வெள்ளி, 26 ஜூலை, 2024

கால்நடை மருத்துவ ஆம்புலன்சில் பணி: ஈரோட்டில் நாளை (27ம் தேதி) நேர்காணல்

கால்நடை மருத்துவ ஆம்புலன்சில் பணி: ஈரோட்டில் நாளை (27ம் தேதி) நேர்காணல்

இதுதொடர்பாக 108 ஆம்புலன்ஸ் ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவின் தெரிவித்துள்ளதாவது:- 

தமிழ்நாடு அரசின் 1962 இலவச கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸ் திட்டம், அவசர சிகிச்சை தேவைப்படும் கால்நடைகளின் உயிரை காக்கும் நோக்கத்தோடு 2016ல் அறிமுகப்படுத்தப்பட்டது.

கால்நடை மருத்துவமனை வசதி இல்லாத கிராமங்களிலும் கூட, 1962 எனும் இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால், மருத்துவ வசதி தேவைப்படும் இடத்திற்கே கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸ் வாகனம் அனுப்பி வைக்கப்படும்.

இந்த கால்நடை ஆம்புலன்ஸ் சேவைக்கான டிரைவர் மற்றும் உதவியாளர் பணிக்கான நேர்முக தேர்வு நாளை (27ம் தேதி) சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள, 108 ஆம்புலன்ஸ் சேவை அலுவலகத்தில் நடக்கிறது.

டிரைவருக்கான தகுதிகள், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது, 24 முதல், 35க்கு மிகாமல் இருக்க வேண்டும். உயரம், 162.5 செ.மீ., ஓட்டுநர் உரிமம் பெற்று, 3 ஆண்டுகளும் பேட்ஜ் எடுத்து ஒரு ஆண்டும் நிறைவு பெற்றிருக்க வேண்டும். இதற்கான சம்பளம் ரூ.12,000 ஆகும்.

ஆம்புலன்ஸ் உதவியாளர் பணிக்கான தகுதிகள், 12ம் வகுப்பு தேர்ச்சி, வயது, 19 முதல், 30க்கு மிகாமல் இருக்க வேண்டும். இப்பணிக்கான சம்பளம் ரூ.1,3000 ஆகும். நேர்முக தேர்வுக்கு வரும் அனைவரும், அசல் சான்றிதழை மற்றும் ஓட்டுநர் உரிமம் அவசியம் எடுத்து வரவேண்டும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வியாழன், 25 ஜூலை, 2024

கோபி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்

கோபி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அக்கரை கொடிவேரி ஊராட்சி காமராஜபுரம் பகுதியில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்கள் பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த மயானத்தை அப்பகுதியை சேர்ந்த தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளார். மேலும், இறந்தவர்களின் உடல்களை புதைக்க அனுமதிக்காமல் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தும் வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த மயானத்தை ஆக்கிரமித்துள்ள தனிநபர் தனது குடும்பத்தினருடன் இணைந்து மயானம் முழுவதையும், இயந்திரங்களின் உதவியோடு தரைமட்டமாக்கி இடித்து அங்கிருத்த சமாதிகளை சேதப்படுத்தியுள்ளனர்.

இதனால், ஆத்திரமடைந்த காமராஜபுரம் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தும் மயானத்தை சேதப்படுத்தியவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறி கோபி கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் தங்களின் மயானத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றி கம்பி வேலி அமைத்து பாதுகாப்பாக பயன்படுத்திட வேண்டும். வருவாய்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை மனுவை கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் பெரியசாமியிடம் வழங்கினர். பின்னர், தொடர்ந்து அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோட்டில் மின்சார கட்டண உயர்வைக் கண்டித்து தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் மின்சார கட்டண உயர்வைக் கண்டித்து தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்

திமுக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும் உயர்த்திய மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், ரேஷன் கடைகளில் பாமாயில், பருப்பு வகைகளை வழங்காததை கண்டித்தும் ஈரோடு மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் இன்று (25ம் தேதி) காலை சூரம்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் ஆனந்த் தலைமை தாங்கினார். சுரேஷ் வரவேற்றார். இதில் மாநில மகளிர் அணி துணை செயலாளர் வனிதா துரை கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

ஈரோடு ஒன்றிய செயலாளர் சரவணக்குமார், கருங்கல்பாளையம் பகுதி செயலாளர் சுசி ஆறுமுகம் மற்றும் பகுதி செயலாளர்கள், மாவட்ட துணை செயலாளர் தாமரை செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் ஆனந்தன், தமிழ்ச்செல்வன் மற்றும் மகளிர் அணி, தொண்டர் அணி, வர்த்தகர் அணி, மாணவர் அணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மெய்யழகன் நன்றி கூறினார்.
கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு பணி 70 சதவீதம் முடிவு: அமைச்சர் முத்துசாமி

கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு பணி 70 சதவீதம் முடிவு: அமைச்சர் முத்துசாமி


கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு பணி 70 சதவீதம் முடிவு: அமைச்சர் முத்துசாமி
கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு பணிகள் ஏறத்தாழ 70 சதவீதம் முடிவடைந்துள்ளது என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் பெருந்துறை ஆகிய பகுதிகளில் கீழ்பவானி திட்ட பிரதான கால்வாய்களில் விரிவாக்குதல், புதுப்பித்தல் மற்றும் நவீன மயமாக்குதல் திட்டத்தின் மூலம் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி இன்று (25ம் தேதி) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, கீழ்பவானி திட்ட பிரதான வாய்க்கால்களான சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் சாலை எரங்காட்டூர் பாலம், பெருந்துறை - பவானி தேசிய நெடுஞ்சாலை திருவாச்சியில் மழைநீர் வடிகால் பாலம் மைல் 3/4 மற்றும் 4/1, வாவிக்கடை பகுதியில் மழைநீர் வடிகால் பாலம் மைல் 58/7, வாய்கால்மேடு நந்தா கல்லூரி அருகில் மழைநீர் வடிகால் பாலம் மைல் 61/4 ஆகிய பகுதிகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை அமைச்சர் முத்துசாமி, ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர், அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, ஈரோடு மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவின்படி, கீழ்பவானி திட்ட பிரதான கால்வாயில் விரிவாக்குதல், புதுப்பித்தல் மற்றும் நவீன மயமாக்குதல் திட்டத்தின் மூலம் பவானிசாகர் முதல் முத்தூர் வரை கால்வாய் (0/0 முதல் 124/2 மைல் வரை) சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதில் மதகுகள் 17 இடங்களிலும், மழைநீர் வடிகால் பாலங்கள் 15 இடங்களிலும் மற்றும் பாதுகாப்பு சுவர் 12 கி.மீட்டர் 40 இடங்களிலும் என 84 இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்ட ஆட்சியர் தொடர்புடைய துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, அப்பணிகளை கண்காணித்து வருகிறார். அந்த வகையில் இன்று (25ம் தேதி) ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஏறத்தாழ 70 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளுக்கு எவ்வித இடையூறும் இன்றி இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், நீதிமன்ற உத்தரவினை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் நோக்கத்துடன் நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தார். தொடர்ந்து, பூசாரிபாளையம் ஊராட்சியில் உள்ள நடைபாலத்தை அகலப்படுத்தி தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்ததையடுத்து பாலத்தினை நேரில் சென்று, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, தலைமை பொறியாளர் (நீர்வள ஆதாரத்துறை கோவை மண்டலம்) முருகேசன், கண்காணிப்பு பொறியாளர் (பவானி வடிநில வட்டம்) மாரிமுத்து, செயற்பொறியாளர்கள் அருளழகன் (பவானிசாகர் அணை கோட்டம்), திருமூர்த்தி (கீழ்பவானி வடிநில கோட்டம்) உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


உலகத்திற்கே அன்னம் அளித்து நலிவடைந்த விவசாயிகளின் குடும்பத்தாருக்கு அறுசுவை விருந்து படைத்து அழகு பார்த்த காமெடி நடிகர் பெஞ்சமின்.

உலகத்திற்கே அன்னம் அளித்து நலிவடைந்த விவசாயிகளின் குடும்பத்தாருக்கு அறுசுவை விருந்து படைத்து அழகு பார்த்த காமெடி நடிகர் பெஞ்சமின்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு...

விவசாயம் காப்போம் என்ற தலைப்பில் திரைப்பட நகைச்சுவை நடிகர் திருப்பாச்சி பெஞ்சமின் 50க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு தலைவாழை இலையில் அறுசுவை விருந்து அளித்து அசத்தல். 

