செவ்வாய், 9 ஜூலை, 2024

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி குற்றவியல் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து சேலம் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ளது தபால் நிலையம் முன்பு பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம்.  மத்திய அரசு திரும்ப பெரும் வரை தங்களது போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜெ.மு. இமயவரம்பன் எச்சரிக்கை.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி குற்றவியல் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து சேலம் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ளது தபால் நிலையம் முன்பு பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம். மத்திய அரசு திரும்ப பெரும் வரை தங்களது போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜெ.மு. இமயவரம்பன் எச்சரிக்கை.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி குற்றவியல் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து கோரிக்கை பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம். மத்திய அரசு திரும்ப பெரும் வரை போராட்டம் தீவிர படுத்தப்படும் என்றும்  எச்சரிக்கை.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 10-வது  நாட்களாக நீதிமன்றங்களை புறக்கணித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  அதன் அடிப்படையில் சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில்  நீதிமன்றங்களை புறக்கணித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். 
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க முப்பெரும்  குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக சேலம் நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் தபால் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் மாவட்ட குற்றவியல்  வழக்கறிஞர்கள்  சங்க தலைவர் இமயவரம்பன்  தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக கைகளில் பதாகைகளை ஏந்தி மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
இந்த போராட்டம் குறித்து சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் இமயவரம்பன் செய்தியாளர்களிடம் கூறுகையில், பொது மக்களை அச்சுறுத்தும் வகையிலும் பாதிக்கப்படும் வகையிலும் அமைந்துள்ள இந்த மூன்று சட்ட திருத்தங்களை மத்திய அரசு திரும்ப பெரும் வரை தங்களது போராட்டம் தீவிரமாக நடைபெறும் என்றும் எச்சரித்துள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் 
முருகன் பொருளாளர் கண்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் என 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று சட்ட திருத்தங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
சென்னையில் படுகொலை செய்யப்பட்ட BSP மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உருவப்படத்திற்கு, சேலம் முற்போக்கு வழக்கறிஞர்கள் சங்கத்தினர் மலரஞ்சலி.

சென்னையில் படுகொலை செய்யப்பட்ட BSP மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உருவப்படத்திற்கு, சேலம் முற்போக்கு வழக்கறிஞர்கள் சங்கத்தினர் மலரஞ்சலி.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு. 

சென்னையில் படுகொலை செய்யப்பட்ட BSP மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உருவப்படத்திற்கு, சேலம் முற்போக்கு வழக்கறிஞர்கள் சங்கத்தினர் மலரஞ்சலி.


பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்  சென்னையில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

சென்னையில் நடைபெற்ற இந்த சம்பவம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
இதனை அடுத்து பல்வேறு கட்சியினரும் பல்வேறு அமைப்பு மற்றும் இயக்கங்களைச் சார்ந்த தலைவர்களும் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, சேலம் வழக்கறிஞர்கள் முற்போக்கு சங்கத்தின் சார்பில் சேலம் நீதிமன்ற நுழைவாயிலில் BSP மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ் ராங் அவர்களின் உருவப்படம் வைக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

வழக்கறிஞர் சசிகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த மலர் அஞ்சலி நிகழ்ச்சியில், வழக்கறிஞர்கள் சந்தியூர் பார்த்திபன், ஐயப்ப மணி, பிரதாபன், நாச்சிமுத்து ராஜா, வீரபாண்டி ரமேஷ், கிருஷ்ணராஜ் இம்தியாஸ் கான் மற்றும் ஷாஜகான்  உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செய்தனர். தொடர்ந்து இந்த படுகொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு  முழக்கங்களையும் எழுப்பினர்.
 

