திங்கள், 8 ஜூலை, 2024

கோபி திட்டமலை மாணவிகள் விடுதியில் நடக்கும் உல்லாசம்: ஆட்சியரிடம் புகார்

கோபி திட்டமலை மாணவிகள் விடுதியில் நடக்கும் உல்லாசம்: ஆட்சியரிடம் புகார்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோபி திட்டமலை கல்லூரி மாணவி அளித்த மனு விவரம்:- 

நான் திட்டமலை கல்லூரி மாணவிகள் விடுதியில் தங்கி, அரசு கலை அறிவியல் கல்லூரி திட்டமலையில் பயின்று வருகிறேன். திட்டமலை விடுதி மற்றும் பவானி மகளிர் விடுதிக்கு வார்டனாக புவனா என்பவர் பணியாற்றி வருகிறார். விடுதிக்கு காப்பாளர் புவனா ஒரு ஆண் நண்பருடன் அடிக்கடி வருவார்.

அடிக்கடி இவர்கள் விடுதிக்கு வந்து தனி அறையில் கதவைத் தாளிட்டு உள்ளே வெகு நேரம் இருப்பது எங்களுக்கு மிகவும் கேவலமாக இருந்தது. ஆகவே, இதனை புகார் அளிக்க வேண்டும் என்று போட்டோ எடுத்தேன். நான் எடுத்த போட்டோவை மேலதிகாரிகள் விடுதிக்கு ஆய்வுக்கு வந்தால் காண்பித்திட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் விடுதிக்கு ஆய்வுக்கு அதிகாரிகள் யாரும் வரவில்லை. ஆகவே நான் எடுத்த போட்டோவை காண்பிக்க முடியவில்லை. என்னைப் போலவே மேலும் மூன்று மாணவிகளை வெளியில் அனுப்பி உள்ளனர்.

விடுதியில் நடைபெறும் வார்டனின் பாலியல் ரீதியான செயல்களை நாங்கள் பார்ப்பதால் இளம் வயதுள்ள எங்களுக்கு மிகவும் பயத்தை ஏற்படுத்துகிறது. விடுதியில் பயத்துடனே நாட்களை கழிக்க வேண்டி உள்ளது. நாங்கள் தங்கியுள்ள விடுதியில் அதிகபட்சமாக 25 மாணவிகளே தங்க இடம் உண்டு. ஆனால் 100 மாணவிகள் தங்கி உள்ளதாக பொய்யான வருகையை எடுத்து அரசு பணத்தை கொள்ளையடிக்கின்றனர்.

ஆனால் போட்டோ எடுத்த காரணத்தால் என்னை மட்டும் விடுதியில் இருக்கக் கூடாது என்று வலுக்கட்டாயமாக துன்புறுத்தி கடிதம் எழுதி வாங்கிவிட்டு வெளியில் அனுப்பி விட்டார்கள். இந்த ஆண்டு நான் இறுதி ஆண்டு படித்து வருகிறேன். என்னை வெளியேற்றியதால் என் ஊரில் இருந்து பேருந்து மூலம் வந்து படித்து செல்வது மிகவும் கடினமாக உள்ளது.

ஆகவே என்னை மீண்டும் விடுதியில் தங்க அனுமதி தருமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஈரோட்டில் கடைக்குள் புகுந்து ஊழியரை தாக்கிய வாலிபர்கள் கைது

ஈரோட்டில் கடைக்குள் புகுந்து ஊழியரை தாக்கிய வாலிபர்கள் கைது

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஓட்டமெத்தை பகுதியை சேர்ந்தவர் ராமன் (வயது 27). இவர் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி பகுதியில் உள்ள இரும்பு கடையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 4ம் தேதி ராமன் கடையில் இருந்தார். அப்போது , மழை பெய்ததால் நான்கு வாலிபர்கள் மழையில் நனைந்தபடி கடைக்குள் நுழைந்தனர். அவர்கள் குடிபோதையில் இருந்ததால், ராமன் அவர்களை கடைக்குள் வராமல் ஓரமாக நிற்கும்படி கூறினார்.

