ஞாயிறு, 30 ஜூன், 2024

சேலம் கன்ஸ்யூமர் வாய்ஸ் பவுண்டேஷன் சார்பில் முப்பெரும் விழா.

சேலம் கன்ஸ்யூமர் வாய்ஸ் பவுண்டேஷன் சார்பில் முப்பெரும் விழா.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

நுகர்வோர் உரிமைகள் இயக்கம் மற்றும் பாரதி உரிமைகள் அறக்கட்டளை, CONSUMER VOICE FOUNDATION சார்பில் முப்பெரும் விழா நிகழ்ச்சி நடந்தது...

நிகழ்ச்சிக்கு அமைப்புகளின் நிறுவனர் பூபதி தலைமை வகித்தார்...
வெங்கடேசன் வரவேற்புரை ஆற்றினார்.. பாஸ்கரன் தீர்மானங்கள் வாசித்தார்...
சண்முக சுந்தரம் சேவை திட்டங்கள் குறித்து பேசினார்.. துணைத் தலைவர் செல்வம் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார்...
ஹில் சிட்டி ரோட்டரி தலைவர்
 வழக்கறிஞர் அருள்விக்னேஷ்..
கவுரவா சிமெண்ட் நிர்வாக இயக்குனர் ஜெகன் மோகன்...கன்னிகா பரமேஸ்வரி அம்மன் தேவஸ்தானம் தலைவர் வேணுகோபால் செட்டியார் முன்னிலை வகித்தனர்...
கீழடி அகழ்வாராய்ச்சி முன்ன்று நடத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் 
திரு அமர்நாத் ராமகிருஷ்ணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஏற்படுத்த மஞ்சள் துணிப்பை வெளியிட்டார்...
அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கு 40 பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது...
நிகழ்ச்சியில் தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் பேசும் போது கடமையை செய்தால் முன்னேற்றம் கிடைக்கும்..ஊர் கூடி தேர் இழுப்பது போல அனைவரும் சேர்ந்தால் மட்டுமே பொதுச்சேவை செய்ய முடியும்..
விலங்குகள் மட்டுமே தனியாக வாழும்.. மனிதர்கள் சமூகமாக வாழ்கிறார்கள்..
குழந்தைகளை சுதந்திரமாக படிக்க வையுங்கள்...
முன்னோர்கள் விட்டு சென்றதை வரலாற்றாக பார்ப்பது தொல்லியல்....
தொல்லியல் என்பது மனிதன் விட்டுச்சென்ற வரலாற்றை ஆராய்வது..
இன்று கீழடி பேசப்படுகிறது மூத்த குடி தமிழ் தமிழர்கள் தான் என் என்பதற்கு ஆதாரம் கண்டனர் அதற்கு கீழடி பதில் சொல்லி உள்ளது..
இரும்பை கண்டுபிடித்தவன் தமிழர்கள் தான்..
மாணவர்கள் பெற்றோர்கள் சொல்பட்டி கேட்டு படித்து சிறந்த தலைமுறை உருவாக்க வேண்டும் 
ஏன் பேசினார்..
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..
தமிழகத்தில் சேவை பெரும் உரிமை சட்டத்தை அமல்படுத்தி அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்கள் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்..
பத்து ரூபாய் நாணயங்களை பெரும்பாலான கடைகளில் வாங்குவதில்லை அதை வாங்க வலியுறுத்த வேண்டும்....
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்...
சேலம் சீலநாயக்கன்பட்டியில் காலை மாலை நேரங்களில் இருக்கும் கடும் போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய வேண்டும்..
ஆடிட்டர் ராஜ பாலு நன்றி கூறினார்..
நிகழ்ச்சியில் அமைப்பு நிர்வாகிகள் பூபதி... மாதவன்...குழந்தைவேல்...மாது... மாதவன்.. மெய்யப்பன்..
அப்துல் சலாம்....
ஆடிட்டர் சரவணன்.. முருகவேல்.. திருமுருகன் பத்மநாபன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்..

சனி, 29 ஜூன், 2024

உலக கோப்பையை வென்ற இந்தியா: ஈரோட்டில் கொண்டாட்டம்

உலக கோப்பையை வென்ற இந்தியா: ஈரோட்டில் கொண்டாட்டம்

பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்திய அணி, 17 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது டி20 உலகக் கோப்பை பட்டத்தை வென்றது. இது இந்திய ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பின் இந்தியா பெற்றுள்ள இந்த வெற்றியை நாடே கொண்டாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஈரோடு முத்தாம்பாளையம் பகுதி 1ல் பொதுமக்கள் நள்ளிரவில் தெருக்களில் குவிந்து, பட்டாசுகளை வெடித்தும், இந்தியா இந்தியா என கூறி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பான காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன. 
கவுந்தப்பாடி அருகே தீ பிடித்து எரிந்த டிப்பர் லாரி

கவுந்தப்பாடி அருகே தீ பிடித்து எரிந்த டிப்பர் லாரி

ஈரோடு - கோபிசெட்டிபாளையம் செல்லும் சாலையில் கவுந்தப்பாடி அடுத்த பாலப்பாளையம் அருகே சுங்கச்சாவடி மற்றும் 4 வழி சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளுக்கு டிப்பர் லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நேற்று மாலை ஜல்லிக்கற்களை ஏற்றி வந்த லாரி அதை கொட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. அப்போது, திடீரென லாரியில் இருந்து கரும்புகை வெளியேறியது‌.

