செவ்வாய், 30 ஜூலை, 2024

சேலம் வீரபாண்டி பத்தர பதிவுத்துறை அலுவலகத்தில் நில மோசடி செய்ததை ரத்து செய்ய கோரி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் .... மோசடி செய்த அதிகாரிகள் மீது தமிழக அரசு உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தல்.

சேலம் வீரபாண்டி பத்தர பதிவுத்துறை அலுவலகத்தில் நில மோசடி செய்ததை ரத்து செய்ய கோரி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் .... மோசடி செய்த அதிகாரிகள் மீது தமிழக அரசு உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தல்.


சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் வீரபாண்டி பத்தர பதிவுத்துறை அலுவலகத்தில் நில மோசடி செய்ததை ரத்து செய்ய கோரி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் .... மோசடி செய்த அதிகாரிகள் மீது தமிழக அரசு உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தல்.

சேலம் மாவட்டம் பைரோஜி ஊராட்சி நல்லராயன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னாகாள் என்பவருக்கு சொந்தமான 1.11 சென்ட் நிலத்தை சட்டத்திற்கு புறம்பாக போலி கிரயம் செய்து விவசாயி ஏமாற்றியுள்ளனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து வீரபாண்டி பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் நடைபெறும் நில மோசடி செய்ததை ரத்து செய்ய வலியுறுத்தியும் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ் பழனி முருகன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சங்கத்தின் மாநில தலைவர் வேலுசாமி பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
விவசாயிகளின் போராட்டத்தை அறிந்த பத்திரப்பதிவுத்துறை பாதிக்கப்பட்ட விவசாயி சின்னாக்காள் அவர்களின் நிலத்தை மீண்டும் அவரது பெயருக்கே மாற்றி தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகளின் போராட்டத்தை தொடர்ந்து அரசு நிர்வாகம் உரிய தலையீடு செய்து இருந்தாலும் இன்னும் பல விவசாயிகளை ஏமாற்றி போலியாக பத்திரப்பதிவு நடைபெற்று வருவதாகவும் விவசாயிகளை ஏமாற்றும் அதிகாரிகள் மீது அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

திங்கள், 29 ஜூலை, 2024

பவானி அருகே காவிரி ஆற்றின் நடுவே சிக்கிய மனநலம் பாதித்தவர்: தீயணைப்பு குழுவினர் மீட்பு

பவானி அருகே காவிரி ஆற்றின் நடுவே சிக்கிய மனநலம் பாதித்தவர்: தீயணைப்பு குழுவினர் மீட்பு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (35). இவர், பெற்றோரை இழந்த நிலையில், சற்று மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றி திரிந்து வந்தார். நேற்று பவானி புதிய பேருந்து நிலையம் அருகே காவிரி நீரேற்று நிலையம் பின்புறம் காவிரி ஆற்றின் நடுவில் உள்ள பாறையில் படுத்திருந்தார்.
இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்தால், ஆற்றில் நடுவே இருந்த பாறையை வெள்ளம் சூழ்ந்தது. இதனால், வெளியேற முடியாமல் பெருமாள் விடிய, விடிய தவித்து வந்தார்.

இதனையடுத்து, காவிரி ஆற்றின் நடுவே பாறையில் ஒருவர் தவித்து வருவதாக பவானி தீயணைப்பு நிலையத்திற்கு பொதுமக்கள் இன்று தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, பவானி தீயணைப்பு நிலைய அலுவலர் ஆர்.முருகேசன் (பொ) தலைமையில் சென்ற தீயணைப்பு வீரர்கள் பரிசலில் பாறை இருந்த பகுதிக்கு சென்றனர்.

பின்னர், அங்கு தவித்துக் கொண்டிருந்த பெருமாளை தீயணைப்பு வீரர்கள் பரிசல் மூலம் ஏற்றிக்கொண்டு கரைக்கு மீட்டு வந்தனர். பசியால் தவித்த பெருமாளுக்கு உணவளித்த தீயணைப்பு படையினர் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் சத்துணவு சாப்பிடும் 86,313 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடை

ஈரோடு மாவட்டத்தில் சத்துணவு சாப்பிடும் 86,313 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீருடை

ஈரோடு குமலன்குட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், 2ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் சத்துணவு சாப்பிடும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா இணைச் சீருடைகள் (2 ஜோடி) வழங்கும் நிகழ்ச்சி இன்று (29ம் தேதி) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் வகித்தார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா இணைச் சீருடைகளை வழங்கினார்.

