ஞாயிறு, 14 ஜூலை, 2024

ஈரோட்டில் பெண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி: ஜூலை 22ம் தேதி தொடக்கம்

ஈரோட்டில் பெண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி: ஜூலை 22ம் தேதி தொடக்கம்

ஈரோடு அடுத்த கொல்லம்பாளையம் கரூர் பைபாஸ் சாலையில் ஆஸ்ரம் மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்தில் 2ம் தளத்தில் கனரா வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி நிலையத்தில் பெண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி வரும் 22ம் தேதி முதல் துவங்கி ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி வரை 30 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
இப்பயிற்சியின் போது சீருடை, உணவு இலவசமாக அளிக்கப்படும். மேலும், பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிராமப்புறத்தை சேர்ந்த 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், 100 நாள் வேலை திட்டத்தில் இருப்போர், அவர்களது குடும்பத்தினரும் கலந்து கொள்ளலாம்.

மேலும், விவரங்களுக்கு 0424-2400338, 87783-23213, 72006-50604 கைபேசி எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சனி, 13 ஜூலை, 2024

ஈரோடு மாவட்டத்தில் நாளை (15ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (15ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (15ம் தேதி) திங்கட்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நாளை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சித்தோடு சூரியம்பாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- சித்தோடு, ராயபாளையம், சுண்ணாம்பு ஓடை, அமராவதி நகர், தண்ணீர்பந்தல்பாளையம், ஆர். என்.புதூர், கோணவாய்க்கால், பெருமாள்மலை, ஐஆர்டிடி, குமிளம்பரப்பு, செல்லப்பம்பாளையம், மாமரத்துப்பாளையம், தயிர்ப்பாளையம், கொங்கம்பாளையம், நரிப்பள்ளம், எல்லப்பாளையம், சேமூர், சொட்டையம்பாயைளம், பி.பெ.அக்ரஹாரம், மரவபாளையம், சி.எம்.நகர், கனிராவுத்தர்குளம், காவேரி நகர், பாலாஜி நகர், எஸ்எஸ்டி நகர், வேலன் நகர், ஊத்துக்காடு, பெரியபுலியூர் (பகுதி) மற்றும் சேவக்கவுண்டனூர்.

ஈரோடு காசிபாளையம் துணை மின் நிலையம் (காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- காசிபாளையம். மலைக்கோவில், அரசு நகர், முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரியம் பகுதி -2, பகுதி -3, எம்.எஸ்.கே.நகர், அணைக்கட்டு, சங்குநகர், சேரன்நகர், ராதாகிருஷ்ணன் வீதி, சூரம்பட்டிவலசு, கோவலன்வீதி, தாதுக் காடு, சாஸ்திரிரோடு, பாண்டியன் வீதி, பாரதிபுரம், ஆசிரியர் காலனி, மோகன்குமாரமங்களம் வீதி மற்றும் காமராஜர் வீதி 1, 2, 3.

ஈரோடு தெற்கு ரயில்வே துணை மின் நிலையம் (காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- பட்டேல் வீதி, சிதம்பரம்காலனி, 80 அடி ரோடு, காந்திஜி ரோடு, பெரியார் நகர், எஸ்.கே.சி.ரோடு மற்றும் பெரியார் வீதி.

காந்திநகர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட நடுவலசு, புங்கம்பாடி, கொளத்துபாளையம் மின் பாதைகள் (காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை):-

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- பெத்தாம்பாளையம், கொளத்தான்வலசு, மூலக்கடை, எளையாம்பாளையம், பூச்சம்பதி, பொன்னான்டான்வலசு, நல்லாம்பட்டி, ஒசைப்பட்டி, கோவில்பாளையம், காந்திநகர், நசியனூர் முதல் மேட்டுக்கடைரோடு வரை, மேட்டுக்கடை, நத்தக்காட்டுபாளையம், புங்கம்பாடி, புத்தூர் புதுபாளையம், ரோஜாநகர், ஆரவிளக்கு, மேட்டுபாளையம், சாணார்பாளையம், சாலப்பாளையம், பாண்டியம்பாளையம், குஞ்சரமடை, கொளத்துபாளையம் மற்றும் புதுகாட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்துறை மருத்துவமனைக்கு செல்லும் வழியில் 108 ஆம்புலன்சில் பிறந்த குழந்தை

பெருந்துறை மருத்துவமனைக்கு செல்லும் வழியில் 108 ஆம்புலன்சில் பிறந்த குழந்தை

பெருந்துறை அருகே பிரசவ வலியால் 108 ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு சென்றபோது வழியிலேயே பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள ஈங்கூர் பகுதியில் வசித்து வருபவர் சைலேந்திர குமார். இவரது மனைவி கார்கில் குமாரி (வயது 20). நிறைமாத கர்ப்பிணியான கார்கில் குமாரிக்கு நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டது.