இந்திய திருநாட்டின் முதுகெலும்பாகத் திகழ்ந்துவரும் விவசாய தொழிலில் இன்றைய நிலை எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதனை தவிர்க்க மத்திய மாநில அரசுகள் எத்தனை புதிய நல்ல திட்டங்களை கொண்டு வந்தாலும் அது கடைக்கோடி விவசாயிகள் வரை சென்று சேர்வதில்லை என்பது நிதர்சனமான உண்மை. 
இது ஒரு புறம் இருக்க, திரைப்பட நகைச்சுவை நடிகர் திருப்பாச்சி பெஞ்சமின் அவர்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஏழை எளியவர்களுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் எண்ணற்ற பல உதவிகளை தனது சொந்த செலவில் செய்து வருகின்றார். அந்த வகையில் திரைப்பட நகைச்சுவை நடிகர் பெஞ்சமின் அவர்களின் நெருங்கிய நண்பர் நவீன் என்பவரது பிறந்தநாளை சிறப்பாகவும் அதே சமயத்தில் வித்தியாசமாகவும் கொண்டாடும் விதமாக, சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள நத்தக்காடு பகுதியைச் சேர்ந்த தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகி தங்கராஜ் அவர்களை நகைச்சுவை நடிகரும் பிறந்தநாள் கொண்டாடும் நபருமான இருவரும் அணுகியுள்ளனர். 
இதற்கு விவசாயி தங்கராஜ் அவர்களின் ஏற்பாட்டின் பேரில் சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள நத்தக்காடு பகுதியில் நத்தக்காடு மற்றும் புத்தூர் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளை சேர்ந்து விவசாயிகளுக்கு விவசாயம் காப்போம் என்று தலைப்பில், தலைவாழை இலை போட்டு அறுசுவை விருந்து நகைச்சுவை நடிகரின் நண்பர் பிறந்தநாள் விருந்தாக அழிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட விவசாயிகள் அனைவரும் விவசாயம் போயிட்டு வரும் தற்போதைய காலகட்டத்தில் தங்களை போன்ற பாதிக்கப்பட்ட விவசாயிகளை ஒன்று திரட்டி ஒரே இடத்தில் அமர வைத்து தலை வாழை இலையில் அறுசுவை விருந்து அளித்த நல்ல உள்ளங்களுக்கு தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
பாமக நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் பிறந்தநாளை பசுமை தாயக நாளாக கொண்டாடிய சேலம் பாமகவினர்.

பாமக நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் பிறந்தநாளை பசுமை தாயக நாளாக கொண்டாடிய சேலம் பாமகவினர்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

மருத்துவர் அய்யா அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் பசுமை தாயக  நாள் நிகழ்ச்சிகள் கொண்டாடியே சேலம் பாமகவினர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ். இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழுக்காகவும் தமிழக மக்களின் உணர்வுகளுக்காகவும் அதுமட்டுமல்லாமல், வன்னியர் சமுதாய மக்களின் எழுச்சிக்காகவும் பல்வேறு போராட்டங்களை நடத்தி தற்பொழுதும் அனைத்துக் கட்சியினராலும் மருத்துவர் ஐயா என்று போற்றப்படும் Dr
 ராமதாஸ் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக சேலம் மாநகர் மாவட்ட பாமக சார்பில், அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி கோயிலில் சிறப்பு அபிஷேகம் அர்ச்சனை செய்யப்பட்டது.  பின்பு பாரதி அறக்கட்டளை மூலம் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து சேலம் நான்கு ரோடு பகுதியில் பெரம்பலூர் பாமக கொடி ஏற்றி பள்ளி குழந்தைகளுக்கு பேக் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது. அழகாபுரம் மிட்டா புதூர் அன்னை தெரசா ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது.  சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியில் 86 இடங்களில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. சேலம் தெற்கு தொகுதி 60-வது டிவிசன் சார்பாக கொடியேற்றம் நிகழ்ச்சி மரக்கன்று நடும் நிகழ்ச்சி. அன்னதானப் பட்டியில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பள்ளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்க நிகழ்ச்சி. தாதம்பட்டி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற மருத்துவர் ஐயா அவர்கள் பிறந்த நாள் நிகழ்ச்சிக்காக நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன் கோவில் சிறப்பு பூஜை, அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது சேலம் அருள்மிகு ஸ்ரீ சுகவனேஸ்வரர் கோவிலில் தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அழகாபுரத்தில் உள்ள லோட்டஸ் ஆதரவற்றோர்  இல்லத்தில் இரவு உணவு வழங்கப்பட்டது.மாநகர மாவட்ட பாட்டாளி மக்கள் சார்பாக 150-க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சி மரக்கன்று நடும் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சேலம் மாநகர் மாவட்ட பாமக செயலாளருமான  இரா. அருள் எம்.எல்.ஏ, மாநகர மாவட்ட செயலாளர் கதிர்.ராஜரத்தினம் மாவட்டத்தினம்,  தலைவர், மாவட்ட அமைப்புச் செயலாளர் வக்கீல் குமார், ராஜமாணிக்கம் மாவட்ட துணைச் செயலாளர், சின்னசாமி,அண்ணாமலை, சத்ரிய சண்முகம்,கார்த்தி ஈஸ்வரன்,சமயவேல் பகுதி செயலாளர்கள், சுந்தர்ராஜன் தொழிற்சங்க செயலாளர்,சங்கர்,பாட்டாளி சுப்பிரமணி,மணி, பூபதி ரஞ்சித்,மாவட்ட இளைஞர் அணி செயலாளர் விஜயகுமார், இளவரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக அரசு அதிரடியாக உயர்த்திய மின் கட்டணத்தை கண்டித்து சேலத்தில் தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்..

