கொங்கு மண்டலத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட போட்டியிடுவதை நாங்கள் விரும்புகிறோம் என தமிழ்நாடு வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி
ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் 2018 ஆம் ஆண்டு இளம் கலை பயின்று தேர்வு பெற்ற மருத்துவ மாணவ, மாணவியருக்கான பட்டமளிப்பு விழா வெள்ளியன்று நடைபெற்றது.
தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி இவ்விழாவில் கலந்து கொண்டார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேட்டியளித்த அமைச்சர் முத்துசாமி,
வீட்டுவசதி வாரியத்தின் சார்பாக புதிய குடியிருப்புகள் கட்ட ஏற்பாடு செய்யப்படும், சுயநிதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட குடியிருப்புகள் பல சிதிலமடைந்துள்ளது, அதனையும் முதலமைச்சரிடம் தெரிவித்து கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கட்டடங்கள் கட்டுவதில் அனுமதி பெறுவதில் சில பிரச்சனைகள் இருந்தது. 2500 - 3500 ச.அடியில் கட்டடம் கட்டுபவர்கள் சுய சான்று அளித்தால் போதுமானது. ஆனால் அவர்கள் சட்டத்திற்குட்பட்டு அந்த கட்டடம் இருக்க வேண்டும்.
சாட்டை துரை முருகனை,
பேச்சுரிமையை மறுக்கும் வகையில் கைது செய்யவில்லை. இதுவரை திமுக அரசாங்கம் பேச்சுரிமையை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவில்லை.
பெருந்துறையில் நிலத்தடி மாசுபட்டிருப்பதை சுத்தம் செய்வதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம். புதிய சுத்திகரிப்பு நிலையம் 6 மாத காலத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும். ஈரோட்டில் ஒரு பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.
பெருந்துறையில் உள்ள இந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பொதுமக்களுக்கு கேன்சர் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும்,
பேருந்து நிலையம் பணிகள் 3 மாதங்களில் முடிவடைய உள்ளது. பணிகள் முடிந்தவுடன் திறக்கப்படும்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அந்தந்த மாவட்ட கட்சி நிர்வாகிகள் விரும்புவார்கள், அதேபோல்தான் நாங்கள் கருதுவதிலும் தவறில்லை, கொங்கு மண்டலத்தில் போட்டியிடுவதை நாங்கள் விரும்புகிறோம்.
சிபிஐ உள்ளே வருவதை யாரும் தடுக்கவில்லை எனவும் அவர்கள் வரும் அளவிற்கான குற்றச்சாட்டுகள் இல்லை, இருந்தால் இன்றுவரை வராமல் இருப்பார்களா! அவர்கள் வருவது நல்லது, இந்த அரசிற்கு நற்சான்று கிடைத்த மாதிரி இருக்கும் என்றார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற மாணவ மாணவிகள் அவரது பெற்றோர்கள் பேராசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.