வியாழன், 4 ஜூலை, 2024

ஈரோடு அரசு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.10.98 லட்சம் பறிமுதல்

ஈரோடு அரசு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.10.98 லட்சம் பறிமுதல்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் 5வது மாடியில் ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அலுவலகம் இயங்குகிறது. இந்த நிலையில், ஊரக வளர்ச்சித் துறையின் வளர்ச்சி பணிகளை அரசு ஒப்பந்ததாரர்களுக்கு ஒதுக்கீடு செய்ய, லஞ்சம் பெறுவதாக ஈரோடு லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினருக்கு புகார் சென்றது. 

புகாரின் பேரில், நேற்று (4ம் தேதி) மாலை ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் திடீரென ஈரோடு லஞ்ச ஒழிப்பு துணை காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் தலைமையிலான காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையில், அங்கு உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வந்த மோகன்பாபு (வயது 45) மற்றும் லஞ்சம் கொடுக்க வந்த ஒப்பந்ததாரர் ஆகியோரிடம் இருந்து மொத்தம் ரூ.10 லட்சத்து 98 ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர் கைப்பற்றினர். மேலும், இதுதொடர்பாக மோகன்பாபு மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

முப்பெரும் குற்றவியல் சட்ட திருத்தம் குறித்து சேலம் SDCBA தலைவர் ஜெ.மு. இமயவரம்பன் விளக்கம்.

முப்பெரும் குற்றவியல் சட்ட திருத்தம் குறித்து சேலம் SDCBA தலைவர் ஜெ.மு. இமயவரம்பன் விளக்கம்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள முப்பெரும் குற்றவியல் சட்ட திருத்தத்திற்கு வழக்கறிஞர்கள் மட்டும் போராடுகிறோம். அரசியல் கட்சிகளோ, இயக்கங்களோ மற்றும் அமைப்புகளோ ஏன் இப்பொழுது வரை போராடவில்லை. சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜெ.மு.  இமையவரம்பன் கேள்வி....

சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜெ.மு. இமயவரம்பன், முப்பெரும் குற்றவியல் சட்டம் குறித்து வழக்கறிஞர்கள் மட்டுமே மேற்கொண்டு வரும் போராட்டம் குறித்து தெரிவித்துள்ள விளக்கம் இதோ, 
நாளை 5-7-24 ம் தேதி சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ள  கண்டன ஆர்ப்பாட்டம் யாருக்காக?? எதற்காக? ? வெறுமனே சட்டத்தின் பெயரை சமஸ்கிருதத்தில் மாற்றியதற்காக வழக்கறிஞர்கள் போராடுகிறோமா ? இல்லை.....இந்த சட்ட திருத்தத்தில் வழக்கறிஞர்கள் பாதிக்கப்படுகிறோமா ??? சத்தியமாக வழக்கறிஞர்கள் பாதிக்கப்படுவதில்லை ....பின் ஏன் போராடுகிறோம்?  இந்த சட்டத்தின் படு பயங்கர விளைவுகளை உணர்ந்ததால் , எதிர்காலத்தில் பொது மக்களை பாதுகாத்திட இப்போது நாங்கள் போராடுகிறோம்.                ஆம் தெரிந்து கொள்ளுங்கள் BNS பிரிவு 152 சொல்கிறது அரசுக்கு எதிராக பிரிவினை வாத செயலை ஊக்குவித்தாலோ, உதவினாலோ,தூண்டினாலோ  அல்லது தூண்ட முயற்சி செய்தாலோ ஆயுள் தண்டனை விதிக்கலாம்.... அது மட்டுமல்ல BNSS சட்டப்பிரிவு 172 சொல்கிறது காவல் அதிகாரிகளின் கட்டளைக்கு அனைவரும் கட்டப்பட வேண்டும் அவ்வாறு கட்டுப்பட வில்லை என்றால் அதுவே குற்றம் அதற்கே கைது செய்யலாம் ....அது மட்டுமல்ல புதிய சட்டப்பிரிவுகளின் படி குற்றம் சாட்டப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால்  அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து BNSS பிரிவு 85 ன்படி அவரது சொத்துகளை  ஜப்தி செய்யலாம் BNSS  பிரிவு 356 ன் படி குற்றஞ்சாட்டப்பட்ட நபர் இல்லாமலேயே வழக்கை விசாரித்து தீர்ப்பும் கூறலாம் .... நீதிமன்றத்தின் செயலை பொது வெளியில் விமர்சித்தால் BNS பிரிவு 73ன் படி அவர்களை இரண்டாண்டு தண்டிக்கலாம் என்று சொல்கிறது ...தற்போது இச்சட்டம் அமூலுக்கு வந்துள்ளது..தடுத்து நிறுத்தப்படா விட்டால் என்ன,  என்ன விளைவுகள் ஏற்படும்? ? சிந்தியுங்கள் உங்கள் அமைப்போ,  இயக்கமோ,  கட்சியோ ஏன் உங்கள் தலைவர்களோ இது வரை போராட தயாராகவில்லை .. வழக்கறிஞர்கள் நாங்கள் போராடிக்கொண்டிருக்காறோம் என்று சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜெ.மு. இமயவர்மன் விளக்கம் அளித்துள்ளதோடு, பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் வழக்கறிஞர்களாகிய தாங்கள் மட்டுமே போராடி வருகிறோம் என்றும் ஏன் இது சம்பந்தமாக எந்த அமைப்புகளோ இயக்கங்களோ கட்சிகளோ தற்பொழுது வரை போராட்டத்தை கையில் எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.