இது கறித்து வழக்கறிஞர்கள் சசிகுமார் மற்றும் சந்தியூர் பார்த்திபன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சென்னையில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை வன்மையாக கண்டிப்பதாகவும், சமீபகாலமாக தலித் போராளிகளை குறிவைத்து தமிழகத்தில் அரங்கேறி வரும் படுகொலை சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும், ஏற்கனவே ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று காவல்துறையில் பலமுறை புகார் தெரிவித்தும் தற்பொழுது வரை நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இந்த படுகொலை சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் இனியும் தமிழகத்தில் இது போன்ற துயர சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். மேலும் இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக சம்பந்தமே இல்லாத சிலரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் இந்த கொலை சம்பவத்தை முழுமையாக விசாரிக்க சிபிஐ மற்றும் NIA விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
தாளவாடி வனப்பகுதியில் முன்னாள் ஊராட்சி செயலாளரை கொல்ல முயன்ற இருவர் கைது

தாளவாடி வனப்பகுதியில் முன்னாள் ஊராட்சி செயலாளரை கொல்ல முயன்ற இருவர் கைது

கரூர் மாவட்டம் புகளூர் அருகே உள்ள கே.பரமத்தியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 42). இவர், ஆரியூர் ஊராட்சி முன்னாள் செயலாளர் பணியில் இருந்து தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். இதனால், டிரைவர் வேலைக்கு சென்று விட்டார்.

குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி மற்றும் மகனை பிரிந்த நிலையில், கார்வழி அத்தப்பகவுண்டன் வலசு காலனியைச் சேர்ந்த ஜெயகாளியம்மாள் (வயது 30) என்பவருடன் சேர்ந்து வாழ்ந்தார். ஜெயகாளியம்மாளின் கணவரும் இறந்து விட்டார். இவருக்கு இரு பெண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில், கடந்த ஆண்டு சரவணனுக்கும், ஜெயகாளியம்மாளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், சரவணன் இவரையும் பிரிந்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயகாளியம்மாள் சரவணனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.

இதற்காக, தேனி மாவட்டம் பெரியகுளம் செங்குளத்துபட்டியைச் சேர்ந்த ஜெயகாளியம்மாளின் உறவினரான பால்பாண்டி (வயது 43), ஈரோடு மாவட்டம் தாளவாடி சிக்கள்ளியைச் சேர்ந்த பால்பாண்டியின் நண்பரான கங்கப்பா (வயது 60) ஆகியோரை ஏவினார்.

அதனைத் தொடர்ந்து, பால்பாண்டி சரவணனிடம் உங்களையும், ஜெயகாளியம்மாளையும் சேர்த்து வைக்கிறேன் எனக் கூறி சிக்கள்ளி வனப்பகுதிக்கு சரவணனை அழைத்துச் சென்றார். அங்கு, பால்பாண்டி, கங்கப்பா ஆகிய இருவரும் சரவணனை கட்டையால் தாக்கி, கை, கால்களை கம்பியால் கட்டி கொல்ல முயன்றனர்.

சரவணன் அவர்களிடம் இருந்து தப்பி அருகே இருந்த விவசாய தோட்டத்திற்கு சென்று ரமேஷ் என்பவரிடம் இது குறித்து கூறியுள்ளார். இதனையடுத்து, ரமேஷ் உடனடியாக தாளவாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அப்பகுதியில் இருந்த பால்பாண்டி மற்றும் கங்கப்பா இருவரையும் பிடித்து கைது செய்தனர்.

பின்னர், சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, இருவரையும் கிளை சிறையில் அடைத்தனர். மேலும், ஜெயகாளியம்மாளை போலீசார் தேடி வருகின்றனர். முன்னாள் ஊராட்சி செயலாளரை வனப்பகுதியில் வைத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தாளவாடி மலைப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நாளை (11ம் தேதி) மின்தடை பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (11ம் தேதி) மின்தடை பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டம் கொடுமுடி, ஈரோடு மேட்டுக்கடை ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை (11ம் தேதி) வியாழக்கிழமை நடக்கிறது. இதனால், நாளை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடுமுடி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசாம்பாளையம், பிலிக்கல்பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம், அரசம்பாளையம், சோளக்காளிபாளையம், நாகமநாயக்கன்பாளையம், நாகப்பாளையம், வள்ளியம்பாளையம் நீரேற்று நிலையம், கொளாநல்லி நீரேற்று நிலையம், வெள்ளோட்டம்பரப்பு நீரேற்று நிலையம், கொம்பனைபுதூர் நீரேற்று நிலையம், சத்திரப்பட்டி, சத்திரம், கருவேலம்பாளையம் மற்றும் வள்ளியம்பாளையம்.

