புதன், 24 ஜூலை, 2024

மத்திய பட்ஜெட்: கண்துடைப்பு பட்ஜெட் முன்னாள் தென்னக ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் பாஷா

மத்திய பட்ஜெட்: கண்துடைப்பு பட்ஜெட் முன்னாள் தென்னக ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் பாஷா

மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு முக்கியதுவம் அளிக்காத வெறும் கணிதுடைப்பு பட்ஜெட் ஆக உள்ளது என்று முன்னாள் தென்னக ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் கே.என்.பாஷா தெரிவித்துள்ளார்.
முன்னாள் தென்னக ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினரும், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத்தலைவருமான கே.என்.பாஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

கோவையிலிருந்து தூத்துக்குடிக்கு லிங்க் எக்ஸ்பிரஸ் நாகர்கோயில் எக்ஸ்பிரஸில் இணைப்பு ரயிலாக லிங்க் எக்ஸ்பிரஸ் இயங்கி கொண்டு இருந்தது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த நாள்கு ஆண்டுகளாக இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில் இல்லாமல் தென் மாவட்ட பயணிகள் திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்ட மக்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். இது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை, தெற்கு ரயில்வேயில் அதிக வருமானம் ஈட்டி தருவது ஈரோடு என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு ரயில் நிலையத்தில் நான்கு பிளாட்பாரங்கள் மட்டுமே உள்ளது. நாள் ஒன்றுக்கு 150க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்வதால் போதிய இடவசதி இல்லாமல் ரயில்கள் ஜங்ஷன் தூரத்தில் நிறுத்தி காலதாமதம் ஏற்படுகிறது. ஆகவே 5வது பிளாட்பாரமும், நான்காவது பிளாட்பாரத்தில் பாசஞ்சர் ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதில் எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கி செல்ல நடவடிக்கை வரும் என்று எதிர்பார்த்தோம்.

கன்னியாகுமரி - மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி கொண்டு இருக்கிறது. இது கோவை, திருப்பூர், ஈரோடு சேலம் வழியாக இயக்கப்பட்டு வந்தது. கொரனா பெருந்தொற்று காரணமாக இந்த ரயில் புனே வரையில் இயக்கப்பட்டது. தொடர்ந்து இந்த ரயில் புனே வரை இயக்கப்படுகிறது. இந்த ரயில் மும்பை வரை நீட்டிப்பு செய்தி வரும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே?

கொரோனா பெருத்தொற்று காரணமாக காரைக்கால் - எர்ணாகுளம், கோவை - மயிலாடுதுறை ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ், கோவை - நாகர்கோவில், கடலூர் துறைமுகத்தில் இருந்து மயிலாடுதுறை வழியாக மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கொடுமுடி ரயில் நிலையத்தில் நின்று சென்றது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கொடுமுடியில் நிறுத்தாமல் தொடர்ந்து வண்டிகள் ஓடிக்கொண்டு இருக்கிறது. இது குறித்து கொடுமுடி ரயில் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டமும் செய்தோம் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை?.

கோவையிலிருந்து காலை 7.25 மணிக்கு மேல் சென்னை செல்ல மதியம் 12.00 மணிக்கு தான் சென்னை செல்ல ரயில்கள் உள்ளது. காலை 9.00 அல்லது 10.00 மணிக்கு பகல் நேர இண்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் இயங்கினால் திருப்பூர், ஈரோடு, சேலம் பயணிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும் புதிய ரயில் அறிவிப்பு இல்லாதது வருத்தத்தை அளிக்கிறது.

கோவையிலிருந்து காலை திருப்பதிக்கு இவர்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதை தினசரி ரயிலாக இயக்குனால் திருப்பதி செல்லும் பக்தர்களுக்கும், பயணிகளுக்கும் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