ஈரோடு மாவட்டத்தில் நாளை (5ம் தேதி) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (5ம் தேதி) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (5ம் தேதி) வெள்ளிக்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்சார வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாளை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்சார வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தியூர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-

அந்தியூர், தவிட்டுபாளையம், மைக்கேல்பாளையம், நகலூர், முனியப்பன்பாளையம், கொண்டையம்பாளையம், தோப்பூர், வெள்ளையம்பாளையம், பிரம்மதேசம், தோட்டகுடியம்பாளையம், காட்டூர், செம்புளிச்சாம்பாளையம், பருவாச்சி, பச்சாம்பாளையம், பெருமாபாளையம், புதுப்பாளையம், சங்கராபாளையம், எண்ணமங்கலம், கோவிலூர், வெள்ளித்திருப்பூர், கெட்டிசமுத்திரம், மற்றும் பர்கூர் மலைப்பகுதி.
கோபி அருகே கல் குவாரியை அளவீடு செய்ய முடியாமல் திரும்பி சென்ற அதிகாரிகள்

கோபி அருகே கல் குவாரியை அளவீடு செய்ய முடியாமல் திரும்பி சென்ற அதிகாரிகள்

ஈரோடு மாவட்டம் கோபி வட்டம் கொங்கர்பாளையம் ஊராட்சி கவுண்டம்பாளையம் கிராமத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கொங்கணகிரி முருகன் மற்றும் மாதேஸ்வரன் கோயிலுக்கு சொந்தமான நிலம் உள்ளது .

இதில், மாதேஸ்வரன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை குவாரி உரிமையாளர்கள் ஆக்கிரமித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் உண்ணாவிரத போராட்டம் இருக்க போவதாக விவசாயிகள் அடங்கிய போராட்ட குழுவினர் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகரிடம் கடந்த 2ம் தேதி மனு அளித்தனர்.

இந்நிலையில், நேற்று (3ம் தேதி) இதுகுறித்து கோபி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் கண்ணப்பன் தலைமையில் அதிகாரிகள் போராட்ட குழுவினரை அழைத்து பேசினர். பேச்சுவார்த்தையின் முடிவில் நாளை (4ம் தேதி) குவாரியை நில அளவு செய்யப் போவதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டக் குழுவினர் உண்ணாவிரத்தை கைவிடுவதாக அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று (4ம் தேதி) வருவாய் துறை, அறநிலைய துறை, பொதுப்பணி உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கோபி வருவாய் கோட்டாட்சியர் கண்ணப்பன், சத்தியமங்கலம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சரவணன் ஆகியோர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் அளவீடு மற்றும் ஆய்வு செய்வதற்காக தனியார் கல்குவாரி இருக்கும் இடத்திற்கு சென்றனர்.

