புதன், 17 ஜூலை, 2024

ஈரோட்டில் சாலையோரத்தில் கட்டை பையில் தொப்புள் கொடியுடன் கிடந்த குழந்தை

ஈரோட்டில் சாலையோரத்தில் கட்டை பையில் தொப்புள் கொடியுடன் கிடந்த குழந்தை

ஈரோட்டில் சாலையோரத்தில் கட்டை பையில் தொப்புள் கொடியுடன் கிடந்த குழந்தையை மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு சென்னிமலை சாலையில் ரங்கம்பாளையம் செல்லும் வழியில் தனியார் மண்டபம் அருகே சாலையோரம் கட்டைப் பை ஒன்று கிடந்தது. அந்த பையில் குழந்தை அழும் குரல் கேட்டுள்ளது. இதை பார்த்த பொதுமக்கள் பையை திறந்து பார்த்தனர்.

அதில், தொப்புள் கொடியுடன் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை இருப்பதைக் கண்டனர். பின்னர், இதுகுறித்து ஈரோடு தாலுக்கா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையை மீட்டனர்.

தொடர்ந்து, ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது, குழந்தை அங்கு சிகிச்சை பெற்று வருகிறது. இதனையடுத்து, சம்பவ இடத்திலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார் , குழந்தையை கட்டைப் பையில் வீசிச் சென்றது யார் என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
இஸ்லாமியர்களின் தியாகத் திருநாள். மொகரம் விழாவையொட்டி சேலத்தில் புலி வேடம் அணிந்து நடனம் ஆடி தியாகத் திருநாளை கடைபிடிப்பு...

இஸ்லாமியர்களின் தியாகத் திருநாள். மொகரம் விழாவையொட்டி சேலத்தில் புலி வேடம் அணிந்து நடனம் ஆடி தியாகத் திருநாளை கடைபிடிப்பு...

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

மொஹரம் பண்டிகையையொட்டி சேலத்தில் இஸ்லாமியர்கள் இறைத்தூதர் பேரன்கள் கொல்லப்பட்டதை நினைவு கூறும் விதமாக மொழிவேடமிட்டு நடனமாடி நேர்த்திக்கடன். 

இஸ்லாமியர்களின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான மொஹரம் மொகரம் திருநாள் உலக இஸ்லாமியர்களால் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இறைதூதர் நபிகள் நாயகத்தின் பேரர்களான ஹசேன் மற்றும் உசேன் கொல்லப்பட்டதை நினைவு கூறும் விதமாகவும், அவர்களது தியாகத்தை போற்றும் விதமாக கடைப்பிடித்து இந்த திருநாளையொட்டி சேலத்தில் இஸ்லாமியர்கள், சேலம் கோட்டை பகுதியில் இறை தூதரான நபிகள் நாயகத்தின் பேரன்கள் ஆன அசேன் மற்றும் உசேன் திருப்பெயரால் மொகரம் பண்டிகையை ஒட்டி புலிவேடுமிட்டு நடனமாடி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். சேலம் கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஊர்வலமாக சென்ற மழையையும் பொருட்படுத்தாமல் நாள் முழுவதும் இறைத்தூதர் பேரன்களின் தியாகத்தை போற்றும் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு புலி வேடமிட்ட நபர்களுடன் இணைந்து பறை இசைக்கு ஏற்றவாறு நடனமாடி நாள் முழுவதும் தங்களது அனுஷ்டிப்பை வெளிப்படுத்தினர். இதனை அடுத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மட்டுமல்லாமல் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டன. 
கோட்டை பகுதியை சேர்ந்த பண்டு என்பவர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அஜித்அலி,  நூர்அகமது, சபீர் அகமது, சவுகத்அலி,  ஷேக்மதார், பாஷா,  அஜிம் மற்றும் ஆரிப் உள்ளிட்ட உங்கிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கு 100 வயது வரை கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். சேலத்தில் நடைபெற்ற தமிழ்நாடு ஓய்வூதியர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கு 100 வயது வரை கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். சேலத்தில் நடைபெற்ற தமிழ்நாடு ஓய்வூதியர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

ஓய்வூதியர்களுக்கு 100 வயது வரை கூடுதல் ஓய்வூதியம் அளிக்க வேண்டும். தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டத்தில் தீர்மானம். 

