செவ்வாய், 25 ஜூன், 2024

தமிழக அரசுக்கு ஈரோடு மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் நன்றி

தமிழக அரசுக்கு ஈரோடு மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் நன்றி

சுதந்திரப் போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரனின் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.

இந்த அறிவிப்பை வரவேற்கும் வகையில் ஈரோடு மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டத் தலைவர் செல்வராஜ் தலைமையில், ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் அணி தலைவி காஞ்சனா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் சத்யா, மாநகர செயலாளர் குணா, மற்றும் ரஞ்சித், மாதேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி சம்பவம் சிபிஐ விசாரணை வேண்டும்: ஈரோட்டில் தேமுதிக வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி சம்பவம் சிபிஐ விசாரணை வேண்டும்: ஈரோட்டில் தேமுதிக வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60 பேர் இறந்ததையொட்டியும், இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே இன்று (25ம் தேதி) தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட தேமுதிக செயலாளர் ஆனந்த் தலைமை வகித்து பேசியதாவது, கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் உள்ளனர். இச்சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இது சம்பந்தமாக ஒப்புக்கு விளக்கங்கள் அரசு தரக்கூடாது. இதை அரசு எச்சரிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த விஷ சாராயம் சம்பவத்தில் பின்னணியில் உள்ளவர்கள் அனைவர் மீதும் அரசு உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். கஞ்சா போதையில் இருந்து தமிழகத்தை விடுவிக்க வேண்டும். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி பதவி விலக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

ஆர்ப்பாட்டத்தில், பகுதி செயலாளர்கள் ஆறுமுகம், பெருமாள், செல்வகுமார், சுப்பிர மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை கேப்டன் மன்ற துணை செயலாளர் சுல்தான் பாட்ஷா தொடங்கி வைத்து பேசினார். முடிவில் வட்ட செயலாளர் லட்சுமணன் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம்.. மாவட்ட திமுக நிர்வாகிகளை பதவி நீக்கம் செய்யாதது ஏன்.. சேலத்தில் நடைபெற்ற தேமுதிக ஆர்ப்பாட்டத்தில் ஏ ஆர் இளங்கோவன் கேள்வி....

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம்.. மாவட்ட திமுக நிர்வாகிகளை பதவி நீக்கம் செய்யாதது ஏன்.. சேலத்தில் நடைபெற்ற தேமுதிக ஆர்ப்பாட்டத்தில் ஏ ஆர் இளங்கோவன் கேள்வி....

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

மாவட்ட ஆட்சியர் பணி நீக்கம் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணி மாறுதல்... கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக நிர்வாகிகளை பதவி விலக்காதது ஏன்.. சேலத்தில் நடைபெற்ற தேமுதிக ஆர்ப்பாட்டத்தில் ஏ ஆர் இளங்கோவன் வலியுறுத்தல். 
கள்ளச்சாராயம் குடித்து 59 பேர் உயிரிழந்த  விவகாரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும், 
சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் கோட்டை மைனாத்தில் சேலம் மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாகபுரம் பகுதியில் விசாராயம் அருந்தி 59 பேர் உயிரிழந்தனர் மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்த விவகாரம் தமிழகத்தின் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தாத தமிழக அரசை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சி சார்பில் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழக முழுவதும் போதை இல்லா தமிழகத்தை உருவாக்கித் தவறிய ஸ்டாலின் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது சேலம் ஒருங்கிணைந்த தேமுதிக சார்பில் கோட்டை மைதானம் பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்பாட்டத்திற்கு மாநகர மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார் கழக உயர்மட்ட குழு உறுப்பினரும் கிழக்கு மாவட்ட செயலாளருமான ஏ ஆர் இளங்கோவன் மற்றும் மேற்கு மாவட்ட கழக செயலாளர் சுரேஷ் பாபு முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக கழக அவைத் தலைவர் இளங்கோவன் கலந்து கொண்டார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது போதை இல்லா தமிழகத்தை உருவாக்கத் தவறிய ஸ்டாலின் தலைமை ஆன திமுக அரசை கண்டித்து கண்டன உரை நிகழ்த்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து கழக அவைத் தலைவர் இளங்கோவன் செய்தியாளரிடம் கூறும் போது தமிழகம் தற்போது போதை மாநிலமாக உருவாகியுள்ளது டாஸ்மார்க் கடை மற்றும் கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்கள் அதிக அளவில் உள்ளன என்றும் அதைவிட ஒரு படி மேலாக தடை செய்யப்பட்ட கள்ளச்சாராய விற்பனை தமிழகத்தில் அதிக அளவில் நடைபெற்று வருவதாகவும் குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாகுளம் பகுதியில் விஷ சாராயம் அருந்தி இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளனர் பல பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதற்கு முக்கிய காரணம் திமுக அரசு தான் என்றும் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற தவறிய தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் மேலும் இந்த சம்பவத்திற்கு உரிய விசாரணை நடத்தை குற்றவாளிகளை தகுந்த தண்டனை அளிக்கும் வகையில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கள்ளக்குறிச்சி சம்பவத்தில் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர் பணி நீக்கம் செய்யப்பட்டதுடன், மாவட்டக் கண்காணிப்பாளர் பணி மாறுதல் செய்யப்பட்டது  உட்பட அது தொடர்பான அனைத்து அரசு துறை அதிகாரிகளின் மீது நடவடிக்கைகள் பாய்ந்த பொழுது, இந்த சம்பவத்திற்கு காரணமான கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திமுக மாவட்ட செயலாளர் மாவட்டம் முழுவதும் இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள், கள்ளக்குறிச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், என ஏன் திமுக முக்கிய நிர்வாகிகளை திமுகவிலிருந்து திமுக தலைவர் நீக்கவில்லை என தேமுதிக மாநில நிர்வாகி ஏ ஆர் இளங்கோவன் ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசுக்கு கடும் கேள்வி எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் செவ்வாய்பேட்டை பகுதி கழக செயலாளர் ஆறுமுகம் நன்றி உரை 31 வது வட்டக் கழக செயலாளர் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விஷ சாராய உயிர் படி தமிழகத்தில் இதுவே கடைசியாக இருக்க வேண்டும்... சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் புதிய தமிழகம் கட்சியினர் வலியுறுத்தல்.