அப்போது, நாங்கள் முறையான அனுமதி பெற்று தான் குவாரி நடத்தி வருகிறோம். மேலும் அளவீடு செய்வது குறித்து நீதிமன்றத்தில் தற்காலிக தடை வாங்கியுள்ளதாக அதிகாரிகளிடம் கல்குவாரி உரிமையாளர்கள் தெரிவித்தவினர். அதற்கான நகலையும் அவர்களிடம் ஒப்படைத்தனர். இதனால், அதிகாரிகள் அளவீடு செய்ய முடியாமல் சென்றனர்.
சென்னிமலை அருகே தொழில் நிறுவனங்களில் ஈரோடு ஆட்சியர் ஆய்வு

சென்னிமலை அருகே தொழில் நிறுவனங்களில் ஈரோடு ஆட்சியர் ஆய்வு

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் முகாசிபிடாரியூர் ஊராட்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனம் சார்பில், மானிய கடனுதவியுடன் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்களை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (4ம் தேதி) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு அரசின் சார்பில், ஈரோடு மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனம் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பல்வேறு மானியத்துடன் கூடிய கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் முகாசிபிடாரியூர் கூத்தம்பாளையத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரக் கொள்கை 2021ன் கீழ், சிறப்பு தொழிலுக்கான முதலீட்டு மானியமாக ரூ.1.50 கோடி அனுமதிக்கப்பட்டு 2023-24 ஆண்டில் ரூ.50 லட்சம் பெற்ற சர்வேஷ் மல்டி பிளாஸ்ட் பிரைவேட் லிட், நிறுவனத்தை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு செய்தார்.

இந்நிறுவனம் பிவிசி மற்றும் யுபிவிசி ஜன்னல்கள் மற்றும் கதவுகள் தயாரிக்கும் தொழிலை விரிவுபடுத்த எஸ்ஐடிபிஐ ஈரோடு வங்கிக்கடன் மூலம் புதிய இயந்திரங்களை நிறுவுவதற்கு தமிழக அரசின் சிறப்பு முதலீட்டு மானியம் 25 சதவீதம் ரூ.1.50 கோடி அனுமதிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் சிறப்புத் திட்டமான புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சங்கர் என்பவர் முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கான ரூ.24.50 லட்சம் முதலீட்டில் ரூ.6.12 லட்சம் மானியத்துடன் வங்கிக் கடனுதவியுடன் தொடங்கப்பட்ட பருத்தி மறு சுழற்சி நிறுவனத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுகளின்போது, தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், தொழில் நிறுவனத்தினர் கடன் தவணைத் தொகையினை குறிப்பிட்ட காலத்திற்குள் முறையாக செலுத்தி வருவதாகவும், தொழில் லாபகரமாக இயங்கி வருகிறது என்றும் தெரிவித்தனர்.

இந்த ஆய்வுகளின்போது, பொது மேலாளர் (மாவட்ட தொழில் மையம்) திருமுருகன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

புதன், 3 ஜூலை, 2024

ஈரோட்டில் டெலிகிராம் மூலம் ரூ.14.50 லட்சம் மோசடி: இரண்டு பேர் கைது

ஈரோட்டில் டெலிகிராம் மூலம் ரூ.14.50 லட்சம் மோசடி: இரண்டு பேர் கைது

ஈரோட்டைச் சேர்ந்த கிருஷ்ணபிரசாத், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த செந்தில் குமார் ஆகிய இருவரும், ஆன்லைனில் டெலிகிராம் மூலமாக பகுதி நேர வேலை, அதிக வருவாய் ஈட்டலாம் என வெளியான அறிவிப்பை நம்பி வர்த்தகம் செய்ய தொடங்கியுள்ளனர்.
ஆரம்பத்தில், ஓரிருமுறை செல்போனில், டெலிகிராம் செயலியில் வந்த வங்கிக்கணக்கு எண்ணுக்கு பணம் அனுப்பியுள்ளனர். தொடர்ந்து, வர்த்தகமும் சரிவர நடந்து வருவாய் கிடைத்துள்ளது. இதனால், அதிக அளவில் முதலீடு செய்து அதிக வருவாய் ஈட்டலாம் எனும் நோக்கத்தில் ரூ.14.50 லட்சம் வரை டெலிகிராமில் வந்த வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பியுள்ளனர்.