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கத்தின் சேலம் மாவட்ட பேரவை கூட்டம் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள பொதுப்பணித்துறை பயணியர் மாளிகையில் உள்ள அண்ணன் தம்பி நடைபெற்றது. சேலம் மாவட்ட தலைவர் செல்லதுரை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியம் சங்கத்தின் மாநில செயலாளர் ஜெபமாலை மேரி மற்றும் மாநில பொருளாளர் வேலாயுதம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். 
சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்ட பேரவை கூட்டத்தில், சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் சேலம் மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. 
கூட்டத்தில் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழுவின் முதன்மை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணைச் செயலாளருமான சரசுராம் ரவி உட்பட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு துரை சார்ந்த விளக்கங்களை ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு தெரிவித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் நடைபெற்ற முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாசிச  சக்திகளை வீழ்த்த வேண்டும் என தமிழக முதலமைச்சர் அவர்கள் தீவிர பிரச்சாரங்கள் மேற்கொண்டு 40க்கு 40 என்ற எண்ணில் வெற்றி பெற்று இந்திய கூட்டணியை பலம் வாய்ந்த ஒன்றாக மாற்றி அமைக்க இந்த பேரவை கூட்டம் தனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறது, மத்திய அரசுக்கு தனது ஊழியர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும்  1.1.2004 முதல் அகவிலைப் படியினை 40 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தி ஆணை பிறப்பித்துள்ளது. இதனை ஒட்டி மாநில அரசும் அகவிலை படி உயர்வு அளித்துள்ளதை வரவேற்கிறோம். இருப்பினும் ஒன்றிய அரசு அளித்து வந்த அகவிலைப்படி உயர்வினை ஆறு மாதம் மூன்று மாதம் தள்ளி மாநில அரசு அளித்து வந்துள்ளது. அதாவது அகவிலைப்படி உயர்வினை 1.7.2002, 1.1.2023, மற்றும் 1.4.2023 முதல் அனுமதித்து ஆணை வழங்கியிருப்பது 21 மாத அகவிலை படி ஏற்பட்டுள்ளது இதனை மறுபரிசீலனை செய்து மத்திய அரசு அளித்த தேதியிலேயே பழைய அகவிலைப்படி உயர்வையும் அளிக்க வேண்டும், தமிழக முதல்வர் அவர்கள் தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்தவாறு ஓய்வூதியர்களுக்கு 70 வயது முடிந்தவர்களுக்கு 10%, 80 வயது முடிந்தவர்களுக்கு 20%, 85 வயது முடிந்தவர்களுக்கு 30 சதவிகிதமும் அமலில் உள்ள ஆணைகளின் படி 90, 95 மற்றும் நூறு வயது வரை கூடுதல் ஓய்வூதியம் அளிக்க வேண்டுகிறோம், அதேபோல ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரைப்படி 21 மாத நிலுவைத் தொகையினை விளைவில் தமிழக அரசு வழங்க வேண்டும் மற்றும் தமிழக முதல்வர் தங்களது 2006 2011 2016 மற்றும் 2021 தேர்தல் அறிக்கைகளில் உறுதி அளித்தவாறு புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்ந்து அனைவருக்கும் அமல்படுத்த வேண்டுகிறோம். தமிழக முதலமைச்சர் அவர்கள் இல்லத்தை நோக்கி சிபிஎஸ் ஒலிப்பு இயக்கம் நடத்திய சாத்வீக போராட்டத்தை போராட்ட ஊழியர்களை தமிழ்நாடு காவல்துறை தேவையற்ற வீட்டுக்காவல் கைது போன்ற மிரட்டல்களை வெடித்தது கண்டு மாவட்ட பேரவை தனது அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தெரிவிக்கிறது என்பன உள்ளிட்ட 27 கோரிக்கைகள் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
இந்த பேரவை கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் ராஜசேகரன் சிவானந்தம் ராஜரத்தினம் உமாதேவி வைத்தியலிங்கம் செல்லமுத்து கங்காதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆடி முதல் நாள்... தேங்காய் சுடும் பண்டிகையை ஒட்டி 300 நபர்களுக்கு இலவசமாக தேங்காய் சுடுவதற்கான மூலப்பொருட்கள் வினியோகம்.

ஆடி முதல் நாள்... தேங்காய் சுடும் பண்டிகையை ஒட்டி 300 நபர்களுக்கு இலவசமாக தேங்காய் சுடுவதற்கான மூலப்பொருட்கள் வினியோகம்.

சேலம். 
S.K. சுரேஷ் பாபு.
.
ஆடி முதல் நாள் தேங்காய் சுடும் பண்டிகையை ஒட்டி 300 பேருக்கு இலவச தேங்காய் குச்சி தேங்காய் மற்றும் இனிப்புகள். 