விஷ சாராய உயிர் படி தமிழகத்தில் இதுவே கடைசியாக இருக்க வேண்டும்... சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் புதிய தமிழகம் கட்சியினர் வலியுறுத்தல்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழகத்தில் பூரண மதுவிலக்கே வேண்டும்.. சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் புதிய தமிழகம் கட்சியினர் வலியுறுத்தல். 

கள்ளக்குறிச்சி விஷக் கள்ளச்சாராய உயிர் பலிகளை கண்டித்து தமிழக முழுவதும் பல்வேறு கட்சிகளின் சார்பில்  நாள்தோறும் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 
இதன் ஒரு பகுதியாக சேலம் கோட்டை மைதானத்தில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிர் பலிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய தமிழகம் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் பிரேமா ரஞ்சித் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் செல்வராஜ் மற்றும் சங்ககிரி அப்பு உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தொடர் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கள்ளச்சாராய விஷ  சாராய பணிக்கு பொறுப்பேற்று தமிழக அரசு பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். 
ஆர்ப்பாட்டம் குறித்து பிரேமா ரஞ்சித் செய்தியாளரிடம் கூறுகையில், தமிழகத்தில் நிகழ்ந்த இந்த சோக சம்பவம் இனி மீண்டும் தொடரக்கூடாது என்று வலியுறுத்தியதோடு தவறும் பட்சத்தில்  தமிழகம் தழுவிய மாபெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

திங்கள், 24 ஜூன், 2024

ஈரோடு மாவட்டத்தில் சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம்

ஈரோடு மாவட்டத்தில் சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில், ஈரோடு மாவட்டத்தில் 6 மையங்களில் 24 மணி நேர உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
ஓட்டுநர், நடத்துநர், ஆர்சி, எப்சி பணிகளுக்கு ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்க வெளியிட்டுள்ள டெண்டரை கைவிட வேண்டும். உழைப்பு சுரண்டலுக்கும், நவீன கொத்தடிமை முறைக்கும் வழிவகுக்கும் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான ஒப்பந்த முறையைக் கைவிட வேண்டும்.

விடுப்பு மறுத்து சம்பள இழப்பு ஏற்படுத்தக் கூடாது. தனியாருக்கு சாதகமாக வழித்தட பேருந்துகளை நிறுத்தி சிறப்பு பேருந்துகள் என இயக்கக் கூடாது. டீசல் சேமிப்பு என்ற பெயரில் தொழிலாளர்களைத் துன்புறுத்தக் கூடாது. பணிமனை தொழிலாளர்கள் மீது வேலைப்பளுவைத் திணிக்கக் கூடாது.

வரவுக்கும், செலவுக்குமான வித்தியாச தொகையை பட்ஜெட்டில் ஒதுக்கி வழங்க வேண்டும். ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 103 அகவிலைப்படி உள்ளிட்ட பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை அமலாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடைபெற்றது.

ஈரோடு ஈ1, ஈ3 பணிமனை முன் நடைபெற்ற போராட்டத்திற்கு செயலாளர் எஸ்.இளங்கோவன் தலைமை வகித்தார். பன்முக தலைவர் என்.முருகையா உண்ணாவிரதத்தைத் தொடங்கி வைத்தார். மண்டல பொதுச் செயலாளர் டி.ஜான்சன் கென்னடி சிறப்புரையாற்றினார்.

