திங்கள், 8 ஜூலை, 2024

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக செயல்பட்டால் இரட்டை இலை சின்னம் பறிபோகும் அடுத்த தேர்தலோடு கட்சியும் காணாமல் போகும் என்று அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக செயல்பட்டால் இரட்டை இலை சின்னம் பறிபோகும் அடுத்த தேர்தலோடு கட்சியும் காணாமல் போகும் என்று அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி தெரிவித்தார்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக செயல்பட்டால் இரட்டை இலை சின்னம் பறிபோகும் அடுத்த தேர்தலோடு கட்சியும் காணாமல் போகும் என்று அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி தெரிவித்தார்.


அதிமுக முன்னாள் சிவாஜி புகழேந்தி சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் விரைவில் அதிமுக ஒருங்கிணையும் ; அதற்காக ஒன்றியம் வாரியாக சென்று வருவதாகவும் தெரிவித்தார். அதிமுக பொது எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சனம் செய்த புகழேந்தி அவரது தலைமையில் அதிமுக செயல்பட்டால் இரட்டை இலை சின்னம் பறிபோவதோடு அடுத்த தேர்தலும் கட்சியின் காணாமல் போய்விடும் என்று தெரிவித்தார். பாமக பாஜக நாம் தமிழர் என அனைத்து கட்சிகளும் எம்ஜிஆர் ஜெயலலிதா பெயரின் புகழ் பாடி மக்களை சந்திப்பது இயக்கத்திற்கு கிடைத்த பெருமை என்றும் அவர் கூறினார். 
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
திராவிட இயக்கம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று விமர்சனம் செய்தார்;
தனித்துவத்தோடு இயக்கத்தை நடத்தும் சீமான் தற்போது ஏன் ஷேக் ஆகிறார் ? சீமானிடம் ஏன் இந்த மாற்றம் ? என்றும் புகழேந்தி கேள்வி எழுப்பினார்.
பழனிசாமி என்று கூறினால் எதிர்த்துதான் மக்கள் ஓட்டு போடுவார்கள் என்று சீமான் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.  
அண்ணாமலை பெரியாரின் படத்தை எடுத்துக் கொண்டு வந்தால்தான் தமிழ்நாட்டில் பாஜக வளரும் என்றும் புகழேந்தி கூறினார்.

ஈரோடு மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 372 மனுக்கள் அளிப்பு

ஈரோடு மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 372 மனுக்கள் அளிப்பு

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (8ம் தேதி) நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 372 மனுக்கள் பெறப்பட்டன.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், குடிநீர் இணைப்பு, ஓய்வூதியம், இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 372 மனுக்கள் பெறப்பட்டன.

பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 6 நபர்களுக்கு மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள், ஆட்டிசம் குறைபாடுடையவர்கள், பல்வகை ஊனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சட்டப்பூர்வ பாதுகாவலர் நியமனச்சான்றிதழ்கள் மற்றும் ஒரு மாற்றுத்திறனாளிக்கு திருமண நிதியுதவியாக 8 கிராம் தங்கம் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, உதவி ஆணையர் (கலால்) ஜீவரேகா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நாடு முழுவதும் நடைபெற்று வரும் சாதிய ஆணவ படுகொலைகள் இனி எங்கும் நடைபெறக்கூடாது. சேலத்தில் நடைபெற்ற ஆதித்தமிழர் பேரவை கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

நாடு முழுவதும் நடைபெற்று வரும் சாதிய ஆணவ படுகொலைகள் இனி எங்கும் நடைபெறக்கூடாது. சேலத்தில் நடைபெற்ற ஆதித்தமிழர் பேரவை கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

 
சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழக முற்பட நாடு முழுவதும் சாதிய படுகொலைகள் இணையும் நடைபெறக் கூடாது... சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் மத்திய அரசுக்கு எச்சரிக்கை...

நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்பன ஒரு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் ஆதித்தமிழர் பேரவை சார்பில் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆதி தமிழர் பேரவையின் சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.டி.ஆர்.சந்திரன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை நிலைய செயலாளர் வீர வேந்தன், மாநில தொழிலாளர் அணி துணை செயலாளர் கண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட தலைவர் சையது மூஸா, திராவிடர் கழக மாவட்ட தலைவர் இளவழகன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் தங்கராசு, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் ஷேக் முகமது, மதிமுக மாநகர செயலாளர் அருள்மாது, தமிழக வாழ்வுரிமை கட்சியின் சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அமிர்தராஜ் மற்றும் திராவிடர் இயக்க தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் சுந்தரவதனம் உள்ளிட்ட ஒரு முன்னிலை வாங்கித் தந்தார். 
தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக உட்பட நாடு முழுவதும் நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வலியுறுத்தியும், நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்றும் கோவிலாங்குளம் அழகேந்திரன் ஆணவ படுகொலை சம்பவத்தை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். 
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து ஆதித்தமிழர் பேரவையின் மாநில இளைஞரணி செயலாளர் சேலம் மத்திய மாவட்ட செயலாளருமான ஏ.டி.ஆர்.சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கல்லூரி மாணவ மாணவிகளின் மருத்துவ துறையின் எதிர்கால கனவை சீர்குலைத்து வரும் நீட் தேர்வு முறையை தமிழகம் உட்பட நாடு முழுவதும் ரத்து செய்யாத மத்திய அரசை கண்டிவதாக கூறியவர், இந்தியா முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு முறையை தற்போது வரை எடுக்காமல் இருப்பது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று குறிப்பிட்ட அவர், சமீபகாலமாக இந்தியா உட்பட தமிழகத்தில் நிகழ்ந்து வரும் சாதிய ஆணவ படுகொலைகள் இனியும் நடைபெறக்கூடாது என்றும் இதற்கு காரணமானவர்களை இரும்பு கரம் கொண்டு மத்திய மாநில அரசுகள் கைது செய்ய வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். 
இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாவட்ட ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகள் உட்பட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 7 ஜூலை, 2024