இதனையடுத்து, அவரது கணவர் சைலேந்திர குமார் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கணபதி மற்றும் அவசர கால மருத்துவ நுட்புணர் சுரேந்திரன் ஆகியோர் கார்கில் குமாரியை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்தனர்.

அப்போது, 108 ஆம்புலன்ஸ் ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை நோக்கி செல்லும் வழியில் வேட்டுவப்பாளையம் என்ற இடத்தில் ஆம்புலன்சில் பெண் குழந்தை பிறந்தது. இதற்கு, உறுதுணையாக இருந்து ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சிறப்பாக செயல்பட்டு குழந்தையைக் காப்பாற்றினர்.

தற்பொழுது, ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தாயும் சேயும் நலமுடன் இருந்து வருகின்றனர். சாதுரியமாக செயல்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கணபதி மற்றும் மருத்துவ உதவியாளர் சுரேந்திரன் ஆகியோரை 108 ஆம்புலன்ஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவின் பாராட்டினார்.
பெருந்துறை அருகே பெண்களை வைத்து பாலியல் தொழில்: பெண் புரோக்கர் உள்பட 2 பேர் கைது

பெருந்துறை அருகே பெண்களை வைத்து பாலியல் தொழில்: பெண் புரோக்கர் உள்பட 2 பேர் கைது

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய பெண் புரோக்கர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் அறச்சலூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் பெருந்துறை சீனாபுரம் ரோடு ஐயப்பன் நகர் பகுதியில் தனது நண்பரை பார்க்க நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு காஞ்சிக்கோவில் தெற்கு ரத வீதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 40) என்பவர் வந்துள்ளார்.

அவர், அந்த வாலிபரிடம் தனக்கு தெரிந்த காஞ்சிக்கோவில் விருப்பமதியைச் சேர்ந்த பெண் புரோக்கரான வளர்மதி (வயது 38) என்பவர் சுள்ளிபாளையத்தில் பெண்ணை வைத்து விபசாரம் செய்து வருவதாக கூறியுள்ளார். மேலும், ரூ.2,000 தந்தால் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து, கார்த்தி அந்த வாலிபரிடம் செல்போனில் பெண்களின் புகைப்படங்களை காட்டியதோடு, வாலிபரை இருசக்கர வாகனத்தில் சுள்ளி பாளையத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்று பார்த்த பொழுது உள்ளே இரு பெண் இருந்துள்ளார்.

அவர்களிடம் அந்த வாலிபர் விசாரிக்கையில், பெருந்துறையில் வீட்டு வேலை இருப்பதாக கூறி விபசார தொழிலில் ஈடுபட வற்புறுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து அந்த வாலிபர் என்னிடம் ரூ.1,000 குறைவாக உள்ளது நண்பரிடம் வாங்கி வருகிறேன் எனக் கூறி சென்று, பெருந்துறை காவல் நிலையம் வந்துள்ளார்.

அப்போது, வழியில் பெத்தாம்பாளையம் பிரிவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அங்கிருந்த போலீசாரிடம் நடந்த சம்பவத்தை கூறினார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வளர்மதி, கார்த்தியை கைது செய்தனர். மேலும், அங்கிருந்த இரு பெண்களையும் மீட்டனர்.
ஈரோடு ஆட்சியரின் தபேதார் திடீர் உயிரிழப்பு

ஈரோடு ஆட்சியரின் தபேதார் திடீர் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள புதுப்பீர்கடவு பகுதியைச் சேர்ந்தவர் வைத்தீஸ் (வயது 26). இவர் கடந்த 4 ஆண்டுகளாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரின் தபேதராக பணியாற்றி வந்தார். இவரின் மனைவி கவுசல்யா (வயது 25). இரு பெண் குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில், வைத்தீஸ் நேற்று முன்தினம் பணியை முடித்துவிட்டு நள்ளிரவு 12 மணி அளவில் வீட்டுக்கு சென்று தூங்கினார். நேற்று காலை வெகுநேரமாகியும் அவர் படுக்கையில் இருந்து எழுந்திருக்காத நிலையில், அவருடைய மனைவி கவுசல்யா சென்று பார்த்தார். அப்போது, வைத்தீஸ் மூக்கில் நுரை வந்த நிலையில் கிடந்தார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வைத்தீஸ் ஏற்கனவே உயிரிழந்து விட்டது தெரிந்தது.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று வைத்தீசின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், பவானிசாகர் போலீசார் வைத்தீசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
24.26 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் திட்டப் பணிகள்...மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார்.