இதனால் ராமனுக்கும், அந்த வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர்கள் ராமனை பீர் பாட்டிலால் தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து ராமன் கொடுத்த புகாரின்பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வீரப்பன்சத்திரம் கொத்துக்காரர் தோட்டம் பகுதியை சேர்ந்த தர்மலிங்கத்தின் மகன் தமிழ்செல்வன் (வயது 29), அதே பகுதியை சேர்ந்த கணேசனின் மகன் வெங்கடேஷ் (வயது 29), அசோகபுரம் தேவராயன்காடு பகுதியை சேர்ந்த பெரியசாமியின் மகன் சத்தியபிரகாஷ் (வயது 24), அய்யன்காடு பகுதியை சேர்ந்த துரைசாமியின் மகன் அரவிந்த் (வயது 19) ஆகியோர் ராமனை தாக்கியது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, அவர்கள் நால்வரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஈரோட்டில் ஓடும் பேருந்தில் செல்போன், ஐபேடு திருடிய இளைஞர் கைது

ஈரோட்டில் ஓடும் பேருந்தில் செல்போன், ஐபேடு திருடிய இளைஞர் கைது

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த சிவகிரி பட்டேல் வீதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 36). பெங்களூரு கல்லூரி பேராசிரியர். இவர் நேற்று காலை சிவகிரியில் இருந்து ஈரோட்டிற்கு தனியார் நகர பேருந்தில் வந்தார்.

ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் இறங்கியபோது அவர் வைத்திருந்த கைப்பையை காணவில்லை. அதில், செல்போன், ஐபேடு ஆகியவை வைத்திருந்தார். பின்னர், இதுகுறித்து கிருஷ்ணகுமார் கொடுத்த புகாரின்பேரில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கொடுமுடி கறிக்கடை வீதியை சேர்ந்த ரங்கராவின் மகன் ராமசந்திரன் (வயது 20) என்பவர் ஓடும் பேருந்தில் இருந்து அந்த பையை திருடியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, ராமசந்திரனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து செல்போன், ஐபேடு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

பின்னர், ராமசந்திரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் நாளை (10ம் தேதி) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (10ம் தேதி) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (10ம் தேதி) புதன்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாளை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்துறை சிப்காட் - I துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- பெருந்துறை கோட்டத்தைச் சேர்ந்த சிப்காட் வளாகம் தெற்கு பகுதி தவிர, வாவிக்கடை, திருவாச்சி, சோளிபாளையம், கருமாண்டிசெல்லிபாளையம், கந்தாம்பாளையம், கந்தாம்பாளையம்புதூர், திருவேங்கிடம்பாளையம் புதூர், வெள்ளியம்பாளையம், சுள்ளிப்பாளையம், பெருந்துறை நகர் தெற்கு பகுதி தவிர, சென்னிமலை ரோடு, குன்னத்தூர் ரோடு, பவானிரோடு, சிலேட்டர்நகர், ஓலப்பாளையம், ஓம் சக்தி நகர் மற்றும் மாந்தம்பாளையம்.

புஞ்சை புளியம்பட்டி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- புஞ்சைபுளியம்பட்டி, ஆம்போதி, ஆலந்தூர், காரப்பாடி, கணுவக்கரை, நல் லூர், செல்லப்பம்பாளையம், ஆலம்பாளையம், ராமநாதபுரம், கள்ளிப்பாளையம், ஆதம்பாளையம், பொன்னப்பாளையம் மற்றும் ரங்கநாயக்கன்பாளையம்.

பவானிசாகர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- பவானிசாகர், கொத்தமங்கலம். வெள்ளியம்பாளையம்புதூர், கணபதி நகர், சாத்திரக்கோம்பை, ராமபயலூர், புதுப்பீர்க்கடவு, பண்ணாரி. ராஜன் நகர் திம்பம், கேர்மாளம், கோட்டமளம், மேட்டூர் மற்றும் பகுத்தம்பாளையம்.

கெஜலட்டி, தாளவாடி, தொப்பம்பாளையம் துணை மின் நிலையங்கள் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- எரங்காட்டூர், கரிதொட்டாம்பாளையம், தொப்பம்பாளையம், கோடேபாளையம், நால்ரோடு, முடுக்கன்துறை, தொட்டம்பாளையம், நந்திபுரம் அல்லிமோயர், சித்ராம்பட்டி, கள்ளம்பாளையம், மேலூர், கீழூர் புதுக்காடு, தெங்குமராட்டா, தொட்டக்காஜனூர், மல்லன்குழி, சூசைபுரம், தாளவாடி, சிமிட்டகள்ளி, பனக்கள்ளி, கெட்டவாடி, அருள்வாடி மற்றும் தலமலை.

ஈரோட்டில் ஆடிட்டர் வீட்டில் கொள்ளையடித்த 3 பேர் கைது: 90 பவுன் நகை, ரூ.19 லட்சம் மீட்பு

ஈரோட்டில் ஆடிட்டர் வீட்டில் கொள்ளையடித்த 3 பேர் கைது: 90 பவுன் நகை, ரூ.19 லட்சம் மீட்பு

ஈரோடு சூரம்பட்டி என்.ஜி.ஜி.ஓ.காலனி 7வது வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 69). ஆடிட்டர். இவரது மனைவி சாதனா. இருவரும் கடந்த ஜூன் 8ம் தேதி காலையில் வீட்டை பூட்டி விட்டு தேனியில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்றனர்.

