ஞாயிறு, 21 ஜூலை, 2024

ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (21ம் தேதி) நடைபெற்றது.
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று (21ம் தேதி) தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தி இருந்தார்.

இதன்படி, இன்று ஈரோடு உள்பட தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு மண்டல செயலாளர் நவநீதன் தலைமை வகித்தார். 

ஆர்ப்பாட்டத்தை தொகுதி செயலாளர் லோகநாதன் ஒருங்கிணைத்தார். மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் சத்யா முருகேசன், சீதாலட்சுமி, மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொறுப்பாளர்கள் மணிகண்டன், அருண்குமார், மோதிலால் பிரசாந், முருகேசன், தினேஷ்குமார், மூர்த்தி, தாண்டமூர்த்தி, விஜய் மேத்யூ உள்ளிட்ட ஏராளமான நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்: இந்து முன்னணியினர் 80 பேர் கைது

ஈரோட்டில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்: இந்து முன்னணியினர் 80 பேர் கைது

ஈரோட்டில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 80 பேர் போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாநகர் மாவட்டம் இந்து முன்னணி சார்பாக இன்று நடத்தப் பட்ட “கோவில்களை மட்டும் சீரழிக்கும் அரசே கோவிலை விட்டு வெளியேறு” என்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் மூலப்பாளையம் அண்ணமார் பெட்ரோல் பங்க் அருகில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணியின் மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர் கார்த்தி தலைமை தாங்கினார். பாரதிய ஜனதா கட்சி மற்றும் பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு 40 பெண்கள் உட்பட 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

போலீசார் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்திருந்தனர். எனினும் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் உள்பட 80க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
#EXCLSIVE சேலத்தில் தலை வெட்டி முனியப்பனாக கருதப்படும் புத்தர் சிலை முன்பு பௌத்த அமைப்பினர் காவல் துறை பாதுகாப்புடன் பௌர்ணமி சிறப்பு தியானம்

#EXCLSIVE சேலத்தில் தலை வெட்டி முனியப்பனாக கருதப்படும் புத்தர் சிலை முன்பு பௌத்த அமைப்பினர் காவல் துறை பாதுகாப்புடன் பௌர்ணமி சிறப்பு தியானம்

சேலம். 
S.K.சுரேஷ் பாபு

EXCLUSIVE EXCLUSIVE EXCLUSIVE
சேலம் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள தலை வெட்டி முனியப்பன்  கோவிலில் உள்ள புத்தருக்கு காவல்துறை பாதுகாப்புடன் தியானத்தில் ஈடுபட்ட புத்த அமைப்பினர்... தலை வெட்டி முனியப்பன் கோவில் என்று உள்ள பெயர் பலகையை அகற்றிவிட்டு புத்த விகார் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று சேலம் புத்தா டிரஸ்ட் தலைவர் ராம்ஜி தமிழக அரசுக்கு வேண்டுகோள். 