நாடு முழுவதும் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. நவீன பாதுகாப்பு தொழில்நுட்ப வசதியும, அவசியமாக உள்ளது. அப்படி அறிமுகப்படுத்த பட்டது தான் சுவாச் (கவசம்) தொழில் நுட்பம். இது ஒரு தானியங்கி (ரயில் பாதுகாப்பு) முறையாகும். ஓட்டுனர்களுக்கு விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் குறிப்பாக ஒரே மார்க்கத்தில் இரு ரயில்கள் வந்தால் எச்சரிக்கை செய்யும், அப்போது ஓட்டுனர் வேகத்தை குறைக்க தவறினால் இந்த கருவி தானாகவே ஆட்டோமேட்டிக் (பிரேக் அப்ளை) ரயிலின் வேகத்தை கட்டுப்படுத்தி விபத்துக் குள்ளான சாத்தியத்தை குறைக்கும் இந்த வசதி இருந்தால் ரயில் தொடர் விபத்தை தடுக்க ஏதுவாக இருக்கும் தொடர்ந்து ரயில் விபத்துக்கள் ஏற்பட்டுக்கொண்டு இருக்கிறது. ஆகவே இந்த முறையை அவசியம் பயன்படுத்தினால் விபத்துக்களை தவிர்க்க எதுவாக இருக்கும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சத்தியில் மக்களுடன் முதல்வர் குறைதீர் முகாமினை துவக்கி வைத்த ஆட்சியர்

சத்தியில் மக்களுடன் முதல்வர் குறைதீர் முகாமினை துவக்கி வைத்த ஆட்சியர்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் அரசூர் ஊராட்சி, காமாட்சி அம்மன் கோவில் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நடைபெற்ற குறைதீர் முகாமினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (24ம் தேதி) துவக்கி வைத்தார்.

பின்னர், பொதுமக்கள் அவர்களுடைய கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்யும் பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். இண்டியம்பாளையம், அரசூர், மாக்கினாம்கோம்பை, சதுமுகை ஆகிய நான்கு ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற இம்முகாமில் பல்வேறு துறைகள் சார்ந்த அலுவலர்கள் கலந்து கண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு பதிவு செய்தனர்.

இதில், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் கே.சி.பி.இளங்கோ, வடிப்பக அலுவலர் (சத்தி சுகர்ஸ்) சொரூபராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்தியமங்கலம்) அப்துல்வகாப், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அந்தியூர் குருநாதசுவாமி கோயில் ஆடித்தேர் திருவிழா கொடியேற்றம்

அந்தியூர் குருநாதசுவாமி கோயில் ஆடித்தேர் திருவிழா கொடியேற்றம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே புதுப்பாளையத்தில் புகழ்பெற்ற குருநாதசுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் நடப்பாண்டு ஆடித்தேர் திருவிழா, கடந்த 17ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து, இன்று (24ம் தேதி) காலை 11 மணிக்கு புதுப்பாளையம் மடப்பள்ளியில் இருந்து, பெருமாள் சுவாமி, காமாட்சியம்மன், குருநாதசுவாமிகளின் வெள்ளிக் கவசம் மற்றும் பூஜைப் பொருட்கள் அடங்கிய மூங்கில் பெட்டகத்தை சுமந்து வனக் கோயிலுக்கு பக்தர்கள் எடுத்துச் சென்றனர்.

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட, 60 அடி உயர மூங்கில் கம்பத்தில் கொடி கட்டி, சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர், பக்தர்கள் அனைவரும் சேர்ந்து கொடிக் கம்பத்தை நிலை நிறுத்தினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து, வரும் 31ம் தேதி முதல் வன பூஜை நடைபெற உள்ளது. இதனையடுத்து, அடுத்த மாதம் ஆகஸ்ட் 7ம் தேதி தேர்த்திருவிழாவுடன், தென்னிந்திய அளவில் பிரசித்தி பெற்ற கால்நடை சந்தை தொடங்கி, 10ம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும், இதில் பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெறும்.

தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு சார்பில், சேலம் மாவட்ட ஆட்சியரின் பார்வைக்கு அறிக்கை வெளியீடு

தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு சார்பில், சேலம் மாவட்ட ஆட்சியரின் பார்வைக்கு அறிக்கை வெளியீடு

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

அயோத்தியா பட்டணம் பஞ்சாயத்து நிர்வாகத்தின் மீது சேலம் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு சேலம் மாவட்ட ஆட்சியருக்கு வலியுறுத்தல்.
இது தொடர்பாக தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், விசிக தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணைச் செயலாளருமான சஹஸ்ராம் ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில், 
சேலம் மாவட்டம்- வலைசையூர் கிராமம்- சுந்தராசன் காலனி அருகில் நீர்நிலையோடையை ஆக்கிரமிப்பு செய்துள்ள தனியார் பள்ளிக்கு ஆதரவாக - உயர்நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படும் வாழப்பாடி  வட்டாச்சியர்- அய்யோத்தியபட்டணம் பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் வலசையூர் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் மீது சேலம்-கோட்டாச்சியர் விசாரணைக்கு அல்லது மாவட்ட வருவாய் அதிகாரி விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம் என வலியுறுத்தியுள்ளார்.