அன்றிரவு ஆடிட்டர் சுப்பிரமணியின் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் 235 பவுன் நகை மற்றும் ரூ.48 லட்சத்தை கொள்ளையடித்து தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில் ஈரோடு தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதில், கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பழைய குற்றவாளி ஒருவர் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இந்தநிலையில் ஆடிட்டர் சுப்பிரமணியனின் கார் டிரைவரான ஈரோடு திண்டல் காரப்பாறை மெடிக்கல் நகரை சேர்ந்த சத்யன் (வயது 34) என்பவர் தலைமறைவானார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த சத்யனை போலீசார் தேடி பிடித்து கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், ஆடிட்டர் வீட்டில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். இவருடன் சேர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் ஆலப்பள்ளி ரோடு திருமலை நகரை சேர்ந்த அருண்குமார் (வயது 36), வேலூர் மாவட்டம் குடியாத்தம் மோடி குப்பம் ஆர்.கொள்ளப்பள்ளி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சந்திரனின் மகன் விக்னேஷ் (வயது 24) ஆகியோர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அருண்குமார். விக்னேஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். கைதானவர்களிடமிருந்து 90 பவுன் நகை, ரூ.19 லட்சம் மற்றும் கொள்ளை அடிக்க பயன்படுத்திய கார் பெங்களூரில் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், செல்போன் டவரில் பதிவான எண்களை வைத்து கொள்ளைக்கு உடந்தையாக இருந்த நபர்களை பிடித்துள்ளோம். கொள்ளையில் நேரடியாக ஈடுபட்ட நபர், செல்போனை சுவிட்ச் ஆப் செய்து தலைமறைவாகி உள்ளார். விரைவில் அவரையும் பிடித்து விடுவோம் என்றனர்.
பவானி அருகே லட்சுமிநகரில் மேம்பாலம் அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்

பவானி அருகே லட்சுமிநகரில் மேம்பாலம் அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்

பவானி அருகே தேசிய நெடுஞ்சாலையில் லட்சுமிநகரில் மேம்பாலம் அமைக்க வேண்டும் பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் 
தேசிய நெடுஞ்சாலையில், ஈரோடு மாவட்டம் லட்சுமிநகர் அருகே மேம்பாலம் அமைக்க வேண்டும் என விஜயகுமார் தலைமையில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கைகளில் பதாதைகளை ஏந்தியவாறு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் முதல் கோவை தேசிய நெடுஞ்சாலையில் லட்சுமிநகர் பகுதியில் மேம்பாலம் அமைப்பது தொடர்பாக நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாவதோடு, விபத்துக்களும் அதிக அளவில் நடந்துவருகிறது.

ஆகவே பொதுமக்கள் ஆகிய நாம் நம் உயிர் காக்க மத்திய மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பொதுமக்கள் விவசாயிகள் பல்வேறு அமைப்பினர் என 500க்கும் மேற்ப்பட்டோர் திரண்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கைகளில் பலதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அந்தப் பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். இதனால் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஓபிஎஸ் பற்றி எந்தவித கேள்விக்கும் இனி பதில் இல்லை... அவரைப் பற்றி கேள்விக்கு எந்த பதிலளித்தாலும் திரித்து செய்தி வருகிறது.. சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காட்டம்..

ஓபிஎஸ் பற்றி எந்தவித கேள்விக்கும் இனி பதில் இல்லை... அவரைப் பற்றி கேள்விக்கு எந்த பதிலளித்தாலும் திரித்து செய்தி வருகிறது.. சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காட்டம்..

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் ஓமலூர் அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது,...ஓபிஎஸ் பற்றி எந்தவித கேள்விக்கும் இனி பதில் இல்லை... அவரைப் பற்றி கேள்விக்கு எந்த பதிலளித்தாலும் திரித்து செய்தி வருகிறது என தெரிவித்தார்.