தமிழக அரசு அதிரடியாக உயர்த்திய மின் கட்டணத்தை கண்டித்து சேலத்தில் தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்..

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

மின் கட்டணத்தை உயர்த்தி வாக்காளரிடம் அளித்த பணத்தை திரும்ப பெற்றுக் கொண்டுள்ளது திமுக அரசு என மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பாலமுருகன் கண்டனம்.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சேலம் மாநகர் மாவட்டம் சார்பில் கழக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும் உயர்த்திய மின் கட்டணத்தை தமிழக அரசு திரும்ப பெற வேண்டிய ரேஷன் கடைகளில் பாமாயில் பருப்பு வகைகள் வழங்காத தமிழக அரசை கண்டித்தும் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழக்க காரணமாக இருக்கும் காவிரி நீரை திறக்க மறுக்கும் கர்நாடக இசை கண்டித்தும் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை பெற்று தராத மத்திய மாநில அரசை கண்டித்தும் சேலம் கோட்டை மைதான பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மாநகர மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் செவ்வாப்பேட்டை பகுதி கழக செயலாளர் தக்காளி ஆறுமுகம் வரவேற்புரை நிகழ்த்தினார் மாணவர் மாவட்ட கழக அவை தலைவர் செல்வகுமார் மாவட்ட கழக துணைச் செயலாளர் சீனிவாசன் ராஜு சுகுமார் பேபி வெங்கடாசலம் செயற்குழு உறுப்பினர் முரளிதரன் செல்வராஜ் ஆரோக்கியசாமி பொதுக்குழு உறுப்பினர் நீலமேகம் நாராயணன் ஏழுமலை சந்தானம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் பாலமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திமுக அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர் தொடர்ந்து இளைஞர் அணி துணைச் செயலாளர் பாலமுருகன் கண்டன உரையில் பேசியது தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் மூன்று முறை மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது ஏற்கனவே பஸ் கட்டணம் பால் விலை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்திய திமுக அரசு தற்போது மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தி தமிழக மக்களை வஞ்சித்து வருகின்றனர் இந்தியா கூட்டணி ஒற்றுமையாக இருப்போம் என கூறிய தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு இதுவரை எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை மாறாக மக்களின் சுமையை ஏற்றுவதற்காகவே தற்போது மூன்றாவது முறையாக மின் கட்டத்தை உயர்த்தி உள்ளது. கண்டனத்துக்குரியது என்றும் தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் அளிக்கும் திமுக அரசு இந்த மின்கட்டணம் உயர்வினால் மக்களுக்கு கொடுத்த தேர்தல் பணத்தை பெற்றுக் கொண்டது என்றும் தெரிவித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மின் கட்டண உயர்வு தெரியாது காரணம் தமிழகத்தை அதிகாரிகள் தான் ஆட்சி செய்து வருகின்றனர் எனவே பல்வேறு அரசியல் கட்சியினர் மின் கட்டண உயர்வை கண்டித்து கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர் இதன் பிறகாவது தமிழக முதல்வர் ஸ்டாலின் மின் கட்டணம் உயர்வை திரும்ப பெற வேண்டும் இல்லை என்றால் மீண்டும் தேமுதிக சார்பில் மாநிலம் தழுவிய மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தப்படும் என தெரிவித்தார் இந்த ஆர்ப்பாட்டத்தில் பகுதி செயலாளர் சூரமங்கலம் காத்தவராயன் அஸ்தம்பட்டி ராஜா அம்மாபேட்டை செல்வகுமார் கிச்சிபாளையம் எம்பி விஜய் குகை பகுதி சேகர் கொண்டலாம்பட்டி செந்தில்குமார் மேற்கு ஒன்றியம் அப்பாவும் ஓமலூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் செல்வநேசன் கன்னங்குறிச்சி பேரூர் கழக செயலாளர் கார்த்தி வேல் கேப்டன் என்ற செயலாளர் பன்னீர்செல்வம் இளைஞர் அணி திருஞானம் மகளிர் அணி பிரபாவதி உள்ளிட்ட பகுதி கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.