ஈரோடு மாவட்டத்தில் நாளை (25ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (25ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (25ம் தேதி) வியாழக்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆகையால், நாளை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு காசிபாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- சூரம்பட்டிவலசு, அணைக்கட்டுரோடு, சங்குநகர், சேரன்நகர், மாதவிவீதி, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, கோவலன்வீதி. காமராஜர் வீதி, நேருவீதி, கே.கே.நகர், சென்னிமலைரோடு, ரங்கம்பாளையம், இரணியன் வீதி, பெரியசடையம்பாளையம், சிவம்நகர், அண்ணாநகர், சேனாதிபதிபாளையம், இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், காசிபாளையம், சாஸ்திரிநகர், ஜீவாநகர், மூலப்பாளையம், நாடார்மேடு, கொல்லம்பாளையம், பச்சப்பாளி, செந்தில் நகர். காந்திஜி ரோடு, ஈ.வி.என்.ரோடு, முத்தம்பாளையம் வீட்டுவசதி வாரிய முதலாவது பகுதி முதல் 8-வது பகுதி வரை, அம்பிகை நகர், அன்னை நகர், நல்லியம்பாளையம், லட்சுமி கார்டன், பாலாஜி கார்டன், லட்சுமி நகர், தெற்கு பள்ளம், ஜீவானந்தம் ரோடு, தங்கபொருமாள் வீதி, ஈஸ்வரன் பிள்ளை வீதி, கள்ளுக்கடைமேடு மற்றும் பழைய ரயில் நிலைய பகுதி.

சத்தியமங்கலம் பெரியகொடிவேரி, வரதம்பாளையம், பெரும்பள்ளம், மாக்கினாம்கோம்பை துணை மின் நிலையங்கள் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- கொடிவேரி, சின்ன அட்டிபாளையம், கொமாரபாளையம், ஆலத்துகோம்பை, மலையடிப்புதூர், டி.ஜி.புதூர், கொண்டப்பநாயக்கன் பாளையம், கெம்பநாயக்கன்பாளையம், சின்ன குளம், தாசரிபாளையம், செல்லிபாளையம், கடம்பூர், குன்றி, மாக்கம்பாளையம், காடநள்ளி, அத்தியூர், வடக்குப்பேட்டை, புளியங்கோம்பை. சந்தைப்பேட்டை, மணிக்கூண்டு, கடைவீதி, பெரியகுளம், பாசக்குட்டை, வரதம்பாளையம், ஜெ.ஜெ.நகர், கோம்புபள்ளம், கொங்குநகர், அக்கரை கொடிவேரி, சிங்கிரி பாளையம் மற்றும் காசிபாளையம்.

கொடுமுடி துணை மின் நிலையம் (காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- கொடுமுடி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், ரோஜாநகர், எஸ்.என்.பி.நகர், காங்கேயம் ரோடு, எம்.ஜி.ஆர்.நகர், ஆச்சியம்மன் கோவில் பகுதி மற்றும் எமகண்டனூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 23 ஜூலை, 2024

ஆடி திருவிழாவையொட்டி சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் டன் கணக்கில் அம்மனுக்கு பூவாபிஷேகம்.... இரட்சகணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்....

ஆடி திருவிழாவையொட்டி சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் டன் கணக்கில் அம்மனுக்கு பூவாபிஷேகம்.... இரட்சகணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்....

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ
கோட்டை பெரிய  மாரியம்மன் திருக்கோவிலில் பூச்சாட்டுதல் விழா......லட்சக்கணக்கில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்...

