செவ்வாய், 2 ஜூலை, 2024

அம்மாபேட்டை ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள்: ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆய்வு

அம்மாபேட்டை ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள்: ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆய்வு

அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டத்தில், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் அரசின் சார்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (2ம் தேதி) அம்மாபேட்டை பேரூராட்சி, அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் சிங்கம்பேட்டை, குருவரெட்டியூர் மற்றும் பட்லூர் ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது, அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், சிங்கம்பேட்டை ஊராட்சியில் வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில், ரூ.2.38 லட்சம் மானியத்தில் 2.38 ஹெக்டேர் பரப்பளவில் நுண்ணீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு, முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் ஒரு விவசாயிக்கு மானிய விலையில் தக்கை பூண்டு விதைகள் மற்றும் 2 விவசாயிகளுக்கு மக்காச்சோளம் படைப்புழுவினை கட்டுப்படுவதற்குண்டான வேளாண் இடுபொருட்களை அவர் வழங்கினார்.

தொடர்ந்து, தமிழ்நாடு நீடித்த நிலையான பசுமைப் போர்வைக்கான இயக்கம் சார்பில் மகோகனி மரம் நடப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, அம்மாபேட்டை பேரூராட்சி வார்டு -15, குபேரன் நகரில் கலைஞர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கப்பட்டு வருவதையும், மேலும், நபார்டு திட்டத்தின்கீழ் பட்டன்சாவடி முதல் செலம்பனூர் வழியாக கால்நடை மருத்துவமனை வரை ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, லட்சுமிபுரம் பகுதியில் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.27.53 கோடி மதிப்பீட்டில் 464 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருவதையும், குருவரெட்டியூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ.1.10 லட்சம் மதிப்பீட்டில் மெய்நிகர் வகுப்பறை கட்டப்பட்டு வருவதையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து, குருவரெட்டியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், பொதுமக்களுக்கு கடன் வழங்குதல், கணினியில் பதிவு செய்தல் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், பட்லூர் ஊராட்சியில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் நூலகக் கட்டிடம் கட்டும் பணியினையும், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டிடம் ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருவதையும் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வுகளின் போது, துணைப் பதிவாளர் (தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்) முத்து சிதம்பரம், உதவி பொறியாளர் (தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம்) பிரசன்னா, அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராதா மணி, சுமித்ரா, உதவி இயக்குநர் (வேளாண்மைத்துறை) ஜெயகுமார் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
அந்தியூர் அருகே ஆம்புலன்சில் பிறந்த குழந்தை: பணியாளர்களுக்கு மக்கள் பாராட்டு

அந்தியூர் அருகே ஆம்புலன்சில் பிறந்த குழந்தை: பணியாளர்களுக்கு மக்கள் பாராட்டு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி சோளங்கனை மலைக்கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ். இவரின் மனைவி மலர் (வயது 22). நிறைமாத கர்ப்பிணி. மலருக்கு இன்று (2ம் தேதி) மதியம் பிரசவ வலி ஏற்பட்டது.
இந்நிலையில், குடும்பத்தினர் 108 அவசர ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, மலைக்கிராமத்துக்கு சென்ற 108 வாகனம் மலரை அழைத்துக் கொண்டு பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அடர்ந்த வனப்பகுதி வழியே சென்று கொண்டிருந்தது. 

அப்போது, மலருக்கு பிரசவ வலி தாங்க முடியாமல் துடித்ததால், ஓட்டுநர் மகேந்திரன் வாகனத்தை நிறுத்தினார். பின்னர், வாகனத்தில் பயணித்த அவசர கால மருத்துவ நுட்புணர் பவுல்ராபின்சன் பிரசவம் பார்த்தார். இதில், ஆண் குழந்தை பிறந்தது. 