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் தெய்வீக மாதமாக கருதப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஆடி பண்டிகை என்று தேங்காய் சுட்டு விநாயகர் விநாயகப் பெருமானுக்கு படையல் இட்டு இந்துக்கள் வழிபடுவது வழக்கம். 
அதன் அடிப்படையில் ஆடி முதல் நாளான என்று சேலம் ஜான்சன் நகர் ஸ்ரீ காவேரி மாரியம்மன் நண்பர்கள் குழு சார்பில், ஆடிப் பண்டிகையை ஒட்டி நண்பர்கள் குழுவின் சொந்த செலவில் ஆண்டுதோறும் தேங்காய் சுடுவதற்கான மூலப்பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில், 300 நபர்களுக்கு தேங்காய் குச்சி தேங்காய் மற்றும் தேங்காய் வினுள் செலுத்தப்படும் தின்பண்டங்கள் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன. நண்பர்கள் குழு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தேவதாஸ் தலைமை தாங்கினார். 
நிகழ்ச்சியில் ஸ்ரீ காவேரி மாரியம்மன் நண்பர்கள் குழு செயலாளர் சண்முகவேல் பொருளாளர் ஏழுமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டு 300 பேருக்கு தங்களுக்கு சொந்த செலவில் இலவசமாக தேங்காய் சுடுவதற்கான மூலப் பொருட்களை வழங்கினர்.
நிகழ்ச்சியில் நிர்வாகிகள் தமிழ்மணி சிலம்பரசன் பழனி மற்றும் அருணாச்சலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் 15 புதிய பேருந்துகளின் இயக்கத்தை துவக்கி வைத்த அமைச்சர்கள்

ஈரோட்டில் 15 புதிய பேருந்துகளின் இயக்கத்தை துவக்கி வைத்த அமைச்சர்கள்

ஈரோடு மத்திய பேருந்து நிலைய வளாகத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஈரோடு மண்டலம் சார்பில் 15 புதிய பேருந்துகளின் இயக்கத்தினை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று (17ம் தேதி) நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்தார். போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆகியோர் பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஈரோடு மண்டலம் சார்பில், ஈரோடு மாவட்டத்தில் 15 புதிய பேருந்துகளின் இயக்கம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசால் ஈரோடு மண்டலத்திற்கு 2021-2024ம் ஆண்டு வரை மொத்தம் நகர்ப்புற பேருந்துகள் 9ம், புறநகர் பேருந்துகள் 36ம் என 45 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பேருந்துகளில் ஏற்கனவே 30 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து, 14 புறநகர் பேருந்துகளும் 1 நகரப் பேருந்தும் என 15 புதிய பேருந்துகள் இன்று (17ம் தேதி) முதல் இயக்கப்படுகிறது. ஈரோடு - மைசூர் (வழி) சத்தி, சாம்ராஜ் நகர் 7 பேருந்துகளும், கோவை-மைசூர் (வழி) சத்தி சாம்ராஜ் நகர் 3 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.

மேலும், ஈரோடு - நாகர்கோயில் (வழி) கரூர் 2 பேருந்துகளும், ஈரோடு - குமுளி (வழி) திண்டுக்கல், தேனி ஒரு பேருந்தும், அந்தியூர் - கம்பம் (வழி) திண்டுக்கல், தேனி ஒரு பேருந்தும், கோபி-சத்தி (வழி) பங்களாப்புதூர், நால்ரோடு ஒரு பேருந்தும் என மொத்தம் 15 புதிய பேருந்துகள் வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளது.

இப்பேருந்துகள் பாரத் ஸ்டேஜ் 6 (பிஎஸ்6) மிக குறைந்த புகை வெளியிடும் நவீன பேருந்துகளாகும். இந்த புதிய வழித்தடங்களின் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஜூலை 2021 முதல் ஜூன் 2024 வரை 30,86,64,613 மகளிர்கள், 19,07,294 மாற்றுத்திறனாளிகள், 74,460 மாற்றுத்திறனாளிகள் பாதுகாவலர்கள் மற்றும் 1,47,697 மூன்றாம் பாலினத்தவர் பயனடைந்து உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து, வருவாய்த்துறையின் சார்பில், ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலர்கள், கோபிசெட்டிபாளையம் மற்றும் பெருந்துறை வட்டாட்சியர் ஆகியோருக்கு அலுவலக பயன்பாட்டிற்காக தலா ரூ.9.46 லட்சம் வீதம் ரூ.37.86 லட்சம் மதிப்பீட்டில் 4 புதிய ஈப்பு வாகனங்களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர்.ப.செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஈ.வி.கே.ஸ்.இளங்கோவன் (ஈரோடு கிழக்கு), ஏ.ஜி.வெங்கடாசலம் (அந்தியூர்), ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை மேலாண் இயக்குநர் ஜோசப் டயஸ், பொது மேலாளர் ஸ்வர்ணலதா (ஈரோடு மண்டலம்) உட்பட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செவ்வாய், 16 ஜூலை, 2024