சேலம் மாநகராட்சி அலுவலகம் அருகே தலைவெட்டி முனியப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என கூறப்படுகிறது. இந்த கோயில் இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழக அரசின் சார்பில் கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது. இந்த கோவிலில் உள்ள மூலவரின் சிலை புத்தராக இருந்ததாகவும், அதன் பின்னர் தலை வெட்டி முனியப்பனாக மாற்றப்பட்டது என்று குற்றச்சாட்டு எழுந்தது. இது சம்பந்தமாக அப்போதைய தமிழக முதல்வரிடம் புகார் மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லாததால் சேலத்தில் உள்ள புத்த அமைப்பினர் கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தொல்லியல் துறைக்கு ஆய்வறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தது. இதனை அடுத்து தொல்லியல் துறை சார்பில் விரிவான ஆய்வறிக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த ஆய்வறிக்கையில் கோவிலானது சிறப்பு தோற்றத்தில் உள்ளது என்றும் ஆனால் கோவிலில் உள்ள மூலவர் கடுமையான கல்லால் செதுக்கப்பட்டு தாமரை மலர் மீது அமர்ந்து பத்மாசன நிலையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதுமட்டுமில்லாமல் சிலையின் கையில் தியான முத்திரைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆகையால் புத்தரின் அடையாளங்கள் தலைப்பகுதியில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இது தொடர்பான விசாரணையின் முடிவில் உயர்நீதிமன்றம் மேற்கண்ட சேர்ப்போம் புத்தருடையது தான் என்றும் தலை வெட்டி முனியப்பன் கோவில் அல்ல என்றும் தீர்ப்பில் தெரிவித்திருந்தது. 
மேற்கண்ட புத்தர் சிலை சம்பந்தமாக அதன் முந்தைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்றும், இந்தக் கோவில் அமைந்துள்ள நிலப்பரப்பில் இது புத்தர் கோவில் தான் என்று பலகை வைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வந்து பார்வையிடலாம் என்று அறிவிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. பௌர்ணமி நாளன்று புத்த மதத்தைச் சார்ந்தவர்கள் புத்தருடைய சன்னிதானத்திற்கு சென்று தியானத்தில் ஈடுபடுவது வழக்கம். 
அதன் அடிப்படையில், ஏற்கனவே சேலம் புத்தா டிரஸ்ட் அமைப்பின் சார்பில் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் சேலம் மாவட்ட நிர்வாகத்திடம் சேலம் கோட்டை மைதானம் பகுதியில் அமைந்துள்ள தலை வெட்டி முனியப்பன் என்கின்ற புத்தர் கோவிலில் பௌர்ணமி தினத்தன்று உத்தமத்தை சார்ந்தவர்கள் சிறப்பு வழிபாடு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டதன் அடிப்படையில், காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை தியானம் செய்து கொள்ளலாம் என்று மனு தாக்கல் செய்த ராம்ஜி என்பவருக்கு சேலம் சிறுபான்மை நலத்துறை அலுவலரும் சேலம் மாவட்ட நிர்வாகமும் அனுமதி அளித்ததோடு, புத்தா  அமைப்பினர் வழிபாடு நடத்தும் போது காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அந்த எழுத்துப்பூர்வ கடிதத்தில் கடந்த 18ஆம் தேதி குறிப்பிட்டிருந்தார்.

இதனை ஏற்று என்று சேலம் புத்தா டிரஸ்ட் தலைவர் ராம்ஜி மற்றும் அவரது அமைப்பை சார்ந்த நிர்வாகிகள் பௌர்ணமி நாளான இன்று புத்தருக்கு மரியாதை செய்து தியானம் செய்ய தலைவெட்டி முனியப்பன் கோவிலுக்கு வந்தனர்.
அப்பொழுது, கோவிலில் இருந்து பூசாரியிடம் தங்கள் வந்த நோக்கத்தை தெரிவித்தவுடன் பூசாரியே விலகிக் கொண்டு வந்த புத்த அமைப்பை சார்ந்தவர்களுக்கு அனுமதி அளித்தார், இதன் எடுத்து மூலஸ்தானத்திற்கு சென்ற ராம்ஜி உள்ளிட்ட குத்த அமைப்பைச் சார்ந்தவர்கள் தலைவெட்டி முனியப்பனாக கருதப்படும் சிலையில் இருந்து அலங்காரத்தை முழுமையாக அழித்துவிட்டு அவர்கள் தியானத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்கின்ற தகவலைக் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த செவ்வாய்பேட்டை காவல் ஆய்வாளருக்கும் புத்த அமைப்பை சேர்ந்த ராம்ஜிக்கும் இடையே மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை எடுத்து காவல் துறை ஆய்வாளரும், எழுத்துப்பூர்வ கடிதத்துடன் வந்திருந்து புத்த அமைப்பைச் சார்ந்த ராம்ஜியும், சம்பந்தப்பட்ட சிறுபான்மை நலத்துறை அலுவலர்களிடம் பேசியதன் அடிப்படையில், இருதரப்பினரையே சமரசம் ஏற்பட்டு காவல் துறையினரின் வழிகாட்டுதலின்படி, 