24.26 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் திட்டப் பணிகள்...மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி, முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி பாழடைந்த பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வந்த நியாய விலைக் கடையை பொதுமக்களின் நலன் கருதி ரூபாய் 24.26 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு இன்று திறப்பு..விழா ....


சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நியாய விலை கடையை திறந்து வைத்து  முதல் விற்பனையையும் தொடங்கி வைத்தார் .
நைனாத்தாள் ஏரி பகுதியில் 30 வருடங்களாக குடிநீர் பிரச்சினை உள்ளது என அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டதின் அடிப்படையில் நமது சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 11.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 30,000 லிட்டர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியினை திறந்து வைத்தார்மரத்துக்குட்டை கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பட்டினத்தில் இருந்து ரூபாய் 9 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறந்து வைத்தார் .
இந்த நிகழ்ச்சிகளில், 
முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜா, மாவட்டத் துணைச் செயலாளர் தங்கராஜ் , ஒன்றிய செயலாளர் காமராஜ், துணைத்தலைவர் சத்தி, வெங்கடேஷ், வக்கீல், திருநாவுக்கரசு, சௌந்தர்ராஜ், அண்ணாதுரை, அங்கமுத்து, மோகன், அசோகன், கோவிந்தராஜ், வெங்கடபதி, வார்டு நம்பர் செல்வராஜ், ஏடிசி பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .
சேலம் பழைய பேருந்து நிலையம் ராஜகணபதி திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா தினத்தை முன்னிட்டு 1008 கலசாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

சேலம் பழைய பேருந்து நிலையம் ராஜகணபதி திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா தினத்தை முன்னிட்டு 1008 கலசாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் பழைய பேருந்து நிலையம் ராஜகணபதி திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா தினத்தை முன்னிட்டு 1008 கலசாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ ராஜகணபதி திருக்கோவில் இந்த திருக்கோவிலில் ஆண்டுதோறும் குறிப்பாக தமிழ் மாதங்களில் பல்வேறு சிறப்பு வைபவங்கள் நடைபெறுவது வழக்கம் ராஜகணபதி திருக்கோவிலுக்கு கும்பாபிஷேக வைபவம் 10 ஆண்டு  முடிந்து 11வது ஆண்டை தூங்குவதை முன்னிட்டு ஸ்ரீ ராஜகணபதிக்கு நேற்று சிறப்பு வைபவ நிகழ்ச்சி  தொடங்கப்பட்டது. 
பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்தை  தொடர்ந்து இன்று காலை விக்னேஸ்வர பூஜை சித்தி சைவீக புண்ணியாக வாசனம்  பஞ்சகவ்யம் துவார மண்டல பூஜை மூல மந்திர ஹோமம் என பல்வேறு சிறப்பு ஹோமம் நடைபெற்று மகாபூர்ணா ஹுதி செய்யப்பட்டது. தொடர்ந்து 1008 கலச தீர்த்தத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
இதனை  தொடர்ந்து சிவாச்சாரியார்கள் பூஜை செய்யப்பட்ட 1008 கலச தீர்த்தத்தை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பின்னர் ராஜகணபதிக்கு 1008 கலச தீர்த்த அபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து விநாயகப் பெருமானுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூ வியாபாரிகள் சங்கம் சார்பில் டன் கணக்கில் பூக்களை உர்வலமாக  கொண்டுவரப்பட்டது. 
தொடர்ந்து விநாயகருக்கு பல்வேறு வாசனை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிவாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க அர்ச்சனைகள் நடைபெற்றன பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 1008 கலசம் அபிஷேகம் மற்றும் விநாயகரை தரிசிக்க அப்பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன விழாவின் ஏற்பாட்டினை திருக்கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.