பி.எஸ்.பி. தமிழ்நாடு மாநில தலைவர் படுகொலையை கண்டித்து, சேலத்தில் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தினர் சாலையில் படுத்து மறியல்.

பி.எஸ்.பி. தமிழ்நாடு மாநில தலைவர் படுகொலையை கண்டித்து, சேலத்தில் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தினர் சாலையில் படுத்து மறியல்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர்  ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை  மர்ம நபர்களால் வெற்றி படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவத்திற்கு தமிழகம் முழுவதும் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் உள்ள கட்சித் தலைவர்கள் கண்டனங்களை இதனை அடுத்து சேலத்தில் அம்பேத்கர் மக்கள் இயக்கம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளின் சார்பில் மாநிலத் தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை தலைமையில் நான்கு ரோடு கட்சி அலுவலகத்தில் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் தமிழகம் முழுவதிலும் நடைபெற்று வரும் படுகொலைகளை கண்டித்தும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. 
மேலும் அனைத்து அமைப்பின் நிர்வாகிகளும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து இரங்கல் கூட்டம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர் சங்க தலைவர்  இமயவரம்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் காஜாமைதீன், ஆதித்தமிழர் பேரவை சந்திரன், தமிழக நாயுடு பேரவை மாநில தலைவர் வழக்கறிஞர் குணசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மோகன், திராவிடர் விடுதலைக் கழகம் மாவட்ட செயலாளர் டேவிட், சாதிய அற்றோர் பேரவை  பொன் சரவணன், மக்கள் தேசம் கட்சி மாநில செயலாளர் சுலைமான்,மாவட்ட செயலாளர் பிரேம்குமார், தமிழ் புலிகள் கட்சி உதய பிரகாஷ், திராவிட தமிழர் கட்சி மாவட்ட தலைவர் இளங்கோவன், இந்திய குடியரசு கட்சி வடிவேல் முருகன்,உதய சூரியன், கோ.சீனிவாசன் அம்பேத்கார் மக்கள் இயக்கம் சேலம் மாவட்ட தலைவர் அம்பேத்கார், மாவட்ட செயலாளர் சித்தையன், மாவட்ட பொருளாளர் ரமேஷ் உட்பட பல்வேறு அமைப்புகளை  சார்ந்த ஏராளமான கலந்து கொண்டனர்.

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட விவகாரம். சேலத்தில் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆம்ஸ்ட்ராங் உருவப்படத்திற்கு அஞ்சலி.

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட விவகாரம். சேலத்தில் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆம்ஸ்ட்ராங் உருவப்படத்திற்கு அஞ்சலி.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு. 


பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு சென்னையில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

சென்னையில் நடைபெற்ற இந்த சம்பவம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
இதனை எடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் உட்பட பல்வேறு கட்சியினரும் பல்வேறு அமைப்பு மற்றும் இயக்கங்களைச் சார்ந்த தலைவர்களும் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு மற்றும் தமிழ்நாடு தொழிலாளர் விடுதலை முன்னணி ஆகியவற்றின் சார்பில் சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் திருஉருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சேலம் மாவட்ட நூலகம் அருகே அமைக்கப்பட்டுள்ள அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவருவ சிலை முன்பாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு கூட்டு நடவடிக்கையின் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் சரசுராம் ரவி தலைமையில் நடைபெற்ற இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில், மாரியப்பன், பொன் சரவணன், வின்ணென்ட், மாரியப்பன், சஞ்சீவி மற்றும் கண்ணன் மூடிட்டு ஒரு கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியவரோடு பல்வேறு முழக்கங்களையும் எழுப்பினர்.
 
இது கறித்து தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சரசுராம் ரவி செய்தியாளர்களிடம் கூறுகையில், சென்னையில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை தங்களது அமைப்பு வன்மையாக கண்டிப்பதாகவும், சமீபகாலமாக தலித் போராளிகளை குறிவைத்து தமிழகத்தில் அரங்கேறி வரும் படுகொலை சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும், ஏற்கனவே ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று காவல்துறையில் பலமுறை புகார் தெரிவித்தும் தற்பொழுது வரை நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இந்த படுகொலை சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் இனியும் தமிழகத்தில் இது போன்ற துயர சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.