
தனது மாநிலத்தில்,  கள்ளசாராயத்தால் பலர் உயிரிழந்ததை அறிந்தவுடன் முதலமைச்சர் அங்கு அவர் சென்றிருக்க வேண்டாமா. ஏற்கனவே மரக்காணத்தில் 28பேர் உயிரிழந்தபோது உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இவ்வளவு உயிர் இழப்பு ஏற்பட்டிருக்காது.
கள்ளசாராய சம்பவத்தில் அண்டை மநிலத்தில் இருந்து மெத்தனால் வாங்கி இருப்பதாக தகவல். இதில் மற்ற மாநிலங்களும் சம்பந்தப்பட்டிருப்பதால்தான் சிபிஐ விசாரணை வேண்டும் என்று பொதுச்செயலாளர் கேட்கிறார்.
டாஸ்மாக் கடை நடத்தும் அரசு, குடும்ப பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை தருவது போல், கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் விற்கும் நபர்கள் அங்குள்ள குடும்பத்தினருக்கு குறிப்பிட்ட தொகையை வழங்குகின்றனர்.
கள்ள சாராய சம்பவத்தில் ஆளுங்கட்சிணரே உடந்தையாக இருப்பதால் சிபிசிஐடி விசாரணை நடத்தினர் அது சரியாக நடைபெறாது.
ஆட்சியாளர் என்பவர் மருத்துவர் போல் செயல்பட வேண்டும். நோயாளியின் நோய்க்கு தகுந்தவாறு மருந்துகள் வழங்கி அவரை காப்பாற்ற வேண்டும்.
ஆனால் இன்றைய ஆட்சியாளரோ நோயாளியை காப்பாற்றுவதற்கு பதிலாக நேரடியாக பிரேத பரிசோதனை செய்கின்றனர்.
ஆனால் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தான் மருத்துவர் போல் செயல்படுகிறார்.
இவ்வாறு செம்மலை பேசினார்.
போராட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் செமலை, கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இவ்வளவு பேர் உயிரிழந்ததற்கு காரணம் அதற்கான மருந்து தட்டுப்பாடு உள்ளதே என்று கூறினார். கள்ள சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்க பட்டிருந்த மருத்துவமனைகளில் மத்திய அரசுக்கு சொந்தமான ஜிப்மர் மருத்துவமனையில் தான் இறப்பு எண்ணிக்கை குறைவு என்றும் அங்கு குணமானவர்கள் எண்ணிக்கை அதிகம் என்றும் தெரிவித்ததுடன் மற்ற அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர் உயிரிழந்ததற்கு போது பிசோல் என்ற நச்சு முறிவு மருந்து இல்லாததே காரணம் என்றார்.
ஆனால் போதுமான அளவு மருந்து உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் கூறும் போது மருத்துவர்களும் அதையேதான் வழிமொழிவார்கள் இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தப்பட்டால் உண்மை வெளிவராது என்றும், சிபிஐ விசாரணை நடத்தினால் மட்டுமே மருந்து இல்லாத்து குறித்த உண்மை வெளிவரும் என்றும் அவர் தெரிவித்தார்.
மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்: ஈரோட்டில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பேட்டி

மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்: ஈரோட்டில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பேட்டி

தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜவாஹிருல்லா ஈரோட்டில் பேட்டி.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் டாக்டர் ஜவாஹிருல்லா ஈரோடு கே கே எஸ் கே திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு மாவட்டத்தின் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சலீம் இல்ல திருமணத்தில் கலந்து கொண்டார்.   

அதன்பின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த பத்திரிகையாளர் சந்திப்பில், கள்ளச்சாராயம் குடித்து இருந்த இறந்தவர்களுக்குதமிழ்நாடு அரசு வழங்கக்கூடிய நிவாரணத் தொகையினைஅந்த மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மற்றும் உயர் அதிகாரிகள் அவருடைய வைப்பு நிதி மற்றும் சம்பளத்திலிருந்து பிடித்துக் கொடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் கருத்துக்கள் என்பதையும், தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

நீட் தேர்வில் தொடர்ந்து முறைகேடுகள் நடைபெற்று வருகிறது.தற்போது நடைபெற்ற நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 720 மதிப்பெண்களை பெற்றிருப்பது நீட் தேர்வில் முறைகேடு உள்ளதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. 

இதில் மாவட்ட தலைவர் சித்திக், தலைமை பிரதிநிதி எஸ் முகமது ரிஸ்வான், தலைமைச் செயற்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது ,கரூர் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது, தமுமுக மாவட்ட செயலாளர் முஹம்மது லரிப், மாநில மருத்துவ அணி சேவை துணைச் செயலாளர் பௌஜீல் ஹசன்,மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் இலியாஸ், தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் சாகுல் ஹமீத், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் சிக்கந்தரஉள்ளிட்டோர் பங்கேற்றனர்.