மேட்டுக்கடை துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- நஞ்சனாபுரம், பவளத்தாம்பாளையம், தங்கம்நகர், அத்தப்பம்பாளையம், செந்தூர்கார்டன், வித்யாநகர், மேல்திண்டல், ஐத்ரேயாகாலனி, திண்டல், கீழ் திண்டல், பெருந்துறைரோடு, சக்திநகர், சிவன்நகர், சாமுண்டிநகர், அரவிந்தன்நகர், ஸ்ரீநகர், செல்வம்நகர், யாழ்நகர், யு.ஆர்.சி.நகர் மற்றும் ஓடைமேடு ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி குற்றவியல் வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களை புறக்கணித்து நுழைவு வாயிலில் கண்டன  ஆர்ப்பாட்டம். மத்திய அரசு திரும்ப பெரும் வரை போராட்டம் நடைபெறும் என்று சேலம்  வழக்கறிஞர்கள் சங்க தலைவர் விவேகானந்தன் பேட்டி.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி குற்றவியல் வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களை புறக்கணித்து நுழைவு வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம். மத்திய அரசு திரும்ப பெரும் வரை போராட்டம் நடைபெறும் என்று சேலம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் விவேகானந்தன் பேட்டி.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி குற்றவியல் வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களை புறக்கணித்து நுழைவு வாயிலில் கண்டன  ஆர்ப்பாட்டம். மத்திய அரசு திரும்ப பெரும் வரை போராட்டம் நடைபெறும் என்று சேலம்  வழக்கறிஞர்கள் சங்க தலைவர் விவேகானந்தன் பேட்டி.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 10-வது  நாட்களாக நீதிமன்றங்களை புறக்கணித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  அதன் அடிப்படையில் சேலம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில்  நீதிமன்றங்களை புறக்கணித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். 
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க முப்பெரும்  குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி சேலம் சங்கம் சார்பாக சேலம் நீதிமன்ற நுழைவு வாயிலில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம்  வழக்கறிஞர்கள்  சங்க தலைவர் விவேகானந்தன்  தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இந்த போராட்டம் குறித்து சேலம்  வழக்கறிஞர்கள் சங்க தலைவர் விவேகானந்தன் செய்தியாளர்களிடம் கூறுகையில், பொது மக்களை அச்சுறுத்தும் வகையிலும் பாதிக்கப்படும் வகையிலும் அமைந்துள்ள இந்த மூன்று சட்ட திருத்தங்களை மத்திய அரசு திரும்ப பெரும் வரை தங்களது போராட்டம் தீவிரமாக நடைபெறும் என்றும் எச்சரித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் வழக்கறிஞர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அந்தியூர், டி.என்.பாளையம் வனத்துறையினரை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

அந்தியூர், டி.என்.பாளையம் வனத்துறையினரை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே அந்தியூர் மற்றும் டி.என்.பாளையம் வனச்சரகத்தின் வனப்பகுதியை ஒட்டியுள்ள பட்டா நிலங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், வனப்பகுதியை ஒட்டியுள்ள நிலங்களுக்குள் அடிக்கடி யானை, பன்றி மற்றும் சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதுடன், அங்குள்ள கால்நடைகளை வேட்டையாடுவதும் வழக்கமாக உள்ளது.

இவ்வாறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும், வன விலங்குகளை தடுக்கும் விதமாக வனத்துறையினர் பொதுமக்களுடன் இணைந்து வனப்பகுதியை ஒட்டியுள்ள நிலங்களுக்குள் வன விலங்குகள் நுழைவதை தடுக்கும் நடவடிக்கையாக ஆங்காங்கே அகழி அமைத்தும் சில இடங்களில் குறைவழுத்த மின்வேலி அமைத்தும் பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், இந்த பாதுகாப்பு அரண்களை கடந்து வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் நுழைய முயற்சிக்கும் போது யானை, மான் உள்ளிட்ட விலங்குகள் உயிரிழக்க நேருகிறது. அவ்வாறு ஏற்படும் உயிரிழப்புகளுக்கு விவசாயிகளே பொறுப்பு என வனத்துறையினர் தன்னிச்சையாக முடிவெடுத்து சில விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

பட்டா நிலங்களுக்குள் நுழையும் வன விலங்குகளிடமிருந்து பொதுமக்களை பாதுகாக்க வனத்துறை ஏற்படுத்தியுள்ள தடுப்புகளில் சிக்கி உயிரிழக்கும் வனவிலங்குகளின் உயிரிழப்புகளுக்கு அப்பாவி விவசாயிகள் மீது வனத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதை கண்டித்து இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கள்ளி்ப்பட்டி அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளதாக அறிவித்தனர்.