சென்னையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஐஜியை மாற்றினால் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்து விடாது.. நிர்வாகம் சரியாக இருந்தால் மட்டுமே சட்டம் ஒழுங்கை காக்கமுடியும்;இன்றைக்கு காவல்துறை பொறுப்பை  முதலமைச்சர் வகித்து வருகிறார். சரியான முறையில் திறமையாக செயல்படுத்தி இருந்தால் சட்டம் ஒழுங்கு காக்கப்பட்டு இருக்கும்.
பொம்மை முதலமைச்சர், திறமையற்ற முதலமைச்சர் தமிழகத்தை ஆளுகின்ற காரணத்தால் காவல்துறை அதிகாரிகளுக்கு முழுமையான சுதந்திரம் கிடையாது.அதனால் முழுமையாக சட்டம் ஒழுங்கை பாதுகாக்கின்ற நிலை இல்லை.. அதனால் காவல்துறையினரால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை; எங்கு பார்த்தாலும் போதைப் பொருட்கள் விற்பனை அதிகமாக உள்ளது. குறிப்பாக கொலை,கொள்ளை,திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை நடந்த வண்ணம் உள்ளது..எங்கு பார்த்தாலும் ரவுடிகளின் ராஜ்யமாக இருந்து வருகிறது. இதை ஒடுக்க வேண்டும் என்றால் காவல்துறையிற்கும் முழு சுதந்திரம் வழங்கப்பட்டால் மட்டுமே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு ரவுடிகளை அடக்க முடியும் என்றார். மேலும்
தமிழகத்தில் பொதுமக்கள், பெண்கள், அரசியல் கட்சி பொறுப்பாளர்களுக்கும் பாதுகாப்பு இல்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் ஆம்ஸ்ட்ராங் படுகொலை என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராக இருந்து வந்தார். இந்த கொலை திட்டமிட்டு தான் அரங்கேற்றி உள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகள் சரணடைந்துள்ளனர்;கைது செய்யப்படவில்லை..அவர்கள் உண்மையான குற்றவாளி அல்ல; போலி குற்றவாளி.. எனவே உண்மை 
குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.உண்மை குற்றவாளி குறித்த சந்தேகங்களை போக்குவது அரசின் கடமையாகும் எனவும் தெரிவித்தார்.
திறமையற்ற முதலமைச்சர் ஆண்டு கொண்டு இருக்கிறார்; அனைத்து இலாக்காக்களும் தேய்ந்து போய் இருந்து வருகிறது. எந்த துறையிலும் வளர்ச்சி கிடையாது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது.. இதற்கு தீர்வு காண திமுக ஆட்சியிலும் திறமை இல்லை எனவும் விமர்சனம் செய்தார்.
தமிழக முதல்வர் வெளிநாட்டு பயணம் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளிவரவில்லை...
திமுகவின் கோவை,நெல்லை  மேயர்கள் ராஜினாமா செய்தது குறித்து திமுகவினருக்கு மட்டுமே தெரியும்.. இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மட்டும் தான் தெரியும்.. எல்லாம் உட்கட்சி பிரச்சினை;பாகம் பிரிப்பது குறித்த சண்டை என்று  நினைக்கிறேன். அவருடன் ஒற்றுமை கிடையாது. இங்கு மட்டும் இல்லை, காஞ்சிபுரத்திலும் இவ்வாறு தான் இறுதி வருகிறது என்றார்.இதனிடையே குழப்பத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி என்று  இபிஎஸ்? என்று கேள்வி எழுப்பினார்.
ஓபிஎஸ் குறித்து கேள்விக்கு, வெளியேற்றப்பட்டவர்கள் குறித்த கேள்வி கேட்டால் விறுவிறுப்பான செய்திக்காக எங்களிடம் பதில் எதிர்பார்க்கிறார்கள்..ஜெயலலிதா இருந்தபோது அவரை எதிர்த்த முன்னாள் நிர்வாகிகள் அனைவரும் கட்சியில் இணைக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் இணைக்கப்படுவாரா என்ற கேள்விக்கு? மற்றவர்கள் எல்லாம் கட்சி அலுவலகத்தை உடைக்கவில்லை, கட்சிக்காரனை அடிக்கவில்லை, கட்சி வாகனத்தை நொறுக்கவில்லை,எந்த பொருளையும் தூக்கிச் செல்லவில்லை என்று பதில் அளித்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் சிபிசிஐடி ஆய்வு செய்து வருகின்றனர் குறித்த கேள்விக்கு, 
செந்தில் பாலாஜி சிறையில் இருந்து கொண்டிருக்கிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே அதிமுகவின் பெயர் வர வேண்டும் என்பதற்காக
வேண்டுமேன்றே திட்டமிட்டு அதிமுக நிர்வாகிகள் மீது வழக்கு போடுவதற்காக ஜோடிக்கப்பட்ட வழக்காக தான் பார்க்கப்படுகிறது இது உண்மை அல்ல எனவும் தெரிவித்தார்.