சேலம் புத்தா டிரஸ்ட் தலைவர் ராம்ஜி அவர்கள் தலைமையில் புத்த ராஜா, மான் அம்பேத்கர், போதிதர்மன் மற்றும் சீவகன் உள்ளிட்டோர் அங்கிருந்த புத்தர் சிலைக்கு மெழுகுவர்த்தி ஏந்தியும் மலர்களை வைத்தும் சிறப்பு தியானத்தில் ஈடுபட்டதோடு புத்தம் சரணம் கச்சாமி என்ற சரண கோஷங்களை எழுப்பி வழிபட்டனர். 
 இதுகுறித்து சேலம் புத்தா டிரஸ் தலைவர் ராம்ஜி நம்மிடையே கூறுகையில், இந்தக் கோவிலில் உள்ளது தலை வெட்டி முனியப்பனா அல்லது புத்தர் சிலையா என்ற சர்ச்சைக்கு ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இது புத்தர் சிலை தான் என்று தீர்ப்பு வழங்கிய பிறகும் தற்பொழுது வரை இங்கு இந்து முறைப்படி தலை வெட்டி முனியப்பனாக இங்கு வழிபாடு நடத்தப்பட்டு வருவதாகவும், தற்பொழுது தங்களுக்கு கிடைத்துள்ள எழுத்து மூல உத்தரவின் அடிப்படையில் இந்து முறைப்படி இந்த கலாச்சாரத்தை நீக்கிவிட்டு புத்த முறைப்படி தியானம் செய்யலாம் என மாவட்ட நிர்வாகம் வழங்கிய எழுத்துப்பூர்வ உத்தரவுப்படி ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் தொடர்ந்து வழிபாடு நடத்தலாம் என்றும் தெரிவித்த ராம்ஜி இந்த கோவில் முன்புறமாக அமைக்கப்பட்டுள்ளது தலை வெட்டி முனியப்பன் கோவில் என்று தகவல் பலகையை அகற்றிவிட்டு புத்த விகார் என்று பெயர் பலகையை வைக்க வேண்டும் என்றும் நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த ஆடி மாத திருவிழாவின் போது இந்த கோவிலில் நடைபெற உள்ள திருவிழாவை இந்த கோவிலில் நடத்தக்கூடாது என்று தமிழக அரசுக்கும் தொல்லியல் துறைக்கும் கோரிக்கை விடுத்த அவர், தமிழக அரசும் தொல்லியல் துறையும் நடவடிக்கை எடுக்கும் தவறும் பட்சத்தில் சேலம் மாநகரம் உட்பட மாவட்டம் முழுவதும் உள்ளே அனைத்து புத்த மதத்தினரையும் ஒன்றிணைந்து சேலம் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என்று எச்சரிக்கை விடுத்த அவர், இனி ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்று பௌத்த மதத்தைச் சார்ந்தவர்கள் இந்த கோவிலுக்கு வரும்போது எந்த விதமான தடையும் இன்றி அவர்கள் தியானம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டும் இதற்கு தமிழக அரசும் தொல்லியல் துறையும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பயங்கரவாதம் ஒடுக்க என்ன செய்யலாம்? உளவு பாதுகாப்பு அமைப்புகளுடன் அமித்ஷா ஆலோசனை

பயங்கரவாதம் ஒடுக்க என்ன செய்யலாம்? உளவு பாதுகாப்பு அமைப்புகளுடன் அமித்ஷா ஆலோசனை


பயங்கரவாதம் ஒடுக்க என்ன செய்யலாம்? உளவு பாதுகாப்பு அமைப்புகளுடன் அமித்ஷா ஆலோசனை 

பயங்கரவாதம் முறியடிப்பு நடவடிக்கைக்கான எம்.ஏ.சி., எனப்படும் பன்முகமை மையம், மத்திய உள்துறை அமைச்சகத்தின், உளவுத் துறையின் கீழ் செயல்படுகிறது. மத்திய, மாநில அரசுகளின் புலனாய்வு தகவல்களை ஒருங்கிணைக்கும் இந்த அமைப்பு,28 இந்திய உளவு மற்றும் புலனாய்வு அமைப்புகளுக்கு தகவல்களைப் பகிர்ந்து வருகிறது. எம்.ஏ.சி., செயல்பாடுகள் குறித்து, பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் சட்ட அமலாக்க முகமைகளின் தலைவர்களுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டில்லியில் உயர்மட்ட அளவிலான ஆலோசனை நடத்தினார்.


கூட்டத்தில் பேசிய அமித்ஷா, 
பிரதமர் மோடியின் தலைமையின்கீழ் எம்.ஏ .சி.,யின் திறனை மேம்படுத்த, தொழில்நுட்பம் மற்றும் செயல்பாடுகள் சார்ந்து பெரிய அளவில் புனரமைக்கப்பட்டுள்ளது.