ஓய்வு பெற்றோர் அமைப்பின் நிர்வாகிகள் ஆர்.அர்ஜுனன், கே.என்.துரைசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். சத்தியில் கிளை தலைவர் என்.தேவராஜ் தலைமை வகித்தார். மண்டல தலைவர் கே.மாரப்பன் சிறப்புரையாற்றினார். சிபிஎம் கே.எம்.விஜயகுமார், க.இரா.திருத்தணிகாசலம் மற்றும் வாசுதேவன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

நம்பியூரில் கிளை தலைவர் சி.சண்முகம் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. மண்டல பொருளாளர் சி.அய்யாசாமி சிறப்புரையாற்றினார். ஓய்வு பெறோர் அமைப்பின் நிர்வாகிகள் சி.வெள்ளியங்கிரி, டி.கே.வீராசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

பெருந்துறையில் கிளைதலைவர் கருப்புசாமி தலைமை வகித்தார். கண்ணியப்பன், நேசகுமார் மற்றும் ஓய்வு பெற்ற அமைப்பின் மண்டல தலைவர் ஜெகநாதன் ஆகியோர் உரையாற்றினர். பவானியில் கிளை தலைவர் ஏகாம்பரம் தலைமை வகித்தார். சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அந்தியூர் அரசு பேருந்தில் தவறவிட்ட ரூ.12 ஆயிரம் பெண்ணிடம் ஒப்படைப்பு

அந்தியூர் அரசு பேருந்தில் தவறவிட்ட ரூ.12 ஆயிரம் பெண்ணிடம் ஒப்படைப்பு

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள பி.மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சரோஜா (வயது 50). இவர், அந்தியூரில் இருந்து கவுந்தப்பாடி செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்தார். பின்னர், பி.மேட்டுப்பாளையத்தில் வந்து இறங்கினார். 

அப்போது, அவர் கைப்பையை பேருந்திலேயே வைத்து விட்டாராம். சிறிது தூரம் சென்றவுடன் பையை தவறவிட்ட அந்த பெண் பதட்டம் அடைந்து பையை காணவில்லை என்று அதிர்ச்சி அடைந்தார்.

இந்த நிலையில் பேருந்து நடத்துநர் ராமன் மற்றும் ஓட்டுநர் ரத்தினவேல் இருவரும் அந்தப் பையை பத்திரமாக எடுத்து அந்தியூர் கிளை மேலாளர் சண்முகம், உதவி பொறியாளர் நிர்மல் குமார் ஆகியோரிடத்தில் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து, பையை தவறவிட்ட சரோஜா அந்தியூர் பேருந்து நிலையத்திற்கு வந்து கிளை மேலாளர் சண்முகத்திடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். கிளை மேலாளர் தங்களுடைய பை இங்கு தான் உள்ளது. அதில் என்ன பொருட்கள் உள்ளன என விசாரணை செய்தார். விசாரணையில் அந்த பையில் தொகை ரூ.12 ஆயிரம் மற்றும் பொருட்கள் இருந்தன என்று கூறினார்.

இதனையடுத்து கிளை மேலாளர் அந்தப் பையை சரோஜாவிடம் ஒப்படைத்தார். அதனைப் பெற்றுக் கொண்ட சரோஜா ஓட்டுநர் ரத்தினவேல், நடத்துனர் ராமன் ஆகிய இருவருக்கும் நன்றி தெரிவித்தார்.
ஈரோடு மக்கள் குறைதீர் கூட்டத்தில் 408 மனுக்கள்: உடனடி தீர்வுக்கு ஆட்சியர் உத்தரவு

ஈரோடு மக்கள் குறைதீர் கூட்டத்தில் 408 மனுக்கள்: உடனடி தீர்வுக்கு ஆட்சியர் உத்தரவு

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (24ம் தேதி) நடைபெற்றது.
இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, காவல் துறை நடவடிக்கை, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 408 மனுக்கள் பெறப்பட்டன.

பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர் பெருமக்களின் முகாம் மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், ஈரோடு மாவட்டத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைத்தரம் உயரும் வகையில் சுழுல் நிதி தலா ரூ.10 ஆயிரம் மற்றும் சமுதாய முதலீட்டு நதி ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் என தலா ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வீதம் பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமினில் உள்ள 12 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கும் மற்றும் மொடக்குறிச்சி, அறச்சலூர் இலங்கை அகதிகள் முகாமினில் 2 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கும் என மொத்தம் 14 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அரசு கடனுதவியாக மொத்தம் ரூ.17.50 லட்சத்திற்கான காசோலைகளை அவர் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், மாவட்ட தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) (பொ) ராஜகோபால், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தர்மராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.