வெள்ளி, 12 ஜூலை, 2024

என்னுடைய 8 லட்ச ரூபாய் சரக்கு எனக்கு வேணும் ... கதறிய குட்கா ஓனர் ...! 8 லட்ச ரூபாய் மதிப்பிலான சரக்குடன் ஈச்சர் வேனை கடத்திய கான்ஸ்டபில்கள் ...! ஓவர் நைட்டில் பங்கமா நடந்த ஒரு சம்பவம்..!

என்னுடைய 8 லட்ச ரூபாய் சரக்கு எனக்கு வேணும் ... கதறிய குட்கா ஓனர் ...! 8 லட்ச ரூபாய் மதிப்பிலான சரக்குடன் ஈச்சர் வேனை கடத்திய கான்ஸ்டபில்கள் ...! ஓவர் நைட்டில் பங்கமா நடந்த ஒரு சம்பவம்..!

#SHABA NEWS TAMIL #EXCLUSIVE

என்னுடைய 8 லட்ச ரூபாய் சரக்கு எனக்கு வேணும் ... கதறிய குட்கா ஓனர் ...! எட்டு லட்ச ரூபாய் மதிப்பிலான சரக்குடன் ஈச்சர் வேனை கடத்திய கான்ஸ்டபில்கள் ...! ஓவர் நைட்டில் பங்கமா ஈரோட்டில் நடந்த ஒரு சம்பவம்..!


ஈரோடு மாவட்டம் பவானி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூடுதுறை சந்திப்பு அருகே நேற்று மாலை ஈச்சர் வேனை தடுத்து நிறுத்திய பிரபு, சிவகுமார் ( கான்ஸ்டபில்கள் ) என்ற இரண்டு போக்குவரத்து காவல்துறையினர் அந்த ஈச்சர் வேனை சோதனை செய்தனர், 

அந்த வேனில் 8 லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை கடத்தி வரப்பட்டது தெரியவந்தது, இதனை அடுத்து அந்த ஈச்சர் வேலை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லாமல், போக்குவரத்து காவல்துறை கான்ஸ்டபில்கள் பிரபு, சிவகுமார் ஆகியோரின் இரண்டு நண்பர்களை அழைத்து வந்து 8 லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை கடத்தி வந்த வேனை, வெப்படை அருகே எடுத்துச் சென்று, ஒரு வீட்டில்  குட்காகா பொருட்களை மட்டும் இறக்கி வைத்து விட்டு, வேனை ஓட்டுநருடன் திருப்பி அனுப்பிவிட்டனர்.

அந்த ஓட்டுனர், சம்பந்தப்பட்ட ஓனருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, குட்கா பொருட்களை கடத்திய ஓனரே..! ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்,

உடனடியாக களத்தில் இறங்கிய நேர்மையான காவல்துறை அதிகாரிகளால், பிரபு, சிவகுமார் ஆகிய கான்ஸ்டபிள்யூடல்களிடன் விடிய விடிய உரிய முறையில் விசாரணை மேற்கொண்டதை தொடர்ந்து, 8 லட்ச ரூபாய் மதிப்பிலான குட்காவை ஈச்சர் வேனில் கொண்டுவரப்பட்டதும், அந்த குட்காவை வெப்படை வரை கடத்தி ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருப்பதும், நேர்மையான அதிகாரிகளுக்கு தெரியவந்ததையடுத்து,

ஓவர் நைட்டுக்குள் 8 லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை பிரபு மற்றும் சிவகுமாரிமிடம் இருந்து கைப்பற்றி பறிமுதல் செய்து, தற்போது பவானி காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பிரபு,  சிவகுமார் ஆகிய இரு போக்குவரத்து காவல்துறையினரை, ஆயுதப்படை பிரிவிற்கு ( எ.ஆர்)  ஓவர் நைட்டில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர், 

இதே கான்ஸ்டபில்கள், வேற ஏதாவது பங்கமான சம்பவத்தில் ஈடுபட்டு இருக்காங்களா? அப்பிடிங்கிறதையும் விசாரிச்சிட்டு வராங்க .. நேர்மையான காவல்துறை அதிகாரிகள் ..!

#SHABA NEWS TAMIL #EXCLUSIVE👍
வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கடவுள் கொடுப்பார்: தோப்பு வெங்கடாசலம்

வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கடவுள் கொடுப்பார்: தோப்பு வெங்கடாசலம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவப் படிப்பை நிறைவு செய்த மாணவ, மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா இன்று (12ம் தேதி) நடைபெற்றது. இந்த விழாவில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு 96 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
இந்த விழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விழா முடிவதற்கு முன்னரே வெளியே வந்தார். அப்போது, அவர் ஸ்பா நியூஸ் தமிழுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில், பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் இல்லை. இந்த மருத்துவமனைக்கு அருகாமையில் நான்கு வழி சாலை உள்ளது. இந்த சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு, தலைக்காயம் ஏற்படுகிறது.

ஆகையால் தலைக்காயத்துக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவர்கள் இந்த கல்லூரிக்கு உடனடியாக தேவைப்படுகிறது. இருதய சிகிச்சை அளிப்பதற்கும் இம்மருத்துவமனையில், மருத்துவர்கள் இல்லாத காரணத்தையும், தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சரிடம் கோரிக்கையாக அளித்துள்ளேன். நரம்பியல் மற்றும் இருதயம் ஆகிய இரு துறைகளுக்கும் மருத்துவர்கள் நியமிக்க தமிழ்நாடு முதலமைச்சரிடம் கலந்து பேசி, விரைவில் மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியாக கூறியுள்ளார்.

நான் இந்த மருத்துவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்து செல்லவில்லை. அமைச்சரிடம் மரியாதை நிமித்தமாக சந்தித்து விட்டு, எனது சொந்த வேலையின் காரணமாக செல்கிறேன் என அமைச்சரிடம் கூறிவிட்டு தான் செல்கிறேன். சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்பது எந்த அரசாக இருந்தாலும் அவ்வப்போது ஏற்படும். சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்பது ஆளுக்கின்ற அரசினால் வருவது இல்லை. சட்டம் ஒழுங்கு என்பது சூழ்நிலைக்கு ஏற்றவாறு மையமாக வைத்து பிரச்சனைகள் ஏற்படும்.

இந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனை இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஒடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு சான்றாக அதிகாரிகளை கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர்.‌ நேற்றைய தினம் ஒரு ரவுடி என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார். ஆகவே தமிழ்நாடு அரசு சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது எனது கருத்து. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை கடவுள் எனக்கு கொடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.