பெருந்துறையில் 19 வயது பெண்ணிடம் சில்மிஷம் செய்து, கொலை மிரட்டல்: வாலிபர் கைது

பெருந்துறையில் 19 வயது பெண்ணிடம் சில்மிஷம் செய்து, கொலை மிரட்டல்: வாலிபர் கைது

பெருந்துறை அருகே 19 வயது பெண்ணிடம் பாலியல் சில்மிஷம் செய்து, கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள வாய்க்கால்மேடு வேட்டைக்காரன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் திலீப் (வயது 19). இவர், கடந்த 12ம் தேதி காலை அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அந்த பெண் சத்தம் போடவே திலீப் அங்கிருந்து தப்பினார். இதுகுறித்து அந்த பெண் பெற்றோரிடம் தெரிவிக்கவே, திலீப்பை கண்டித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 15ம் தேதி காலை மீண்டும் அதே பெண்ணுக்கு பாலியல் ரீதியாக சைகை காட்டியதுடன், தகாத வார்த்தைகளால் பேசி பெண்ணுக்கு கொலை மிரட்டலும் விடுத்தார். இதுகுறித்து, பெண்ணின் பெற்றோர் பெருந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் திலீப்பை கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 
ஈரோடு மாவட்டத்தில் நாளை (18ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (18ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (18ம் தேதி) வியாழக்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆகையால், நாளை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஈரோடு அருகே உள்ள மேட்டுக்கடை துணை மின் நிலையம்:-  

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- நஞ்சனாபுரம், சின்னமேடு, புதுமைகாலனி, காரப்பாறை, மெடிக்கல் நகர், பாரதியார் நகர், மாருதி நகர், ரூபி கார்டன், ஜெய்கிருஷ்ணா கார்டன், வில்லரசம்பட்டி ரோடு, ராஜீவ் நகர், செங்கோடம்பாளையம், சக்திநகர், தோட்டத்தூர், செந்தூர் முருகன்நகர், வில்லரசம்பட்டி நால்ரோடு, ஜெய்பாலாஜி நகர், வீனஸ் கார்டன் மற்றும் வள்ளி அவென்யூ பகுதி.

அறச்சலூர் அருகே உள்ள தண்ணீர்பந்தல் துணை மின் நிலையம்:- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- உலகபுரம், வேலம்பாளையம், வெங்கிடியாம்பாளையம், தண்ணீர்பந்தல், ஞானிபாளையம், ஊஞ்சப்பாளையம், தேவணம்பாளையம், ராயபாளையம், கொத்துமுட்டிபாளையம், மைலாடி, நடுப்பாளையம், குடுமியாம்பாளையம். வேமாண்டம்பாளையம், முகாசி அனுமன்பள்ளி, அஞ்சுராம்பாளையம், வெள்ளி வலசு, பள்ளியூத்து, ராட்டை சுற்றிபாளையம், ராசாம்பாளையம், மந்திரிபாளையம், சென்னிமலை பாளையம், சங்கராங்காட்டு வலசு, கனகபுரம், கவுண்டச்சிபாளையம், நல்லாம்பாளையம், பூவாண்டிவலசு மற்றும் புதுப்பாளையம்.

காஞ்சிக்கோவில் அருகே உள்ள காந்திநகர் துணை மின் நிலையம்:- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- காஞ்சிக்கோவில், பள்ளப்பாளையம், கவுண்டம்பாளையம், கரட்டுப்பாளையம், சின்னியம்பாளையம், அய்யன்வலக, பெருமாபாளையம், முள்ளம்பட்டி, ஒலப்பாளையம், கந்தம்பாளையம்பிரிவு, சாமிகவுண்டன்பாளையம், வேட்டைபெரியாம்பாளையம், காந்திநகர், நடுவலசு, கருக்கம்பாளையம், துடுப்பதி, பொன்னாண்டாவலக, கொளத்தான்வலசு, சூரியம்பாளையம், பெத்தாம்பாளையம், இளையாம்பாளையம், கோவில்பாளையம், ஓசப்பட்டி, மாதநாயக்கன்பாளையம், சாணார்பாளையம், தீர்த்தம்பாளையம், சமாதானபுரம், சீரங்ககவுண்டம்பாளையம், பாலக்கரை, தொட்டியனூர் மற்றும் கோவில்காட்டுவலசு ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.