இந்த அறிவிப்பின் படி, இன்று (9ம் தேதி) அந்தியூர் மற்றும் டி.என்.பாளையம் வனச்சரக எல்லையை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட விவசாயிகளும் பொதுமக்களும் ஒன்றிணைந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், பொய்யான வழக்குகளை பதிவு செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வனத்துறை அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

வனப்பகுதியை ஒட்டியுள்ள பட்டா நிலங்களில் வனவிலங்குகள் நுழைவதை தடுத்து நிறுத்திட போதுமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மொடக்குறிச்சி ஒன்றிய கிராம ஊராட்சிகளில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

மொடக்குறிச்சி ஒன்றிய கிராம ஊராட்சிகளில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (9ம் தேதி) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், புஞ்சைகாளமங்கலம் ஊராட்சியில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில், தேசிய தோட்டக்கலை இயக்கம் கீழ் திரு.அருள்சங்கர் என்பவர் ரூ.16.88 லட்சம் மானியத்தில், 4,000 ச.மீ. பரப்பளவில் பசுமை குடில் அமைக்கப்பட்டிருந்ததையும், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9 ஆயிரம் மானியத்தில் 1 ஹெக்டேர் பரப்பளவில், நிழற்கூரையில் வளர்க்கப்பட்டு வரும் துவரை நாற்றுகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, கணபதிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை ஆய்வு மேற்கொண்டு, அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் விபரம், பராமரிக்கப்படும் பதிவேடுகள், மருந்துகள் இருப்பு உள்ளிட்டவை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், சித்தமருத்துவ பிரிவில் நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறையினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து கணபதிபாளையம் ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் வருகை, எடை, உயரம், வழங்கப்படும் சத்துமாவு ஆகியவை குறித்து கேட்டறிந்து, குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.


மேலும், கணபதிபாளையம் அரசு கால்நடை மருத்துவமனையினையில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, சின்னவெட்டிபாளையத்தில் மகாலட்சுமி மகளிர் சுய உதவிக்குழு மூலம் ரூ.1 லட்சம் கடனுதவியில் நெய், டைல்ஸ் கிளீனர், மஞ்சள்தூள், சிகைக்காய் தூள், அரப்பு போன்ற பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளதையும், அதே பகுதியில் செம்பருத்தி மகளிர் சுய உதவிக்குழு மூலம் ரூ.2.5 லட்சம் கடனுதவியில் மண்பாண்ட தொழில் செய்து வருதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதனையடுத்து, அறச்சலூர் கொடுமுடி சாலை முதல் பச்சகவுண்டன்வலசு வழியாக வாங்கலாம்வலசு வரை ரூ.43.44 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை புதுப்பித்தல் பணி நடைபெற்று வருவதையும், வடுகபட்டி கிராமம், வாங்கலாம்வலசு, வரப்பருத்திகாடு கள்ளச்சாராயம் காய்ச்சி மனம் திருந்திய ஒரு நபருக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டிலான மாடு வழங்கப்பட்டுள்ளதையும் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். மேலும், அவல்பூந்துறை பேரூராட்சியில் குளம் தூய்மைப்படுத்தும் பணியினை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, உதவி இயக்குநர்கள் சிந்தியா (தோட்டக்கலைத்துறை), கலைச்செல்வி (வேளாண்மைத்துறை), கோட்ட கலால் அலுவலர் வீரலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகபிரியா, பிரேமதலா, அவல்பூந்துறை பேரூராட்சி செயல் அலுவலர் யவனராணி, கணபதிபாளையம் வட்டார மருத்துவ அலுவலர் அருள்மொழி உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.