தொடர்ந்து, லாரியில் தீ வேகமாக பற்றி எரியத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, லாரியில் இருந்த டீசல் டேங்க் வெடித்து தீ மேலும் அதிகமாக பற்றி எரிந்தது. உடனே அங்கிருந்தவர்கள் இதுகுறித்து கோபி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். 

இதனையடுத்து, தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 15 நிமிடங்களுக்கு பிறகு லாரியில் எரிந்த தீ அணைக்கப்பட்டது. 

ஆனாலும், லாரியின் முன்பகுதி எரிந்து சேதமானது. இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் நடத்திய விசாரணையில், லாரியில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து நேரிட்டது தெரிந்தது
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 3,896 அடியாக சரிவு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 3,896 அடியாக சரிவு

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணை ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது. இந்த அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி இருந்து வரும் பவானி ஆறும், மாயாறும் உள்ளன. 

இந்நிலையில், கடந்த 5 நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் பெய்த மழைப்பொழிவு காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனிடையே, தற்போது மழைப்பொழிவு குறைந்துள்ளதால், அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது.

நேற்று (29ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 7,149 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (30ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 3,896 கன அடியாக சரிந்தது. அணையின் நீர்மட்டம் நேற்று காலை 64.00 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 64.74 அடியாக உயர்ந்தது.

அதேபோல், அணையில் நீர் இருப்பு 8.61லிருந்து 8.88 டிஎம்சியாக அதிகரித்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 200 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 205 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
ஈரோட்டில் இருவேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

ஈரோட்டில் இருவேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

ஈரோட்டில் இருவேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் இன்று (30ம் தேதி) அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட ’ஹிஜ்புர் தகர்’ இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பது, அந்த அமைப்புகளுக்கு உடந்தையாக செயல்பட்டது தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகாமை (என்ஐஏ) இன்று (ஜூன் 30) காலை முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகிறது.

இதில் ஒரு பகுதியாக, ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட அசோக்நகர் ஆறாவது தெருவில் உள்ள சர்புதீன் என்பவர் வீட்டில் அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், சூரம்பட்டி அருகில் உள்ள கருப்பணசாமி கோவில் வீதி எஸ்.கே.சி சாலை அருகில் நகரில் உள்ள முகமது ஈசாக் என்பவர் வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு தொடர்பில் உள்ளாரா என்று விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாகவும் செயல்பட்டதாக கூறப்படும் நிலையில், திருப்பூரில் இருந்து பத்துக்கு மேற்பட்ட என்ஐஏ அதிகாரிகள் மூன்று கார்களில் வந்து ஈரோட்டில் இரண்டு இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். என்ஐஏ அதிகாரிகளின் இந்த திடீர் சோதனையால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மொடக்குறிச்சி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

மொடக்குறிச்சி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டாரம் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் எட்டிக்கன் பணி நிறைவு பாராட்டு விழா, ஈரோடு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.தங்கவிக்னேஷ் தலைமையில் நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஈரோடு மாவட்டம் சார்பில் மாவட்டத் தலைவர் இரா.க.சண்முகவேல், மாவட்ட பொருளாளர் உதயம்.பி.செல்வம், மாவட்ட இளைஞரணித் தலைவர் ஏ.ராஜா, மாவட்ட இளைஞரணி செயலாளர் அ.லாரன்ஸ் ரமேஷ், மாநகர நிர்வாகிகள், ஈரோடு மாநகராட்சி நேதாஜி தினசரி மார்க்கெட் கனி சங்க நிர்வாகிகள், மூலம் பாளையம் சங்க நிர்வாகிகள், ஈரோடு மாவட்ட இனிப்பு மற்றும் கார வகைகள் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கௌரவித்து நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினர்.

மேலும், நடைபெற்ற இவ்விழாவில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், அவர்களின் உறவினர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்குகள் சரிபார்க்கும் கூட்டம்

ஈரோட்டில் வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்குகள் சரிபார்க்கும் கூட்டம்

நடந்து முடிந்த ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்குகளை சரிபார்க்கும் இறுதி ஒத்திசைவு கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (29ம் தேதி) நடந்தது.
இந்த கூட்டத்திற்கு, ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தலைமை தாங்கினார். தேர்தல் செலவினப் பார்வையாளர் லட்சுமி நாராயணா முன்னிலை வகித்தார்.

இதில், வேட்பாளர்கள் தாக்கல் செய்த செலவினங்கள் குறித்த பதிவேடு, வங்கி கணக்கு புத்தகம், வரவு செலவு ரசீதுகள் உள்ளிட்டவைகளை, தேர்தல் ஆணையம் வழங்கிய செலவின பட்டியலுடன் ஒப்பிட்டு பார்த்து மாவட்ட ஆட்சியரும், தேர்தல் செலவினப் பார்வையாளரும் ஆய்வு செய்தனர்.

இக்கூட்டத்தில், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் குருநாதன் (கணக்குகள்), தேர்தல் பிரிவு அதிகாரிகள், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், வேட்பாளரின் முகவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.