பின்னர், இந்நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, ஈரோடு மாவட்டத்தில் 2ம் வகுப்பு முதல் 8ம் ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா இணைச் சீருடைகள் வழங்கும் பணி துவக்கி வைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் வழங்கப்படுகிறது.

அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில், 2ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் 43,231 மாணவர்களும், 43,082 மாணவியர்களும் என மொத்தம் 86,313 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா இணைச் சீருடைகள் வழங்கப்படுகிறது. இதன் மதிப்பீடு ரூ.5.91 கோடி ஆகும்.

அதன்படி, குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 2ம் வகுப்பு முதல் 8ம் ஆம் வகுப்பு வரை பயிலும் 142 மாணவர்கள் மற்றும் 118 மாணவியர்கள் என மொத்தம் 260 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா இணைச் சீருடைகள் வங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து இடங்களிலும், தரமான சீருடைகளை வழங்க உத்தரவிட்டுள்ளார். அதன் படி, சீருடைகள் தரமானதாக தயாரிக்கப்பட்டு, மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் ஈரோடு மாவட்டத்திற்கென பல்வேறு திட்டங்களை வழங்கியுள்ளார்கள். அப்பணிகளையும் துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், வருகின்ற ஆகஸ்ட் 2ம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இந்நிகழ்ச்சியானது, பொதுமக்களுக்கு பயனடையதாகவும், அவர்களிடம் பல்வேறு திட்டங்களை கொண்டு சேர்க்கும் வகையிலும் அமையவுள்ளது.

குறிப்பாக விளையாட்டு துறைச் சார்ந்து, பல்வேறு திட்டங்கள் வழங்கப்படவுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த அனைத்து திட்டங்களையும் விரைந்து முடித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் சண்முகவடிவு, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) பெல்ராஜ் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் காரை அகற்றாமல் அவசர கதியில் போடப்பட்ட தார் சாலை

ஈரோட்டில் காரை அகற்றாமல் அவசர கதியில் போடப்பட்ட தார் சாலை

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கிருஷ்ணம்பாளையம் ஜீவா நகரில் கடந்த (26ம் தேதி) வெள்ளிக்கிழமை புதிதாக தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.
அப்போது, அங்குள்ள வீட்டின் முன்பு சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த காரை அகற்றாமல் அவசர கதியில் சாலை அமைத்துள்ளதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ஈரோடு மாநகராட்சி சார்பில் தார் சாலை அமைக்கும் பணி தொடர்பாக முன்கூட்டியே தகவல் தெரிவித்துவிட்டு வாகனங்களை அகற்றிய பின்னர் சாலை அமைக்க வேண்டும்.

ஆனால், பெரும்பாலான ஒப்பந்ததாரர்கள் உரிய தகவல்களைத் தெரிவிக்காமல் இரவு நேரங்களில் வந்து அவசர கதியில் தார் சாலை அமைத்துச் செல்கின்றனர். எனவே, காரை அகற்றாமல் சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என்றனர்.

ஞாயிறு, 28 ஜூலை, 2024

பவானிசாகர் அணை நீர்மட்டம் 90 அடியை நெருங்குகிறது: நீர்வரத்து 4,706 கன அடியாக சரிவு

பவானிசாகர் அணை நீர்மட்டம் 90 அடியை நெருங்குகிறது: நீர்வரத்து 4,706 கன அடியாக சரிவு

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணை ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக விளங்குகிறது. இந்த அணையின் நீர்த்தேக்க பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
கடந்த ஒரு வாரமாக நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் மழை இல்லாததால், அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்துள்ளது. 

நேற்று (28ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 6,483 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (29ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி 4,706 கன அடியாக சரிந்தது. அணையின் நீர்மட்டம் நேற்று காலை 88.86 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 89.44 அடியாக உயர்ந்தது. 

அதேபோல், அணையில் நீர் இருப்பு 20.85 டிஎம்சியிலிருந்து 21.22 டிஎம்சியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,300 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 1,305 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. 
117 அடியை நெருங்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்

117 அடியை நெருங்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்

கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தின் சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்து, அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று (28ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 81 ஆயிரத்து 676 கன அடியாக இருந்த நிலையில், இன்று (29ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சத்து 53 ஆயிரத்து 91 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

அதேசமயம், அணையின் நீர்மட்டம் நேற்று காலை 112.27 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 116.36 அடியாக உயர்ந்து, 117 அடியை நெருங்கி வருகிறது. அதேபோல், நீர்இருப்பு 87.78 டிஎம்சியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து, இதேநிலை, நீடித்தால் இன்று மதியத்துக்கு மேட்டூர் அணை நீர்மட்டம் தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.