சேலம் மாவட்டத்தில் ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் உற்சாகமாக களை கட்டுவது வழக்கம். மேலும் சேலத்தில் எட்டு பேட்டைகளையும் கட்டியாளும் அம்மனாகவும், நவகிரக நாயகியாகவும் வீற்றிருக்கும்  கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் திகழ்கிறது.  இந்நிலையில் கோட்டை மாரியம்மன் கோவிலில் இன்று இரவு பூச்சாட்டுதல் விழா வெகு விமரிசையாக  நடைபெற்றது.
விழாவையொட்டி உற்சவ மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. கிச்சிப்பாளையம் பஜனை மடம் வீதியில் சோழிய வேளாளர் அறக்கட்டளை சார்பாக  தொடங்கிய பூக்கூடை ஊர்வலத்தில் பக்தர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஊர்வலம் சன்னியாசிக்குண்டு மெயின்ரோடு, கல்லாங்குத்து மெயின்ரோடு, டவுன் போலீஸ் நிலையம் வழியாக கோட்டை மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. பின்னர் உற்சவர் மாரியம்மனுக்கு பூச்சாட்டுதல் நநடைபெற்றது.
தொடர்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் தீபாரதனையும் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த பூக்களை அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். பூச்சாட்டுதல் விழாவில், திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல், செயல் அலுவலர் அமுதசுரபி, மற்றும் அறங்காவலர்கள்  கலந்து கொண்டனர். மேலும் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர். விழாவையொட்டி கோவிலில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் பூச்சாட்டுதல் உற்சவத்தை தொடர்ந்து சேலம் குகை மாரியம்மன்-காளியம்மன் கோவில், தாதகாப்பட்டி கேட் சஞ்சீவராயன்பேட்டை மாரியம்மன், பலப்பட்டரை மாரியம்மன், சின்னக்கடை வீதி சின்னமாரியம்மன், செவ்வாய்பேட்டை மாரியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன் உள்பட 8 பேட்டை மாரியம்மன் கோவில்களிலும் பூச்சாட்டுதல் உற்சவத்துடன் ஆடிப்பண்டிகை இன்று தொடங்கியது.
கோட்டை மாரியம்மன் கோவிலில் வருகிற 5-ம் தேதி சக்தி அழைப்பும், 7,8 மற்றும் 9-ம் தேதிகளில் பொங்கல் வைத்து பக்தர்கள் உருளு கண்டம் இடும் வழிபடு நிகழ்ச்சியும், 11-ம் தேதி சத்தாபரணி நிகழ்ச்சியும், 13-ம் தேதி பால்குட விழா, உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை மற்றும் அன்னதானம் ஆகியவையும், விழாவின் நிறைவாக வரும் 16-ம் தேதி ஊஞ்சல் உற்சவம் மற்றும் விளையாடி உற்சவத்துடன் ஆடித்திருவிழா இனிதே நிறைவடைய உள்ளது நடைபெறுகிறது. மேலும் ஆடித்திருவிழாவை முன்னிட்டு மாரியம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அலங்காரம் அபிஷேகம் பூஜைகள் தீபாரதணைகள் நடைபெற இருக்கிறது.
ஈரோட்டில் இலவச கம்ப்யூட்டர் டேலி பயிற்சி: ஆகஸ்ட் 1ம் தேதி தொடக்கம்

ஈரோட்டில் இலவச கம்ப்யூட்டர் டேலி பயிற்சி: ஆகஸ்ட் 1ம் தேதி தொடக்கம்

ஈரோடு கொல்லம்பாளையம் கரூர் பைபாஸ் சாலையில் ஆஸ்ரம் மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்தில் 2ம் தளத்தில் கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்படுகிறது. இந்த பயிற்சி நிலையத்தில் பல்வேறு தொழில் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. 

அதன்படி, வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 6ம் தேதி வரை 30 நாட்களுக்கு இலவசமாக கம்ப்யூட்டர் டேலி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சியானது, காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும். பயிற்சியின் போது சீருடை, உணவு உட்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள கிராம பஞ்சாயத்துக்களைச் சேர்ந்த ஆண் , பெண் இருபாலரும் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். 18 வயதிலிருந்து 45 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் இப்பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். மேலும், வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள், நூறு நாள் வேலைத் திட்டத்தில் இருப்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.

தற்போது இதற்கான முன்பதிவு நடைபெறுகிறது. இதுபற்றிய விவரங்களுக்கு, 0424-2400338, 8778323213, 7200650604 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என கனரா வங்கி பயிற்சி நிலையத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.