ஆனால், அதன்பின் வர்த்தக நடவடிக்கை ஏதும் இல்லை. இதையடுத்து, தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த இருவரும், பகுதி நேர வேலை என கூறி நம்பர் வைத்து பணம் பெற்று ஏமாற்றி மோசடி செய்த நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து சைபர் கிரைம் ஆய்வாளர் சித்ராதேவி தலைமையில், உதவி ஆய்வாளர் பாரதிராஜா உள்ளிட்ட போலீசார் வங்கி கணக்கு உரிமையாளர் இருப்பிடமான பொள்ளாச்சி, கோவைக்கு சென்று தேடுதலில் ஈடுபட்டனர். பின்னர், பொள்ளாச்சி ஓரக்கலியூர் மாரிமுத்து மகன் சக்தி வடிவேல் (வயது 26), கோவை காளிபாளையம் ராம்குமார் (வயது 54) ஆகிய இருவரையும் கைது செய்து ஈரோடு அழைத்து வந்தனர். 

பின்னர், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து நான்கு செல்போன்கள், ஒரு வங்கி பாஸ் புத்தகம், 13 செக் புத்தகங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பகுதி நேர வேலை ஆசை காட்டி, இவர்கள் நடத்தி வந்த நிறுவனத்தின் மூலம், இந்திய அளவில் ரூ.10 கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதுபோல, ஆன்லைனில் பகுதி நேர வேலை என ஆசை காட்டி இந்த போலி நிறுவனங்கள் நாடு முழுவதும் ரூ.10 கோடிக்கும் அதிகமாக மோசடியில் ஈடுபட்டிருப்பதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் மேலும் கூறுகையில், ஆன்லைன் வேலைவாய்ப்பு, கிரெடிட் கார்டு லோன், ஏடிஎம் ரினிவல் போன்றவற்றிக்காக வரும் லிங்க் மற்றும் ஓ.டி.பி. ஆகியவற்றை பொதுமக்கள் செல்போனில் பகிர வேண்டாம்.

ஒரு வேளை சைபர் கிரைம் ஆன்லைன் மோசடி மூலமாக பண இழப்பு ஏற்பட்டால் 24 மணி நேரத்திற்குள் சைபர் கிரைம் உதவி எண் 1930 மற்றும் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் ஆகியவற்றில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றனர்.
தமிழக முன்னாள் ஆளுநர் ரோசையா அவர்களின் 91 வது பிறந்தநாள் விழா.

தமிழக முன்னாள் ஆளுநர் ரோசையா அவர்களின் 91 வது பிறந்தநாள் விழா.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

தமிழக முன்னாள் ஆளுநர் ரோசையா அவர்களின் 91 வது பிறந்தநாள் விழா...

ஜூலை 4-ம் தேதியான இன்று, தமிழக முன்னாள் ஆளுநர் ரோசையா அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் அவரின் 91 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
கொனிஜெடி ரோசய்யா எனும் இவர், (4 ஜூலை 1933 - 4 டிசம்பர் 2021) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார், அவர் 2009 முதல் 2010 வரை ஆந்திரப் பிரதேசத்தின் 15 வது முதலமைச்சராக பணியாற்றினார். [1] [2] [3] அவர் 2011 முதல் தமிழக ஆளுநராகவும் பணியாற்றினார் . 2016 வரை மற்றும் இரண்டு மாதங்களுக்கு கர்நாடக ஆளுநர் (கூடுதல் பொறுப்பு). அவர் முன்பு இந்திய தேசிய காங்கிரஸில் இருந்து பல முறை எம்.எல்.சி , எம்.எல்.ஏ மற்றும் எம்.பி.யாக இருந்தார் மற்றும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தனது அரசியல் வாழ்க்கையில் பல அமைச்சர் பதவிகளை கையாண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
அவரது பிறந்த நாளான இன்று சேலத்தில் பல்வேறு விருதுகளை பெற்று சிறந்த சமூக சேவகராக விளங்கும் ஆரிய வைசிய முன்னேற்ற பேரவையின் தலைவரும், தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் நிறுவனருமான Dr. நாகா அரவிந்தன் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.