தேசப்பாதுகாப்பில் மத்திய அரசின் ஒட்டுமொத்த அணுகுமுறையை பின்பற்றுமாறு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பாதுகாப்பு அமைப்புகள், புலனாய்வு மற்றும் அமலாக்க அமைப்புகளின் தலைவர்களிடம்  அறிவுறுத்தினார். பயங்கரவாத கட்டமைப்புகள் மற்றும் அவர்களுக்கு உதவி செய்வோரை வேரறுப்பதில் பாதுகாப்பு அமைப்புகளிடையே நெருங்கிய ஒத்துழைப்பு தேவை என்று வலியுறுத்தினார். இதன் மூலம் தான் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிலையை தடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒட்டுமொத்த உள்நாட்டு பாதுகாப்பு நிலவரம் குறித்து பேசிய உள்துறை அமைச்சர், அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும், பன்முகமை மையத்துடனான ஈடுபாட்டை அதிகரித்து, இணைந்து செயல்படும் அமைப்பாக மாற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அனைத்து சட்ட அமலாக்க அமைப்புகள், போதைப் பொருள்  ஒழிப்பு முகமைகள், இணையப் பாதுகாப்பு, புலனாய்வு அமைப்புகள், உறுதியான மற்றும் சரியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் தேசப் பாதுகாப்பைப் பொறுத்தவரை, மத்திய அர சின் ஒருங்கிணைந்த அணு குமுறையையே, அனைத்து பாதுகாப்பு முகமைகளும் பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

சனி, 20 ஜூலை, 2024

ஈரோட்டில் பேரிடர் கால மீட்பு பணி குறித்து தீத்தன்னார்வலர்களுக்கு பயிற்சி

ஈரோட்டில் பேரிடர் கால மீட்பு பணி குறித்து தீத்தன்னார்வலர்களுக்கு பயிற்சி

ஈரோட்டில் பேரிடர் கால மீட்புப் பணிகள் குறித்து தீத்தன்னார்வலர்களுக்கு தீயணைப்புத் துறையினர் பயிற்சி அளித்தனர்.
ஈரோடு தீயணைப்பு நிலையத்தில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில், தீத்தன்னார்வலர்களுக்கு பேரிடர் காலங்களில் தீயணைப்பு துறையினரோடு இணைந்து பணியாற்றுவது குறித்தும், தீயணைப்புத் துறையின் மூலம் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் குறித்த பயிற்சி மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா தலைமையில், இன்று (20ம் தேதி) அளிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தீயணைப்பு மற்றும் மீட்டுப்பணிகள் துறையின் சார்பில் தீ விபத்து ஏற்படும் பொழுது, இயற்கை சீற்றங்கள் ஏற்படும் பொழுது தங்களை பாதுகாத்துக் கொள்வது, வெள்ளத்தில் சிக்கியவரை மீட்பது உள்ளிட்ட வழிமுறைகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், வெள்ள அபாய ஒத்திகை பயிற்சிகளும், தீத்தன்னார்வலர்களுக்கு மாதந்தோறும் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.


அதன்படி, இன்று (20ம் தேதி) ஈரோடு தீயணைப்பு நிலையத்தில் 30க்கும் மேற்பட்ட தீத்தன்னார்வலர்களுக்கு 40 நபர்களுக்கு பேரிடர் காலங்களான வெள்ளம், பெருந்தீ விபத்து, சாலை விபத்து, வனத்தீ உள்ளிட்ட சூழ்நிலை ஏற்படும் பொழுது தீயணைப்பு துறையினருடன் இணைந்து பணியாற்றுவது குறித்தும், தீயணைப்பான்களை இயக்கும் விதம், தீயணைப்பு துறையில் பயன்படுத்தப்படும் ஊர்திகள் மற்றும் அவசர கால ஊர்தி உபகரணங்கள் காட்சிபடுத்தப்பட்டு அதன் பயன்பாடுகள் மற்றும் எவ்வாறு பயன்படுத்துவது ஆகியவற்றை குறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் விளக்கமளித்து பயிற்சி வளங்கினார்.

இப்பயிற்சியில், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை அலுவலர்கள், தீத்தன்னார்வலர்கள் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தாட்கோ மற்றும் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டங்களை முழுமையாக செயல்படுத்தாத சேலம் மாவட்ட நிர்வாகத்திற்கு கண்டனம்.

