சனி, 27 ஜூலை, 2024

SDCBA பொன் விழாவில் கலந்து கொள்ள உச்ச நீதிமன்ற நீதி அரசருக்கு சிறப்பு அழைப்பு

SDCBA பொன் விழாவில் கலந்து கொள்ள உச்ச நீதிமன்ற நீதி அரசருக்கு சிறப்பு அழைப்பு

சேலம்.
S.K சுரேஷ்பாபு.

SDCBA பொன் விழாவில் கலந்து கொள்ள உச்ச நீதிமன்ற நீதி அரசருக்கு டெல்லியில் நேரில் அழைப்பு.

சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க பொன் விழாவில் கலந்து கொள்ள வேண்டி மகாகனம் பொருந்திய உச்ச நீதிமன்ற நீதியரசர் .M.M.S அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து அழைப்பு விடுத்தார் சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ஜெ.மு. இமயவரம்பன். 
உடன் சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர். 
பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு: ஈரோட்டில் மத்திய அரசைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு: ஈரோட்டில் மத்திய அரசைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து இன்று (27ம் தேதி) தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று காலை ஈரோடு தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட திமுக சார்பில், ஈரோடு காளை மாட்டு சிலை, ஓட்டல் சிம்னி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் தலைமை தாங்கினார்.


ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம், அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம், மாநில நெசவாளர் அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், திமுக விவசாய அணி இணைச் செயலாளர் கள்ளிப்பட்டி மணி, தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் செந்தில்குமார், மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், ஈரோடு மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்கள். இதில், மத்திய பட்ஜெட்டில் திமுக புறக்கணிக்கப்பட்டத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுக நிர்வாகிகள் கோஷங்கள் எழுப்பினர்.


ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் எம்பிக்கள் கந்தசாமி, என்.ஆர்.கோவிந்தராஜ், முன்னாள் மேயர் குமார் முருகேஷ், தெற்கு மாவட்ட பொருளாளர் பி.கே.பழனிசாமி, மாநில மாணவரணி இணைச் செயலாளர் வீரமணி, தெற்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் திருநாவுக்கரசு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம், ஈரோடு மாநகர் பகுதி செயலாளர்கள் அக்னி சந்துரு, ராமச்சந்திரன், வில்லரசம்பட்டி முருகேஷ், கோபி நகர மன்ற தலைவர் என்.ஆர்.நாகராஜ், பவானி நகர மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன், சத்தியமங்கலம் நகராட்சி தலைவர் ஜானகி ராமசாமி மற்றும் நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம், கொள்கைப் பரப்பு செயலாளர் சந்திரகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் குமாரசாமி உள்பட 2000 பேர் கலந்து கொண்டனர். 
ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல், பதுக்கல்: பொதுமக்கள் புகார் அளிக்கலாம்

ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல், பதுக்கல்: பொதுமக்கள் புகார் அளிக்கலாம்

ஈரோடு குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் அலுவலக செய்திக்குறிப்பு:-

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல்துறை தலைவர் ஜோசி நிர்மல்குமார் உத்தரவின் படியும், கோவை மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகரன் அறிவுறுத்தலின் படியும், ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான புகார் மற்றும் தகவலை தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறைக்கு 18005995950 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

புகார் மற்றும் தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். இந்த தகவல் குறித்து ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையினர், பொதுமக்கள் அதிக கூடும் இடங்களான ரயில் நிலையம், பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் சுவரொட்டிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
95 ஆவது ஆண்டு விளையாட்டு விழா. நடைபெற்ற போட்டிகளிலும் கலை நிகழ்ச்சிகளிலும் பள்ளி மாணவர்கள் அசத்தல்.

95 ஆவது ஆண்டு விளையாட்டு விழா. நடைபெற்ற போட்டிகளிலும் கலை நிகழ்ச்சிகளிலும் பள்ளி மாணவர்கள் அசத்தல்.

 
சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி 95வது விளையாட்டு விழா. அனைத்து போட்டிகளிலும் கலை நிகழ்ச்சிகளிலும் பள்ளி மாணவர்கள் அசத்தல். 

சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் 95வது விளையாட்டு விழாவானது   பள்ளியின் விளையாட்டு திடலில் இனிதே நடைபெற்றது. சேலம் மறை மாவட்ட ஆயர் மற்றும் நிர்வாகி   மேதகு முனைவர் அருள் செல்வம் ராயப்பன்  அவர்கள்  தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் விளையாட்டு அணிகளை பார்வையிட்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு  தேசிய  கொடியேற்றி  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  பரிசுகளும் பதக்கங்களும் அணிவித்து சிறப்பித்தார். சேலம் மறை  மாவட்ட முதன்மை குரு மைக்கேல்ராஜ் செல்வம், சேலம் மறை மாவட்ட பொருளாளர் ஜேக்கப் அவர்களும்  மேனாள் தலைமை ஆசிரியர்  அருளப்பன் அவர்களும்  தாளாளர்  அருட்திரு ஜோசப் லாசர்  அவர்கள் முன்னிலையிலும்  பள்ளிக்கொடி  ஒலிம்பிக் கொடி  குழு வண்ணக் கொடிகளை  ஏற்றி வைத்து மாணவர்களுக்கு  பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்சிறுமலை மேல்நிலைப்பள்ளி 95வது விளையாட்டு விழா 
 சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் 95வது விளையாட்டு விழாவானது பள்ளியின் விளையாட்டு திடலில் நடைபெற்ற. சேலம் மறை மாவட்ட ஆயர் மற்றும் நிர்வாகி மேதகு முனைவர் அருள்செல்வம் ராயப்பன் அவர்கள்  தலைமையில்  நடைபெற்றது. வழியில் விளையாட்டு அணிகளை பார்வையிட்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு தேசிய  கொடியேற்றி  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  பரிசுகளும் பதக்கங்களும் அணிவித்து சிறப்பித்தார்.
சேலம் மறை  மாவட்ட முதன்மை குரு மைக்கேல்ராஜ் செல்வம், சேலம் மறை மாவட்ட பொருளாளர் ஜேக்கப், மேனாள் தலைமை ஆசிரியர் அருளப்பன் மற்றும் தாளாளர் அருட்திரு ஜோசப் லாசர் ஆகியோரது முன்னிலையிலும்  பள்ளிக்கொடி, ஒலிம்பிக் கொடி மற்றும்  குழு வண்ணக் கொடிகளை  ஏற்றி வைத்து மாணவர்களுக்கு  பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்.  இவ்விழாவில்  பள்ளியின் தலைமை ஆசிரியர்  அருட்பணி எஸ் செபஸ்தியான்  அவர்கள்  தலைமை விருந்தினரையும்  முன்னிலை விருந்தினர்களையும்  சிறப்பு விருந்தினர்கள் அனைவரையும்  பெற்றோர் ஆசிரியர் மாணவர்கள் அனைவரையும்  வரவேற்று பேசினார். மேனாள்  மாணவர்கள்  செல்வ மாளிகை எம் செல்வகுமார் அவர்களும்  நெடுஞ்சாலைத்துறை ஆர் ஐ எம் சரவணன் அவர்களும்  முதுநிலை வருவாய் ஆய்வாளர்  திரு வி அர்த்தனாரி அவர்களும்  காவல் உதவி ஆய்வாளர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு மற்றும் தேசிய தடகள வீரர் சி  ஏ கேசவன் கணக்காளர் சேலம் கருவூலம்  தேசிய தடகள  வீரர் எஸ் கார்த்திக் அவர்களும்  கமலம் ஸ்டீல் எம் ஸ்ரீதரன், எம் ராமமூர்த்தி கமலம் ஸ்டீல்  அவர்களும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பதக்கங்கள் அணிவித்து சிறப்பித்தனர். தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு பழக்கங்கள் அணிவித்து  பரிசுகள் வழங்கியும்  சிறப்பித்தனர்.  
ஒட்டுமொத்த சாம்பியன் பற்ற அணிக்கு  வெற்றி கோப்பை  கமல் சேல் ஸ்ரீதர், ராமமூர்த்தி, மேனாள் மாணவர்கள் எம் சரவணன்,  அர்த்தநாரி,  கார்த்திக் ஆகியோர் வழங்கி சிறப்பித்தனர். விழா சிறப்பாக நடைபெற  அருட்பணி உதவி தலைமை ஆசிரியர்  எம் கிறிஸ்துராஜா  மேற்பார்வையிலும்  உடற்கல்வி துறையும்  ஆசிரியர்களும்  சிறப்பாக செய்திருந்தனர்   விழாவின் முடிவில் பள்ளியின் உடற்கல்வி இயக்குனர்  நல்லாசியர்  டாக்டர்  ராபர்ட் அனைவருக்கும் நன்றி  தெரிவித்தார்.   விழாவினை உடற்கல்வி ஆசிரியர்கள்  சுவாமிநாதன்  அல்போன்ஸ்  மற்றும் அந்தோணி ராஜ்  பள்ளியின்  ஆசிரியர்கள்   சிறப்பாக செய்து இருந்தனர்.