இதனையடுத்து, தாயும், குழந்தையும் பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். பிரவசத்திற்கு உதவிய அவசர கால மருத்துவ நுட்புணர் பவுன்ராபின்சன், ஓட்டுநர் மகேந்திரன் ஆகியோரை 108 மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவின் மற்றும் மலரின் உறவினர்கள் பாராட்டி நன்றி கூறினர்.
ஈரோட்டில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தால் நீதிமன்ற பணிகள் பாதிப்பு

ஈரோட்டில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தால் நீதிமன்ற பணிகள் பாதிப்பு

குற்றவியல் சட்டங்களை அமல்படுத்திய மத்திய அரசைக் கண்டித்தும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி ஈரோட்டில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு 3 குற்றவியல் சட்டங்களை நாடாளுமன்றத்தில் விவாதமின்றி நிறைவேற்றியது, நேற்று முதல் அந்த சட்டங்கள் அமுலுக்கு வந்துள்ளன. இதை கண்டித்தும், தமிழகத்தில் தொடர்ந்து வழக்கறிஞர்கள் மிரட்டப்படுவதும், தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதுமாக உள்ளது. இதனால் வழக்கறிஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார்க்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது.

எனவே வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும், ஈரோடு பார் அசோசியேஷன் சார்பில், ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் முன்பு திரண்ட 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதில், ஈரோடு பார் அசோசியேஷன் தலைவர் குருசாமி தலைமையில், செயலாளர் ராஜா, நிர்வாக குழு உறுப்பினர் மாரியப்பன், வழக்கறிஞர்கள் ராஜேந்திரன், பிரகாஷ் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்று மதிய அரசு நிறைவேற்றி உள்ள முப்பெரும் சட்டங்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

திங்கள், 1 ஜூலை, 2024

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் கிளம்பிய அடுத்த புதிய சர்ச்சை

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் கிளம்பிய அடுத்த புதிய சர்ச்சை

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் ஆண்கள் உள்நோயாளிகள் பிரிவில் தூய்மை பணியாளர் ஒருவர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, அங்கு சிகிச்சை பெற்று வந்த ஒரு நோயாளிக்கு இறங்கிய குளுக்கோஸ் (டிரிப்) தீர்ந்துள்ளது.

இதனையடுத்து, தூய்மை பணியாளர் நோயாளியின் குளுக்கோஸ் பாட்டிலை அகற்றினார். அதேபோல், பெண் தூய்மை பணியாளர் ஒருவர் செவிலியராக நோயாளிக்கு சிகிச்சை அளித்தார். இதனை அங்கிருந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமுக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில், இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் கூறியதாவது, அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்களை தவிர வேறுயாரும் நோயாளிகளுக்கு ஊசி செலுத்துவது, குளுக்கோஸ் மாற்றிவிடுவது கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஆனாலும், தூய்மை பணியாளர் மாற்றி விடுவது போன்ற செயல் எவ்வாறு நடந்தது என்று தெரியவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட நாளில் பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது என்றார்.

கடந்த மாதம் தூக்கு படுக்கை (ஸ்ட்ரெச்சர்) கிடைக்காததால், தாயை மகள் தூக்கி சென்ற வீடியோவாலும், மருத்துவமனைக்கு சம்பந்தமில்லாத நபர் கூலிக்காக சக்கர நாற்காலி (வீல்சேர்) தள்ளிய வீடியோவாலும் ஈரோடு அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் மீது சர்ச்சை வெடித்தது. இந்நிலையில் அடுத்த சர்ச்சை கிளம்பியுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் மாதம் ஒரு பிரச்னை கிளம்பி வருகிறது. இதனால், மருத்துவமனையில் சிகிச்சை பெறவே அச்சமாக உள்ளது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு அவர்களை அந்த பணியில் ஈடுபட்டக் கூறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாறாக, ஒப்பந்த பணியாளர்கள் மீதே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால், இதுபோன்ற பிரச்னை தொடர்ந்து நடைபெறுகிறது. எனவே, இதுதொடர்பாக, உயர் அதிகாரிகள் விசார