தாட்கோ மற்றும் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டங்களை முழுமையாக செயல்படுத்தாத சேலம் மாவட்ட நிர்வாகத்திற்கு கண்டனம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

தாட்கோ மற்றும் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டத்தில் மகளிர் காண முழு பங்களிப்பை செயல்படுத்தாத சேலம் மாவட்ட நிர்வாகத்தை கண்டிப்பது என VCK தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு. 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சேலம் சின்ன திருப்பதி பகுதியில் நடைபெற்றது. தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாவட்டத் துணைச் செயலாளர் சரசு ராம் ரவி தலைமையில் நடைபெற்று இருந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் பலரும் முன்னிலை வகித்தனர். 
அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஆகஸ்ட் 17ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களின் பிறந்தநாள் விழாவை மாநகரம் உட்பட மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது, மத்திய அரசு கொண்டுவந்துள்ள மக்களுக்கு எதிராக உள்ள புதிய சட்ட திருத்தங்களை திரும்ப பெற வேண்டும் மற்றும் தாட்கோ, அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டத்தில் மகளிர் காண பங்களிப்பை முழுமையாக செயல்படுத்தாமல் உள்ள சேலம் மாவட்ட நிர்வாகத்தை கண்டிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்த கூட்டத்தில் மாநில துணைச் செயலாளர் பகுத்தறிவன், சந்திரசேகர், மாயாவதி, மாவட்ட நிர்வாகிகள் தமிழ் நிலவு, வணங்காமுடி மற்றும் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 19 ஜூலை, 2024

ஈரோட்டில் மகள்களை கொன்று தாய் தற்கொலை: தந்தைக்கு உருக்கக் கடிதம்,

ஈரோட்டில் மகள்களை கொன்று தாய் தற்கொலை: தந்தைக்கு உருக்கக் கடிதம்,

ஈரோடு கருங்கல்பாளையம் பச்சையம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (வயது 46). இவர் காலை நேரங்களில் காய்கறி விற்பனை செய்கிறார். மற்ற நேரங்களில் பேக்கரி, ஹோட்டல்களில் சமையல் வேலை, பேக்கரி உணவு பொருட்கள் தயார் செய்து கொடுத்தல் என பல வேலைகளையும் செய்து வந்தார்.
இவரது மனைவி ஹசீனா (வயது 39). இவர்களுக்கு ஆயிஷா பாத்திமா (வயது 16), ஜனாபாத்திமா (வயது 13) என 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் 11ம் வகுப்பும், 2வது மகள் 8ம் வகுப்பும் கருங்கல்பாளையத்தில் உள்ள மாநகராட்சி மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் படித்து வந்தனர். ஜாகீர் உசேனுக்கு கடன் பிரச்னை இருந்துள்ளது. மேலும், கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி சண்டையும் ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்த நிலையில், வழக்கம்போல நேற்று காலை ஜாகீர் உசேன் வேலைக்கு சென்றுவிட்டார். மாலையில் அவர் தனது மனைவி ஹசீனாவுக்கு போன் செய்தபோது அவர் போனை எடுக்கவில்லை. இதையடுத்து, ஜாகீர் உசேன் பக்கத்து வீட்டினருக்கு போன் செய்து தனது மனைவியிடம் போனை எடுத்து பேச சொல்லுமாறு கூறியுள்ளார்.

அவர்கள் சென்று வீட்டில் பார்த்தபோது, கட்டிலில் 2 மகள்களும், பக்கத்து அறையில் ஹசீனா தூக்கில் தொங்கிய நிலையிலும் இருந்துள்ளனர். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டினர் அதுகுறித்து ஜாகீர் உசேனுக்கும், கருங்கல்பாளையம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த கருங்கல்பாளையம் போலீசார் 3 பேரின் சடலங்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, அவர்கள் மேற்கொண்ட விசாரணையில், நேற்று காலையில் ஜாகீர் உசேன் – ஹசீனா தம்பதியினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

அதன் பின்னர், ஜாகீர் உசேன் வெளியே சென்றுவிட்டார். சண்டையால் மனமுடைந்து காணப்பட்ட ஹசீனா, 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து படுக்க வைத்துவிட்டு, பக்கத்து அறைக்கு சென்று அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

மேலும், தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர், ஹசீனா மற்றும் குழந்தைகள் ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளனர். உருது மொழியில் எழுதப்பட்டிருந்த அந்தக் கடித்ததில் 2 மகள்களும், எங்கள் தந்தையை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். அவரை மது அருந்தக்கூடாது என கூறுங்கள் என்றும், வேறு சில விவரங்களும் எழுதி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். 

தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 2 மகள்களும் விஷம் கொடுத்து விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.